உடல் எடையைக் குறைக்க எக்காரணம் கொண்டும் இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க...

பயிற்சியாளர் கூறும் அலோசனைகளின்படி உடற்பயிற்சி செய்தும், உடல் எடை குறையவில்லை என்றால் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் பலனளிக்கவில்லை என்று பொருள்.

போட்டிகள் மிகுந்த இந்த உலகில் அளவுக்கதிகமான வேலைப் பளுவுடன் பரபரப்பாக அவசரமாக நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சிக் கூடங்களுக்குத் தவறாமல் சென்று, உடற்பயிற்சி செய்து வருவது என்பது ஒருவருக்கு சவாலான காரியமாகும். அதிலும் குறிப்பாக இந்த கொரோனா காலத்திலும் ஒருவரால் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு தவறாமல் சென்று உடற்பயிற்சி செய்ய முடிகிறதென்றால், கண்டிப்பாக அவருடைய உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Trying To Lose Weight? Stop Wasting Time On These Exercises

ஒருவருக்கு தொடர்ச்சியாக உடல் எடை அதிகரிக்கிறது என்றால் அவருடைய உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடும் என்பது உண்மை. இந்நிலையில் உடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியமல்ல. உடல் எடை குறைய நீண்ட காலம் ஆகும். அதற்கு முறையான நீண்டகால உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் தேவைப்படும்.

பொதுவாக உடல் எடையைக் குறைப்பதற்காக, மக்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடற்பயிற்சி செய்வர் அல்லது அங்கு பயிற்சியாளர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுவர். அவ்வாறு பயிற்சியாளர் கூறும் அலோசனைகளின்படி உடற்பயிற்சி செய்தும், உடல் எடை குறையவில்லை என்றால் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் பலனளிக்கவில்லை என்று பொருள். மேலும் அந்த பயிற்சிகள் நமது நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றன என்பதே உண்மை.

எனவே பொதுவாக தரமான பயிற்சிகள் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் நாம் தள்ளி வைக்க வேண்டிய பிரபலமான 5 உடற்பயிற்சிகளைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெட்லிப்ட் பயிற்சி (Deadlift)

டெட்லிப்ட் பயிற்சி (Deadlift)

அதாவது தொடைகள் மற்றும் கீழ்முதுகுத் தசைகள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி பளுதூக்கும் பயிற்சியை டெட்லிப்ட் பயிற்சி என்பர். சில நேரங்களில் இந்த பயிற்சி உடலுக்கு நல்ல விளைவை ஏற்படுத்தாது. அதாவது இந்த டெட்லிப்ட் பயிற்சி செய்யும் போது ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டால் அது முதுகில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையும் குறையாது.

எனவே இந்த டெட்லிப்ட் பயிற்சியை புதியவர்கள் மேற்கொள்ளக்கூடாது. மாறாக தவறாமல் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பயிற்சி செய்பவர்கள் அல்லது தரம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த பயிற்சியைச் செய்யலாம். அப்போது உடலுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

எல்லிப்டிக்கல் கருவி (Elliptical trainer)

எல்லிப்டிக்கல் கருவி (Elliptical trainer)

எல்லிப்டிக்கல் கருவி என்பது நடப்பதற்கும், ஓடுவதற்கும் பயன்படுத்தப்படும் மிதிவண்டி போல் பயன்படும் உடற்பயிற்சி கருவியாகும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த எல்லிப்டிக்கல் கருவியில் மட்டும் பயிற்சி செய்துவிட்டு மற்ற உடற்பயிற்சிகளை நிறுத்தினால் அது நம்முடைய நேரத்தை வீணடிப்பதாக அமையும்.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் லா க்ராசி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு, இந்த எல்லிப்டிக்கல் கருவி மிகக் குறைவான பலனையேத் தரும் என்று கூறுகிறது. இந்தக் கருவியில் செய்யும் பயிற்சி உடல் மற்றும் இதயத்திற்கு குறைவான அழுத்தத்தையே கொடுக்கும். அதனால் இதில் செய்யும் பயிற்சி பெரிய பலனைத் தராது. அதனால் அது நமது நேரத்தை வீணடித்துவிடும் என்று கூறுகிறது. அதற்குப் பதிலாக நாம் ஓடுதளக் கருவியில் (ட்ரெட்மில்) ஓடலாம். அது நமக்கு நல்ல பலனைத் தரும். நமது உடல் எடையையும் கணிசமான அளவில் குறைக்கும்.

அப்ரைட் ரோ பயிற்சி (Upright row)

அப்ரைட் ரோ பயிற்சி (Upright row)

அதாவது உடம்பை வளைக்காமல் இரண்டு கால்களையும் சிறிது அகற்றி வைத்து, நேராக நிமிர்ந்து நின்று கொண்டு, பளுவை கைகளால் பிடித்துக் கொண்டு, வயிற்றின் அடிப்பகுதியிலிருந்து கழுத்துவரை மெதுவாக ஏற்றி இறக்கிச் செய்யும் பயிற்சியாகும். ஆனால் இந்தப் பயிற்சியும் உடல் எடை குறைவதற்கு பயன் தராது. ஏனெனில் இந்த பயிற்சியில் தோள்பட்டைக் காயம் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு. அதனால் இந்தப் பயிற்சி செய்வது நமது நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகும். அதற்குப் பதிலாகத் தண்டால் பயிற்சியைச் செய்தால் அது நல்ல பலனைத் தரும்.

ஆப் கிரன்சஸ் (Ab crunches)

ஆப் கிரன்சஸ் (Ab crunches)

அதாவது தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு கால்கள், கைகள் மற்றும் தலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் படிப்படியாக உயர்த்தி இறக்கிச் செய்யும் பயிற்சியாகும். ஆனால் இந்தப் பயிற்சி இடுப்பின் அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறுகிறது.

மேலும் இந்தப் பயிற்சி தீராத வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த பயிற்சியைச் செய்யும் பெண்களுக்கு முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. அதனால் இந்தப் பயிற்சியைச் செய்வதும் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். அதனால் உடல் எடை குறையாது.

டம்பெல் கிக்பேக் (Dumbbell kickback)

டம்பெல் கிக்பேக் (Dumbbell kickback)

இரண்டு கைகளிலும் சிறிய எடைகள் கொண்ட பளுக்களை வைத்துக் கொண்டு, கைகளில் உள்ள தசைகளின் உதவியால் அவற்றை முன்பும் பின்புமாக கொண்டு செல்லும் பயிற்சியே டம்பெல் கிக்பேக் பயிற்சியாகும். ஆனால் இந்தப் பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யாது என்று உடற்பயிற்சிக்கான அமெரிக்கன் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. இந்தப் பயிற்சியினால் நமது முழங்கை வலிமையாக இருக்கும் என்று கூறுகிறது. ஆனால் இந்தப் பயிற்சி தோள்பட்டைகளுக்கோ அல்லது நமது உடல் சக்திக்கோ எந்த ஒரு பலனையும் அளிப்பதில்லை.

இந்த பயிற்சியினால் உடலுக்குள் காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பெண்கள் இந்த பயிற்சியைச் செய்யாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்தால் அது அவர்களின் நேரத்தை வீணடிப்பதாக அமைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion