For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்!

வேர்க்கடலையை புரதச்சத்துக்களின் புதையல் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே, வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது தெரிந்திருக்கும்.

|

வேர்க்கடலை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. போர் அடிக்கும் போது ஒரு பாக்கெட் வேர்க்கடலை என்றாலும் சலிக்காமல் சாப்பிடுவது தான் அநேகரின் பழக்கம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடும் வேர்க்கடலைக்கு தனி சுவை என்றே சொல்ல வேண்டும். மலிவான விலையில் கிடைப்பதால், இதில் சத்துக்கள் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். இதிலுள்ள சத்துக்கள் ஏராளம்.

Is Eating Peanuts Good For Weight Loss?

புரதச்சத்துக்களின் புதையல் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே, வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது தெரிந்திருக்கும். உடல் எடையை குறைப்பது என்பது பெரிய சாகசமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான டிப்ஸ், டயட் என எத்தனை எத்தனையோ முயற்சித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்களே இங்கு அதிகம். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இப்போது இந்த ரகசியத்தை சொல்லப் போகிறேன். வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்டபாலிசத்தை தூண்டும்

மெட்டபாலிசத்தை தூண்டும்

மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. இதனை சீராக வைத்துக் கொண்டாலே உடல் எடை அதிகரிப்பு எனும் பேச்சுக்கே இடம் இருக்காது. ஆரோக்கியமான மெட்டபாலிசம் உள்ளவர்களுக்கு, எதை சாப்பிட்டாலும் எளிதில் சீரணமாகிவிடும். ஆரோக்கிமான செரிமான அமைப்பை உடையவர்களின் உடலில் எந்த பாகத்திலும் கொழுப்பு தங்கவே தங்காது. எனவே, வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடல் எடை அதிகரிப்பை சுலபமாக தடுத்திடலாம்.

குறைந்த கார்போஹைட்ரேட்

குறைந்த கார்போஹைட்ரேட்

வேர்க்கடலையில் சுவை அதிகமாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு தான். அதனால் தான், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்ட நம் முன்னோர்கள் அனைவரும் ஒல்லியாக இருந்தார்களோ? இருக்கும். வேர்க்கடலையின் முக்கிய நன்மையே, அதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசியே ஏற்படாது.

சத்துக்களின் கூடாரம்

சத்துக்களின் கூடாரம்

வேர்க்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. அத்துடன், மற்ற புரதங்களான பயோடின், காப்பர், பொட்டாசியம், ஃபோலெட், நியாசின், தயாமின் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களும காணப்படுகின்றன. இந்த வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புடன், கலோரியையும் எரிக்க உதவுகின்றன.

தாமதமாக செரிக்கும் நார்ச்சத்து

தாமதமாக செரிக்கும் நார்ச்சத்து

வேர்க்கடலை தான், செரிக்க தாமதம் ஆகும் நார்ச்சத்தை கொண்ட ஒரு உணவு. இதன்மூலம், உடல் எடையை கட்டுப்படுத்திட முடியும். அதுமட்டுமல்லாது, இது இரத்த சர்க்கரையை நிலையானதாக வைத்திருக்கிறது மற்றும் கிளைசெமிக் குறியீட்டுடன் அதை உறுதிப்படுத்துகிறது. வேர்க்கடலை செரிக்க தாமதமாவதோடு, தாமதமாக தான் சர்க்கரையையும் இரத்தத்தில் வெளியேற்றும். எனவே தான், நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது. இனிமேல் உங்களுக்கு தூக்கம் வந்தால் அல்லது சோம்பலாக உணர்ந்தாலோ ஒரு கை வேர்க்கடலையை எடுத்து சாப்பிடுங்கள் போதும், சுறுசுறுப்புடன் இருப்பது மட்டுமின்றி, சுவையான தீனி சாப்பிட்டது போல் இருக்கும்.

வேர்க்கடலையில் உள்ள பிற நன்மைகள்:

வேர்க்கடலையில் உள்ள பிற நன்மைகள்:

* மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்க வேர்க்கடலை சாப்பிடலாம்.

* வேர்க்கடலையில் உள்ள ஒமேகா 6 சருமத்திற்கு நன்மை பயக்கும்.

* இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Eating Peanuts Good For Weight Loss?

Losing weight is quite a challenging task. Peanuts could play a crucial role in your weight loss journey, if consumed in a moderate amount.
Desktop Bottom Promotion