For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..

தற்போதைய உலகில் பெரும்பாலானோர் தங்களின் உடல் எடையைக் குறைக்க கஷ்டப்படுகின்றனர். ஆனால் உடல் எடையை வேகமாக குறைக்கும் பவர் டயட் உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் உடல் விரைவில் சிக்கென்று மாறும்.

|

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மிகவும் பிரபலமான பழமொழி. அதேப் போல் ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலில் தான் உள்ளது. ஆனால் தற்போதைய உலகில் பெரும்பாலானோர் தங்களின் உடல் எடையைக் குறைக்க கஷ்டப்படுகின்றனர். அதோடு இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் உடல் பருமன்.

Power Diet For Quick Weight Loss

வேகமாக நகரும் இந்த வாழ்க்கை முறையில், உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு அதிக நேரம் பலருக்கு கிடைப்பதில்லை. இதுப்போன்ற தருணங்களில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உண்டு தான் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க முடியும். கீழே உடல் எடையை வேகமாக குறைக்கும் பவர் டயட் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் உடல் விரைவில் சிக்கென்று மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகாலை

அதிகாலை

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உடலால் உற்பத்தி செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் அமிலங்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

காலை உணவு

காலை உணவு

காலை உணவாக பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

* முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட் (2) +2 துண்டு ப்ரௌன் பிரட்

* கொழுப்பு நீக்கப்பட்ட பால் + கார்ன் ஃப்ளேக்ஸ்/ஓட்ஸ்

* ஃபுரூட் சாலட்/முளைக்கட்டிய பயிர்கள்

* வெஜிடேபிள் உப்புமா

* கொழுப்பு நீக்கப்பட்ட சீஸ் + ப்ரௌன் பிரட்

மதிய உணவிற்கு முன்...

மதிய உணவிற்கு முன்...

மதிய உணவிற்கு முன் ஒரு கப் ப்ளாக் காபி குடிக்க வேண்டும். இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவி, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

மதிய உணவு

மதிய உணவு

* வேக வைத்த சிக்கன் / ரோஸ்ட்டட் சிக்கன் / சோயாபீன் (200 கிராம்) + கைக்குத்தல் அரிசி (1/2 தட்டு) / சப்பாத்தி (1)

* வேக வைத்த தால் + சாலட் + கைக்குத்தல் அரிசி சாதம் (1/2 தட்டு) / சப்பாத்தி (1-2)

* புரோபயோடிக் தயிர் (100 கிராம்)

* வெஜிடேபிள் தாலியா

மாலை

மாலை

* மாலை வேளையில் பசிக்கும் போது சிட்ரஸ் பழங்களை சிறிது சாப்பிடலாம்.

* ஒரு கப் க்ரீன் டீயுடன் 2 பிஸ்கட் சாப்பிடலாம்.

* வேக வைத்த சுண்டல் சாப்பிடலாம்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு வேளையில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

* வேக வைத்த சோயா பீன் சூப் + சாலட்

* வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு (3) + வெஜிடேபிள் க்ளியர் சூப்

* சிக்கன் அல்லது மீன் சாலட்

* வேக வைத்த தால்

* வெஜிடேபிள் உப்புமா

படுக்கைக்கு முன்...

படுக்கைக்கு முன்...

இரவு தூங்குவதற்கு முன் 150-200 மிலி கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிக்கவும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

நினைவில் கொள்ள வேண்டியவை:

* இரவு நேரத்தில் ஹெவியான உணவைத் தவிர்க்கவும். தூங்குவதற்கும், இரவு உணவிற்கும் இடையே குறைந்தது 3-4 மணிநேரம் இடைவெளி விடவும்.

* குளிர்பானங்களுக்கு பதிலாக இளநீர், வெஜிடேபிள் சூப் அல்லது மோர் ஆகியவற்றை குடிக்கவும்.

* தினமும் குறைந்தது 2-3 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும்.

* எடையை இழக்க நார்ச்சத்து மிகவும் முக்கியம். ஆகவே நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவும்.

* மூன்று வேளையும் உணவுகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

* பேக்கரி பொருட்களைத் தவிர்க்கவும்.

* சிக்கன் டிக்காவிற்கு பதிலாக சிக்கன் சலாமியை சாப்பிடவும்.

* முக்கியமாக உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வாரத்தில் 6 நாட்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். வாரம் ஒருமுறை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்களுக்கு விருப்பமான ஒரு உணவை சாப்பிடலாம். ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் உடற்பயிற்சியை சிறிது நேரமாவது செய்ய முயற்சிக்க வேண்டும். இதை தவறாமல் மேற்கொண்டால், நிச்சயம் எதிர்பார்த்த பலனை விரைவில் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Power Diet For Quick Weight Loss

Have you ever heard about the power diet that is widely known for quick weight loss ? Know how to have this power diet, and when to have it!
Story first published: Thursday, January 21, 2021, 10:00 [IST]
Desktop Bottom Promotion