7 நாளில் உங்க உடல் எடையை டக்குனு குறைக்க இந்த உணவுமுறையை ஃபாலோ பண்ணா போதுமாம் தெரியுமா?

எடை இழப்பு பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளில் சர்க்கரை இனிப்பு பானங்கள், கேக்குகள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவை அடங்கும்.

இன்றைய பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் பருமனை குறைக்க நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து இருக்கலாம். ஆனால், அவை எல்லாம் உங்களுக்கு பயன் அளித்ததா? என்பதுதான் முக்கியம். உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என பல பொருட்கள் சந்தையில் விக்கப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் உங்கள் எடையை குறைக்க உதவாது. உங்கள் உடல் எடையை குறைப்பதில், உங்கள் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவு, உங்கள் உடல் எடையை குறைப்பதற்காகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காகவும் உதவும்.

Weight loss: This 7-day diet plan may help you shed the extra pounds in tamil

வறுத்த அல்லது குப்பை உணவுகளை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் எவை என்பது குறித்து குழப்பமாக இருக்கிறீர்களா? கவலையை விடுங்க. உங்கள் உடல் எடையை 7 நாளில் குறைக்க உதவும் உணவுத் திட்டத்தை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எழுந்தவுடன் என்ன சாப்பிட வேண்டும்?

எழுந்தவுடன் என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 5 கிராம் வெந்தய விதைகளை சேர்த்து ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டும். வெந்தய விதைகள் உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும். காலையில் வெந்தய தண்ணீரை முதலில் உட்கொள்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது, உங்கள் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது. இது மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.

எடை இழப்புக்கான காலை உணவு விருப்பங்கள்

எடை இழப்புக்கான காலை உணவு விருப்பங்கள்

பல தானியங்கள் அல்லது பனீர் சாண்ட்விச் செய்யுங்கள். சாண்ட்விச் செய்ய நீங்கள் இரண்டு முட்டைகள் அல்லது 100 கிராம் குறைந்த கொழுப்பு பனீர் சேர்க்கலாம். ஒரு கப் தேநீர் அல்லது காபியுடன், சேர்த்து இவற்றை சாப்பிடலாம். இவற்றில் சர்க்கரை சேர்க்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் இரண்டாவது காலை உணவு விருப்பமானது இரண்டு சிறிய அளவிலான ஓட்ஸ் பனீர் சில்லாவாக இருக்கலாம். 40 கிராம் ஓட்ஸ் மற்றும் 50 கிராம் குறைந்த கொழுப்புள்ள பனீர் மற்றும் 1 தேக்கரண்டி புதினா கொத்தமல்லி சட்னி அல்லது தயிர் மற்றொரு விருப்பம். இது உங்கள் எடையை குறைக்க உதவும்.

காலை உணவு

காலை உணவு

காலை உணவு என்பது நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான உணவாகும். ஏனெனில் இது நாள் முழுவதும் திறம்பட வேலை செய்யத் தேவையான ஊட்டச்சத்துக்களை நம் உடலுக்கு எரிபொருளாக நிரப்ப உதவுகிறது. எனவே, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உண்பது உங்கள் நாளைப் போக்க சிறந்த வழியாகும். புரதம், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை காலையில் சாப்பிடவும், நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கவும், உணவுக்கு இடையில் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவும்.

காலையில் என்ன சாப்பிட வேண்டும்?

காலையில் என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு கிளாஸ் தேங்காய்த் தண்ணீரைக் குடித்து, ஒரு கப் பருவகால பழங்களைச் சாப்பிடுங்கள். தேங்காய் நீரில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் நிரம்பியுள்ளது. இது உங்களை நீரேற்றமாகவும் மற்றும் உடனடி ஆற்றலைப் பெறவும் சிறந்த பானமாக அமைகிறது. மேலும், பருவகால பழங்களை சாப்பிடுவது உங்கள் குடலுக்கு நன்மை பயக்கும் நார்ச்சத்தை பெற உதவும்.

எடை இழப்புக்கான மதிய உணவு விருப்பங்கள்

எடை இழப்புக்கான மதிய உணவு விருப்பங்கள்

100 கிராம் குறைந்த கொழுப்புள்ள பனீர் மற்றும் 150 கிராம் கீரையுடன் செய்யப்பட்ட பாலக் பனீர் மற்றும் 30 கிராம் மாவு மற்றும் குறைந்த எண்ணெயில் செய்யப்பட்ட மல்டிகிரைன் ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம். மாற்றாக, நீங்கள் சிக்கன் அல்லது பனீர் டிக்காவையும் சாப்பிடலாம். 70 கிராம் சிக்கன் அல்லது குறைந்த கொழுப்புள்ள பனீரை டார்ட்டில்லாவை சாப்பிடலாம். அதேபோல 30 கிராம் மல்டிகிரைன் மாவு மற்றும் 50 கிராம் காய்கறிகள் உங்களுக்கு ஆரோக்கியமானவை.

மதிய உணவு விருப்பங்கள்

மதிய உணவு விருப்பங்கள்

மதிய உணவு விருப்பங்களில் புரதம், கால்சியம், உணவு நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. புரோட்டீன் மற்றும் உணவு நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். இது உணவுக்கு இடையில் ஏற்படும் பசி உணர்வைத் தடுக்கும் மற்றும் நீங்கள் உணவு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். ஆதலால், இது எடை இழப்பு உணவில் சிறந்த தேர்வாக அமைகிறது.

கூடுதல் கிலோவை குறைக்க மாலை நேர சிற்றுண்டி

கூடுதல் கிலோவை குறைக்க மாலை நேர சிற்றுண்டி

ஆறு பாதாம் அல்லது மூன்று வால்நட்ஸை சாப்பிட கூறி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். நட்ஸ் ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக இருக்கலாம். ஏனெனில் அவை எடுத்துச் செல்ல எளிதானவை மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்புகளால் நிரம்பியுள்ளன. இது உங்கள் கூடுதல் கிலோவை குறைப்பதோடு, உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை செய்யும்.

இரவு உணவு விருப்பங்கள்

இரவு உணவு விருப்பங்கள்

வறுக்கப்பட்ட கோழி அல்லது பன்னீர் அல்லது மீன் சாலட் ஆகியவற்றை இரவு உணவாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பும் 100 கிராம் காய்கறிகளுடன் 100 கிராம் சிக்கன் அல்லது பன்னீர் அல்லது மீன் எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஒரு பெரிய கப் தக்காளி சூப்புடன் சாப்பிடவும். கிரீம், சோள மாவு, சர்க்கரை போன்றவற்றை சேர்க்க வேண்டாம். இந்த இரவு உணவு விருப்பங்களில் கோழி, பன்னீர், மீன் மற்றும் டோஃபு போன்ற நல்ல தரமான புரதமும், வண்ணமயமான காய்கறிகளும் உள்ளன. மேலும், ஒரு கப் சூப் உங்களைத் திருப்தியடையச் செய்யும். இதனால் இரவில் ஆரோக்கியமற்ற உணவுகளை நீங்கள் சாப்பிட மாட்டீர்கள்.

படுக்கை நேர உணவு

படுக்கை நேர உணவு

நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, ஒரு கப் கெமோமில் டீ மற்றும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்ல விருப்பங்கள். கெமோமில் தேநீரில் சில நன்மை பயக்கும் கலவைகள் உள்ளன, அவை நிதானமான மற்றும் அமைதியான விளைவைக் கொண்டுள்ளன என்று நிபுணர் கூறுகிறார். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதேசமயம் டார்க் சாக்லேட் உங்கள் சர்க்கரை பசியைத் தடுக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எடை இழப்பு பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளில் சர்க்கரை இனிப்பு பானங்கள், கேக்குகள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவை அடங்கும். இந்த உணவுப் பொருட்களில் பெரும்பாலானவை அதிக கலோரி கொண்டவைகள். கோதுமை, அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் இயற்கையாகவே பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால் செயலாக்கத்தின் போது இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைய இழக்கப்படுகின்றன. எனவே சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் குறைவான ஊட்டச்சத்து மட்டுமே உள்ளன. ஆதலால், சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை உட்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion