வெஜிடேரியன் டயட்டில் பல வகை இருக்குன்னு தெரியுமா? அதென்னன்னு தெரிஞ்சுக்க இத படிங்க...

சமீப காலங்களில் சைவ உணவுகள் உலக அளவில் அதிகமாக பிரபலமாகி வருகின்றன. அதற்கு காரணம் என்னவென்றால் சைவ உணவுகள் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன.

சமீப காலங்களில் சைவ உணவுகள் உலக அளவில் அதிகமாக பிரபலமாகி வருகின்றன. அதற்கு காரணம் என்னவென்றால் சைவ உணவுகள் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக அசைவ உணவு உண்பவர்களை விட, சைவ உணவு உண்பவர்கள் அடர்த்தி குறைந்த புரோட்டீன் மற்றும் குறைவான கொழுப்புச் சத்து, குறைவான இரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றைக் கொண்டிருப்பர் என்று கருதப்படுக்கிறது. மேலும் அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பர்கள் குறைவான உடல் நிறைக் குறியீட்டை வைத்திருக்க முயல்வர் என்றும், அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் கருதப்படுகிறது.

Types Of Vegetarian Diets

மேற்சொன்ன காரணங்களைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மாசடைவதற்கும், உணவு பற்றைக்குறை ஏற்படுவதற்கும் மற்றும் பெருங்கடல்கள் மாசடைவதற்கும் அசைவ உணவுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உணவுக்காக விலங்குகளை வளர்ப்பதற்கு மிக அதிக அளவிலான தண்ணீர், நிலம் மற்றும் எரிபொருள் ஆகியவைத் தேவைப்படுகின்றன. ஆகவே இந்த காரணிகளும் சைவ உணவுகள் பிரபலம் அடைவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

நமது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சைவ உணவில் ஏராளமான வகைகள் உள்ளன. என்னென்ன வகைகள் உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாக்டோ-ஓவோ வெஜிடேரியன் டயட் (​Lacto-ovo vegetarian diet)

லாக்டோ-ஓவோ வெஜிடேரியன் டயட் (​Lacto-ovo vegetarian diet)

லாக்டோ-ஓவோ வெஜிடேரியன் டயட்டில் சில அசைவம் சார்ந்த உணவுகளான முட்டைகள் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு சுத்தமான லாக்டோ-ஓவோ சைவ உணவுப் பட்டியலில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், விதைகள், மூலிகைகள், வேர்கள், பூஞ்சைகள், பால், வெண்ணெய், தயிர் மற்றும் முட்டைகள் போன்றவை இடம் பெறுகின்றன. இந்தியாவில் இந்த லாக்டோ-ஓவோ சைவ உணவை உண்பவர்கள் எக்கிட்டேரியன்கள் (eggetarians) என்று அழைக்கப்படுகின்றனர்.

ஓவோ-வெஜிடேரியன் டயட் (Ovo-vegetarian diet)

ஓவோ-வெஜிடேரியன் டயட் (Ovo-vegetarian diet)

ஓவோ-வெஜிடேரியன் டயட்டில் முட்டைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் விலங்குகளிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். உடலில் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கும் அல்லது பாலிலிருந்து பெறப்படும் உணவுகளைத் தவிர்க்க விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஏற்ற சைவ உணவாக ஓவோ-சைவ உணவு இருக்கிறது. இறைச்சி, பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், மீன், பால், தயிர் மற்றும் வெண்ணெய் போன்றவை இந்த ஓவோ-சைவ உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் முட்டை கலந்த உணவுகளான முட்டை மயோனைஸ், முட்டை நூடுல்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

லாக்டோ-வெஜிடேரியன் டயட் (Lacto-vegetarian diet)

லாக்டோ-வெஜிடேரியன் டயட் (Lacto-vegetarian diet)

லாக்டோ வெஜிடேரியன் டயட்டில் இறைச்சி, பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள், கடல் உணவுகள் மற்றும் முட்டைகள் போன்றவை சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. பொதுவாக சைவப் பிரியர்கள் சுற்றுப்புறச்சூழல் நலன், ஒழுக்க நெறி அல்லது உடல் ஆரோக்கியம் போன்றவற்றை மனதில் வைத்தே இந்த லாக்டோ-சைவ உணவை விரும்பி உண்கின்றனர். மற்ற சைவ உணவுப் பட்டியல் போல் அல்லாமல் லாக்டோ-சைவ உணவில் பால் சம்பந்தமான உணவுகளிலிருந்து பால், வெண்ணெய் மற்றும் தயிர் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

நெகிழ்வு கொண்ட உணவுப் பட்டியல் (Flexitarian Diet)

நெகிழ்வு கொண்ட உணவுப் பட்டியல் (Flexitarian Diet)

லண்டனைச் சேர்ந்த உணவு நிபுணரான எமர் டெலனே என்பவர் நெகிழ்வு கொண்ட உணவுப் பழக்கம் அல்லது சைவ உணவுப் பழக்கம் தற்போது மிக வேகமாக பிரபலமாகி வருவதாகக் கூறுகிறார். தாவரம் சார்ந்த சைவ உணவுப் பழக்கம் உடலில் உள்ள கார்பன் அளவைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது என்று கூறுகிறார். நெகிழ்வு உணவுப் பட்டியில் சில சமயம் இறைச்சியைச் சேர்த்துக் கொள்வது அனுமதிக்கப்படுகிறது என்கிறார். ஆகவே நெகிழ்வு கொண்ட உணவுப் பட்டியல் என்பது பெரும்பாலும் தாவரம் சார்ந்த சைவ உணவை உண்பதும், மிகவும் அரிதான தருணங்களில் இறைச்சியை சேர்த்துக் கொள்வதாகும் என்று கூறுகிறார்.

வேகன் டயட் (Vegan diet)

வேகன் டயட் (Vegan diet)

வேகன் டயட்டில் தாவர உணவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். வேகன் சைவ டயட்டைப் பின்பற்றுபவர்கள் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, கோழி மற்றும் முட் டை போன்றவற்றை சேர்த்துக் கொள்வதில்லை. சிலர் தேன் அருந்துவதையும் தவிர்க்கின்றனர். மேலும் வேகன் டயட்டைப் பின்பற்றுபவர்கள் அசைவ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் அவற்றின் உறுப்புகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகள், சோப்புகள், தோல் பொருள்கள் போன்றவற்றையும் பயன்படுத்துவதில்லை.

பெஸ்காட்டேரியன் டயட் (Pescatarian Diet)

பெஸ்காட்டேரியன் டயட் (Pescatarian Diet)

பெஸ்காட்டேரியன் டயட்டைப் பின்பற்றுபவர்கள் தாவர உணவுகளோடு, மீன்கள் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றைத் தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வர். பெஸ்காட்டேரியன் டயட்டில் பெரும்பாலும் தானியங்கள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இடம் பெறுகின்றன. இவை உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்களை வழங்குகின்றன. அதே நேரத்தில் கடல் உணவுகள் புரோட்டீன் சத்துக்களை வழங்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion