Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
இந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா?… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…!
முதலில் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பின்பற்றுங்கள்.
உலக மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரங்கள். ஆனால், இதை ஆரோக்கியமாக செய்ய வேண்டியது அவசியம். சரியான முறையில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது நம் உடலுக்கு ஒருபோதும் மோசமானதல்ல. உணவுத் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற பல்வேறு முறைகள் மூலம் ஒருவர் அவரின் வசதிக்கு ஏற்ற முறையில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம்.

தற்போதைய உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை சூழ்நிலையில் எடை இழப்பு பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த சமுதாயத்தில் ஆரோக்கியமாக சுறுசுறுப்புடன் வாழ்க்கையை வாழ்வதில் எடை இழப்பு முக்கியமாக கருதப்படுகிறது. உடல் பருமனாக இருப்பதால் இதய நோய்கள் முதல் அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த சர்க்கரை வரை கிட்டத்தட்ட எல்லா உடல்நலப் பிரச்சினைகளுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.

முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
சரியான வகையில் எடை இழப்பு திட்டம் அல்லது தேர்வு செய்ய வேண்டிய உணவைப் பற்றி நீங்கள் யோசிக்கும்போது, சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறும் சில விஷயங்கள் உள்ளன. முதலில் உங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வது போன்ற எடையைக் குறைப்பதற்கான உங்கள் முயற்சிகளைப் பல காரணிகள் பாதிக்கலாம்.

ஃபேட் டயட்
முதலில் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பின்பற்றுங்கள். எடை குறைப்புக்கான உங்கள் பயணத்தில் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய நூற்றுக்கணக்கான உணவுத் திட்டங்கள் இங்கு இருக்கின்றன. ஃபேட் டயட் (பசியற்ற உணவு) அல்லது புதுமையான உணவு உங்களுக்கு விரைவான முடிவுகளை அளிக்கும். இந் ஃபேட் டயட்டுக்கு நிலையான உணவு பரிந்துரை இல்லை. மேலும் பெரும்பாலும் நியாயமற்ற வேகமான எடை இழப்பு அல்லது தவறான சுகாதார நிலைகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த வகை உணவுகள் மனித உடலின் செயல்பாட்டிற்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
நடப்பாண்டில் ஃபேட் டய்ட் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வரையறுக்கப்பட்ட கலோரிகளைக் கொண்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை பின்பற்றுங்கள். இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுவதோடு மற்ற ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு அளிக்கிறது.

யதார்த்தமான இலக்குகளை அமைக்கவும்
மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உடல் எடையை குறைக்க நேரம் எடுக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது. திறம்பட உடல் எடையை குறைக்க நீங்கள் யதார்த்தமான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதாவது, ஒரு சில நாட்களில் அல்லது மாதங்களில் ஆரோக்கியமான முறையில் பெரிய அளவிலான எடையை குறைக்க முடியாது.

உணவு மற்றும் உடற்பயிற்சி
எடை இழப்புக்கு நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை நீங்கள் செலவழிக்க வேண்டும், மேலும் நாள் முழுவதும் உங்கள் செயல்பாட்டு அளவைக் கண்காணிக்க வேண்டும். ஆதலால், உங்களை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் உங்களை சோர்வடையச் செய்யாத உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.

வளர்சிதை மாற்றத்தைக் கவனியுங்கள்
எடை இழப்புக்கு வளர்சிதை மாற்றம் முதன்மை திறவுகோலாகும். ஆரோக்கியமான மற்றும் நன்கு செயல்படும் வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மறுபுறம், மோசமான வளர்சிதை மாற்றத்தைக் கொண்ட ஒரு நபர் எடையை குறைப்பது கடினம். அவர்கள் எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும், வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால், அவர்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிப்பது மிக கடினம்.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் சில வழிகள்
புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது
தண்ணீர் அதிகம் குடிப்பது
நல்ல உடற்பயிற்சி
கனமான பொருட்களைத் தூக்குதல்
அதிக நேரம் எழுந்து நிற்பது
கிரீன் டீ அல்லது ஊலாங் டீ அருந்துவது
காரமான உணவுகளை உண்ணுதல்
நல்ல தூக்கம்

நல்ல உறக்கம் தேவை
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கும் போது சத்தான உணவை உட்கொள்வது போலவே போதுமான தூக்கமும் முக்கியமானது. மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், சரியான நேரத்தில் உறங்காமல் இருப்பது, சரியாக உணவு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது ஆகியவை பல நோய்களை ஏற்படுத்துகின்றன. போதுமான தூக்கம் இல்லாதிருப்பது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

தூக்கமும், உடல் எடையும்
மன அழுத்தம் இல்லாமல் செயல்படவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் தனிநபர்களுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு மணி நேரம் தூக்கம் தேவை. உங்கள் தூக்கத்தின் தரம் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும், உங்கள் எடை மேலாண்மை உட்பட வாழ்க்கையின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. அதேபோல், மோசமான தூக்கப் பழக்கம் உங்கள் உடல் எடையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அதிகளவு தண்ணீர் குடியுங்கள்
குடிநீரின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மனிதனும் உடலை ஹைட்ரேட் செய்ய தினமும் குறைந்தது 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிப்பது, குறிப்பாக வெதுவெதுப்பான நீர் உடலில் இருந்து கொழுப்பு படிவுகளை குறைக்க உதவுகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. தண்ணீர் அதிகமாகக் குடிக்கும்போது, உங்கள் உடல் உள் வெப்பநிலையைக் குறைத்து, உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

மேலும் சில குறிப்புகள்
உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சேர்க்கவும்
உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதை நிறுத்துங்கள்
நீங்கள் உண்ணும் உணவை நேசியுங்கள்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள்
செயல்முறையை சரியாகப் பின்பற்றுங்கள்

ஆரோக்கியமாக இருங்கள்
உணவு மற்றும் பயிற்சிகளின் வழிமுறைகள் மூலம், உடல் எடை குறைக்கும் வழியை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். எதையும் தீர்மானிப்பதற்கு முன்பு எடை குறைப்பு குறித்த உங்கள் திட்டங்கள் குறித்து உங்கள் உணவியல் நிபுணர், மருத்துவர் அல்லது உங்கள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருடன் கலந்துரையாடுங்கள். இந்த புத்தாண்டில் உங்களின் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை வாழுங்கள்.



Click it and Unblock the Notifications