Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
அதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...
ஒரே நேரத்தில் அதிகமான கலோரிகளை எரித்து குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இதனால் உடம்பில் காயங்களோ தாக்கங்களோ ஏற்படாது என்று இன்சைடர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீண்ட நேரம் ஜிம்மிலேயே கிடக்கின்றனர். தங்கள் கலோரிகளை குறைக்க அவர்கள் கடினமான உடற்பயிற்சிகளைக் கூட செய்யத் தயங்குவதில்லை. ஆனால் உண்மையில் இந்த கடுமையான உடற்பயிற்சிகள் கலோரிகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பில் காயங்களையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. இதனால் பின்னாளில் ஏராளமான பக்க விளைவுகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான கலோரிகளை எரித்து குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இதனால் உடம்பில் காயங்களோ தாக்கங்களோ ஏற்படாது என்று இன்சைடர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்த தாக்கமுள்ள உடற்பயிற்சிகளானது " காயங்கள், வெட்டுதல்கள் அல்லது அதிர்ச்சி" போன்றவற்றை எலும்பு மூட்டு இணைப்புக்களில் ஏற்படுத்துவதில்லை என்று டெய்லர் ஹைன்ஸை கூறியுள்ளார்.
எனவே குறைந்த தாக்க உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்பதை உடற்பயிற்சி ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி கலோரிகளை விரைவில் எரிக்க உதவும் 5 குறைந்த தாக்க உடற்பயிற்சிகளை பற்றி இங்கே காணப் போகிறோம்.

நீச்சல்
நீர் காற்றை விட அடர்த்தியானது. நீங்கள் தண்ணீரில் நீச்சலடிக்கையில் அது உங்கள் முதுகு, தோள்கள், கோர் மற்றும் க்ளூட்ஸ் போன்ற பகுதிகளுக்கு நல்ல வேலையை தருகிறது. 10 தடவை என்று விரைவான நீச்சல் போடுங்கள். கலோரி எண்ணிக்கை நபரின் எடையைப் பொருத்து மாறுபடக் கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எரிந்த கலோரிகள் : ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் படி, 125 பவுண்டுகள் எடையுள்ள ஒருவர் அரை மணி நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 180 கலோரிகளை நீச்சலடிப்பதன் மூலம் எரிக்க முடியும். இருப்பினும், 155 பவுண்டுகள் எடையுள்ள ஒருவர் 30 நிமிடங்கள் வரை நீச்சல் அடித்தால் 223 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

படகு போட்டி
படகு ஓட்டுதல் கலோரிகளை எரிக்க ஒரு நல்ல உடற்பயிற்சி. இந்த பயிற்சி உங்கள் கைகள், கால்கள், முதுகு மற்றும் முக்கிய தசைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்ட முயல வேண்டும். முதலில் உங்கள் கால்களால் அழுத்த வேண்டும். அப்புறம் கைகளை மெதுவாக ஓட்டுங்கள். இதன் மூலம் உடம்பில் காயங்கள் ஏற்படுவதை நாம் தடுக்கலாம்.மெதுவாக செய்யுங்கள்.
எரிந்த கலோரிகள் : 125 பவுண்டுகள் எடையுள்ள ஒருவர் 210 கலோரிகளை 30 நிமிடங்களில் எரிக்க முடியும். அதே நேரத்தில் 260 கலோரிகளை 155 பவுண்டுகள் கொண்ட ஒருவரால் எரிக்கவும் முடியும் என்று ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் தெரிவித்துள்ளது.

சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டும் போது நாம் நிலப்பரப்புக்கு எதிராக விசையை கொடுக்க வேண்டும். வேகம், எதிர்ப்பு நிலை போன்றவை நமது தசைகளுக்கு கடுமையான வலிமையை தருகின்றன. இருப்பினும் நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது மூட்டுகளில் எரிச்சல் ஏற்படாத வண்ணம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.
எரிந்த கலோரிகள் : 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 125 பவுண்டுகள் எடையுள்ள ஒருவருக்கு 360 கலோரிகளும், 155 பவுண்டுகள் கொண்ட நபருக்கு 446 கலோரிகள் வரைக்கும் எரிக்க முடியும். இதற்கு நீங்கள் 16-19 மைல் வேகத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

படிக்கட்டு ஏறுதல்
நீங்கள் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க நினைத்தால் படிக்கட்டில் ஏறிச் செல்லலாம். எஸ்கலேட்டர், லிப்ட் போன்றவற்றை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் செல்ல முயலுங்கள். மதிய இடைவெளி வேளைகளில் இது போன்ற உடற்பயிற்சியில் நீங்கள் ஈடுபடலாம். 30 விநாடிகள் ஓடுங்கள் ஏறுங்கள். ஆறு முதல் எட்டு முறை ஏறி ஏறி கீழே இறங்கலாம்.
எரிந்த கலோரிகள் : ஸ்டெப்ஜாக்கியின் கூற்றுப்படி, நீங்கள் ஏறும் ஒவ்வொரு அடியிலும் 0.17 கலோரிகளை குறைக்க முடியும். 10 மேல்நோக்கி ஏறுதலுக்கு 1 கலோரி வீதம் வரைக் கூட எரிக்க முடியும்.

வாக்கிங் (நடைப்பயிற்சி)
குறைந்த தாக்க உடற்பயிற்சிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமெரிக்க உடற்பயிற்சி கவுன்சில் உங்களுக்கு நடைபயிற்சியை பரிந்துரைக்கிறது.
எரிந்த கலோரிகள் : ஒரு சராசரி நபர் வாரத்திற்கு 3500 கலோரிகள் வரை எரிக்க முடியும். இது 1 பவுண்டு கொழுப்பு எரிக்கப்படுவதற்கு சமம். இது ஒரு நாளைக்கு 10,000 படிகள் ஏறுவதற்கு சமமாகுமாம்.

குறிப்பு
கலோரிகளை கணக்கிடுவதும் மற்றும் உடற்பயிற்சி செய்வது மட்டுமே நல்ல உடற்தகுதி என்று அர்த்தமல்ல. ஒருவர் சீரான ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து வர வேண்டும். மேலும் நேர்மறையான அணுகுமுறையையும் எண்ணங்களையும் கொண்டிருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications