Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...
பால் டயட்டை ஒருவர் மேற்கொள்ளும் முன், அந்த டயட் பற்றிய முழுமையான தகவல்களையும் தெரிந்து கொண்டு, பின்பு தான் மேற்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. உலகில் எத்தனையோ டயட் உள்ளது. அதில் பிரபலமான ஓர் டயட் தான் பால் டயட். இந்த டயட்டின் சுவாரஸ்யமான பகுதி என்றால், அது உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தான். இந்த பால் டயட்டில் நாள் முழுவதும் பாலைப் பருகலாம்.

ஆனால் இந்த பால் டயட்டை ஒருவர் மேற்கொள்ளும் முன், அந்த டயட் பற்றிய முழுமையான தகவல்களையும் தெரிந்து கொண்டு, பின்பு தான் மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் பால் டயட் குறித்து முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பால் டயட்
முதலில் பால் டயட் எடை இழப்புக்கு ஒழுங்கமைப்படவில்லை. இது உடலை சரிசெய்யவும், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை சரிசெய்யவும் தான். ஆனால், நம் அனைவருக்குமே உடல் பருமன் தான் மற்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது தெரியும். எனவே உடல் எடை பிரச்சனையை சரிசெய்ய இந்த டயட் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த டயட்டின் பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒரு நபர் பால் மட்டுமே குடிக்க வேண்டியிருக்கும்.

ஏன் பால்?
பால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பால் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு தேக்கத்தைத் தடுக்க உதவும். மேலும், பால் டயட் கலோரி அளவைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுவதாக நம்பப்படுகிறது. அதோடு பால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் இது அன்றாட செயல்பாட்டை செய்யத் தேவையான ஆற்றலையும் வழங்கும்.
2011 ஆம் ஆண்டில் அமெரிக்கன் டயட்டெடிக் அசோசியேஷன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இந்த வெள்ளை நிற பானத்தில் கூடுதல் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இது உடலில் அதிகமான கொழுப்புத் தேக்கத்தைக் குறைக்க உதவும். 2012 இல் ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், மற்ற பானங்களை விட ஸ்கிம் பால் குடிப்பது எடை குறைவதற்கு நன்மை அளிக்கும் என கூறியுள்ளது.

பால் டயட்டின் நன்மைகள்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லை
பாலில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. எனவே இந்த டயட்டை மேற்கொள்ளும் போது, குடிக்கும் பாலில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரயை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும்.

ஏராளமான ஊட்டச்சத்துக்கள்
பச்சை பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அது உடலுக்கு வேண்டிய சத்துக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும்.

எடை குறைப்பில் கால்சியம்
சில ஆய்வுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறுகிறது. இதன் மூலம் பால் டயட் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

உடல் சுத்தம்
பழங்காலத்தில், பால் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்பட்டு வந்தது. ஆகவே உடலை சுத்தம் செய்ய நினைத்தால் பால் குடிப்பது நல்லது. மெலிந்த தேகம் அல்லது உடலைப் பெற பால் மிகச்சிறந்த பானமாகும். எனவே உடல் எடையைக் குறைக்க பால் அவசியமான ஒன்றாக உள்ளது.
இப்போது மூன்று வாரங்கள் பின்பற்ற வேண்டிய பால் டயட் குறித்துக் காண்போம்.

முதல் வாரம்
அதிகாலை: ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
காலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வேக வைத்த முட்டை மற்றும் 1 முழு தானிய பிரட்.
மதிய உணவு: ஒரு டம்ளர் வெஜிடேபிள் ஸ்மூத்தி, ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிக்கன் அல்லது டூனா சாலட்.
மாலை: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரவு உணவு: சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கப்பட்ட காய்கறிகள் அல்லது க்ரில் மீன்
இரவு தூங்கும் முன்: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்கவும்.

இரண்டாம் வாரம்
அதிகாலை: சர்க்கரை சேர்க்காத 1 கப் க்ரீன் டீ.
காலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வாழைப்பழம் மற்றும் 1 வேக வைத்த முட்டை
மதிய உணவு: க்ரில் மீன் மற்றும் 2 சப்பாத்தி.
மாலை: 4 மணியளவில் 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரவு உணவு: ஒரு பௌல் சிக்கன் சூப் அல்லது க்ரில் காளான் மற்றும் காய்கறிகள்
இரவு தூங்குவதற்கு முன்: 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கப்பட்ட ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால்.

மூன்றாவது வாரம்
அதிகாலை: 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
காலை உணவு: 1 கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 2 வேக வைத்த முட்டை மற்றும் 4 ஊற வைத்த பாதாம் அல்லது 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை 1/2 பௌல் ஓட்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் தேனுடன் ஒன்றாக கலந்து உட்கொள்ள வேண்டும்.
மதிய உணவு: க்ரில் மீனுடன் ஃபுரூட் சாலட் அல்லது 1/2 கப் பாலுடன் க்ரில்டு வெஜிடேபிள் சாண்விட்ச்.
மாலை: 3-4 பாதாமை நீரில் ஊற வைத்து வைத்து, ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
இரவு உணவு: காளான் க்ளியர் சூப் அல்லது வதக்கிய காய்கறிகள் மற்றும் டோஃபு.
இரவு தூங்குவதற்கு முன்: ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பாடலுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.



Click it and Unblock the Notifications