For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்கணுமா? அதுக்கு இந்த கசாயத்தை குடிங்க போதும்...

|

ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் உயர் தரமான புரோட்டீன்களின் சிறந்த மூலப் பொருட்கள் தான் நட்ஸ் மற்றும் விதைகள். அதனால் தான் எடை இழப்பு உணவுத் திட்டத்தில் இவை முக்கியமான ஒரு உணவுப் பொருட்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. எடையை இழக்கும் முயற்சியில் இருக்கும் போது ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, பசியும் கட்டுப்படுத்தப்படும்.

நட்ஸ் மற்றும் விதைகளில் பாதாம், முந்திரி, வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் போன்றவை ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள். அதில் ஆளி விதையும் முக்கியமான ஒன்று. இந்த மிகச்சிறிய பழுப்பு நிறத்திலான விதைகள் எடையை இழக்க மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

MOST READ: சிறுநீரக நோயின் அபாயகரமான சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

சொல்லப்போனால் விதைகளிலேயே ஆளி விதை தான் மிகவும் ஆரோக்கியமானது. இவை விலை குறைவானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் எளிதில் உணவுகளில் சேர்க்கக்கூடியதும் கூட. இப்போது உடல் எடையை இருமடங்கு வேகத்தை குறைக்க உதவும் ஆளி விதை கசாயத்தை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு பகுதிகளில் தோன்றிய மிகவும் பழமையான விதைகளாகும். ஆளி விதைகளில் இரண்டு வகைகள் உள்ள. அவை பழுப்பு மற்றும் கோல்டன் நிற ஆளி விதைகள். இவை இரண்டுமே சமமான அளவில் சத்துக்களைக் கொண்டவை. இந்த விதைகளின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அறிந்த பின், இது மக்களிடையே பிரபலமானது.

ஆளி விதையில் உள்ள சத்துக்கள்

ஆளி விதையில் உள்ள சத்துக்கள்

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள் (7 கிராம்) உங்களுக்கு நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை வழங்கும். இந்த விதைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் கூட மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தைகளில் இவை விதைகள், எண்ணெய்கள், பொடி, காப்ஸ்யூல்கள் மற்றும் மாவு என பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் பின்வரும் அளவில் சத்துக்கள் கிடைக்கின்றன.

* கலோரிகள் - 37

* புரோட்டீன் - 1.3 கிராம்

* நார்ச்சத்து - 1.9 கிராம்

* மொத்த கொழுப்பு - 3 கிராம்

* ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் - 1,597 மிகி

* வைட்டமின் பி1 - 8%

* ஃபோலேட் - 2%

* இரும்புச்சத்து - 2%

* மக்னீசியம் - 7%

* பாஸ்ரஸ் - 4%

* பொட்டாசியம் - 2%

ஆளி விதை மற்றும் எடை இழப்பு

ஆளி விதை மற்றும் எடை இழப்பு

ஆளி விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகளவில் உள்ளன. இவற்றை ஸ்நாக்ஸ் நேரத்தில் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், பசியுணர்வை கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை மெதுவாக நடைபெறச் செய்கிறது. அதுவும் பசியை நிர்வகிக்கும் மற்றும் முழுமையான உணர்வைத் தரும் பல்வேறு ஹார்மோன்களை இது கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, டயட்டின் போது ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். ஒரு ஆய்வின் படி, 2.5 கிராம் ஆளி விதை பொடி கலந்த பானம் பசி மற்றும் ஒட்டுமொத்த பசியின் உணர்வைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.

ஆளி விதையின் பிற நன்மைகள்

ஆளி விதையின் பிற நன்மைகள்

ஆளி விதைகள் உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அதோடு இந்த சிறிய பழுப்பு நிற விதைகளில் லிக்னன்கள் உள்ளன. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் நிறைந்த தாவர கலவைகள் ஆகும். இவை இரண்டுமே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

ஆளி விதை கசாயம்

ஆளி விதை கசாயம்

ஆளி விதைகளை பலவாறு சாப்பிடலாம். ஆனால் ஆளி விதைகளில் உள்ள முழு சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை கசாயம் வடிவில் தான் உட்கொள்ள வேண்டும். இப்போது அந்த ஆளி விதை கசாயத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 1 கப்

* ஆளி விதை பொடி - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை - 1 டேபிள் ஸ்பூன்

* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஆளி விதை பொடியை சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்தால், ஆளி விதை கசாயம் தயார்.

* உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த கசாயத்தை காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக குடிக்க வேண்டும்.

ஆளி விதையை சாப்பிடும் பிற வழிகள்

ஆளி விதையை சாப்பிடும் பிற வழிகள்

உங்களின் அன்றாட உணவில் ஆளி விதையை சேர்க்க திட்டமிட்டிருந்தால், ஆளி விதை பொடியை சாப்பிடுங்கள். ஏனெனில் முழு ஆளி விதைகளின் மேல் தோல் மிகவும் கடினமாக இருக்கும். இது நமது செரிமான மண்டலத்தால் ஜீரணிப்பது என்பது கடினம். மேலும் முழு ஆளி விதைகளை சாப்பிட்டால், முழு சத்துக்களையும் பெற முடியாது. ஆகவே எப்போதுமே ஆளி விதை பொடியை சாப்பிடுவது தான் நல்லது.

ஒருவேளை உங்களுக்கு ஆளி விதை கசாயம் பிடிக்கவில்லை என்றால், ஆளி விதை பொடியை உங்களின் அன்றாட உணவு, ஸ்மூத்தி, சாலட் அல்லது கஞ்சி என பலவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு அதிகமாக ஆளி விதை பொடியை எடுத்துவிட வேண்டாம். ஏனெனில் இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும் அதிக அளவிலான நீரை குடிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Flax Seeds Kadha To Lose Weight

Flax seeds are another weight loss and heart-friendly seeds that you can include in your diet. Here we will tell you how to make a special flax seeds kadha that can double your weight loss process.