For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பலகாரங்களால் குண்டாகாம இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவராயின், பண்டிகையை காரணம் காட்டி ஒரு நாள் கலோரி நிறைந்த இனிப்புக்கள் மற்றும் பலகாரங்களை வயிறு நிறைய உட்கொண்டால், இத்தனை நாட்கள் மேற்கொண்ட டயட் பாழாகும்.

|

தீபாவளி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசுக்கள் மட்டுமின்றி, பலகாரங்களும் தான். பொதுவாக பண்டிகைக் காலங்களில் வீட்டில் பலகாரங்களை செய்வது இந்தியர்களின் வழக்கம். அதில் இனிப்புக்கள் மட்டுமின்றி, கார வகைகளும் அடங்கும். நம்மால் எப்போது வேண்டுமானாலும் வாயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பண்டிகைக் காலங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கண்டதும், ஒருவித குஷியால் நம்மை மறந்து நாம் கண்டதை சாப்பிடுவோம்.

Diwali Weight Loss Tips: Smart Ways To Prevent Belly Fat

அதிலும் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவராயின், பண்டிகையை காரணம் காட்டி ஒரு நாள் கலோரி நிறைந்த இனிப்புக்கள் மற்றும் பலகாரங்களை வயிறு நிறைய உட்கொண்டால், இத்தனை நாட்கள் மேற்கொண்ட டயட் பாழாகிவிடும். எனவே தீபாவளி பண்டிகையினால் உங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் கட்டுப்பாடு

உணவில் கட்டுப்பாடு

என்ன தான் பண்டிகையாக இருந்தாலும், நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவராயின், இனிப்புக்கள், வறுத்த பலகாரங்கள் மற்றும் இதர மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் அல்லது சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் கட்டுப்பாடு அவசியம் இருக்க வேண்டும். எப்போதும் போன்று எவ்வளவு உணவை உண்பீர்களோ, அவ்வளவு மட்டும் சாப்பிடுங்கள்.

இனிப்புக்களை தவிர்க்கவும்

இனிப்புக்களை தவிர்க்கவும்

முடிந்த அளவு இனிப்பு பலகாரங்களைத் தவிர்த்திடுங்கள். பொதுவாக பண்டிகை காலங்களில் உணவுகளில் கலப்படம் செய்வதற்கான ஆபத்து அதிகம் இருக்கும். இது உடல்நலத்தில் பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இனிப்புக்களை சாப்பிடுவதாக இருந்தால், வீட்டில் தயாரித்த பலகாரங்களை சாப்பிடுங்கள். அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

நீர் அவசியம்

நீர் அவசியம்

என்ன பண்டிகையாக இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மட்டும் எப்போதும் மறக்கக்கூடாது. தண்ணீர் குடிப்பதால், உடலில் இருந்து டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, பண்டிகையை முன்னிட்டு நண்பர்களுடன் சேர்ந்து முந்தைய நாள் சரக்கு அடித்து ஏற்படும் ஹேங்ஓவரில் இருந்து விடுபட உதவும்.

அளவாக குடிக்கவும்

அளவாக குடிக்கவும்

தீபாவளியை கொண்டாட பலர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவார்கள். உங்களுக்கும் இப்பழக்கம் இருப்பின், உடனே அதைக் கைவிடுங்கள். இல்லாவிட்டால், அளவாக குடியுங்கள். மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில் ரெட் ஒயின் குடிப்பது நல்லது. அதிகமாக மது அருந்தினால், அது உடல் வறட்சியை உண்டாக்கி, பண்டிகை நாட்களில் மிகவும் களைப்புடன் வெளிக்காட்டும்.

ஆரோக்கியமான உணவுடன் தொடங்கவும்

ஆரோக்கியமான உணவுடன் தொடங்கவும்

தீபாவளி அன்று காலையில் எழுந்ததும் குளித்து பட்டாசு வைத்த பின், ஆரோக்கியமான காலை உணவுடன் ஆரம்பியுங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். பண்டிகை நாட்களில் உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் கவனிப்பது என்பது கடினமாக இருக்கும்.

அளவான காப்ஃபைன் பானங்கள்

அளவான காப்ஃபைன் பானங்கள்

காபி அல்லது டீ போன்றவற்றை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். இதற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், நற்பதமான ஜூஸ்கள் அல்லது ஜல் ஜீரா போன்றவற்றைக் குடியுங்கள். இது அதிகளவு கலோரிகள் எடுப்பதைத் தவிர்க்க உதவும். அதேப் போல் கார்பனேட்டட் பானங்களையும் தவிர்க்கவும். ஏனெனில் இவற்றில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

பண்டிகைக் காலங்களில் பலரும் செய்ய மறக்கும் மற்றும் தவிர்க்கும் ஒன்று தான் உடற்பயிற்சி. ஆனால் நீங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நினைத்தால், எப்போதும் போன்று காலையில் எழுந்து உடற்பயிற்சியை செய்யுங்கள். இதனால் நீங்கள் டயட்டில் உள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு நடந்து கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali Weight Loss Tips: Smart Ways To Prevent Belly Fat

The festive season can make you fall off the track with your eating or fitness goals, leading to weight gain and other health issues. So, here are some tips to help you stay healthy during Diwali.
Story first published: Wednesday, October 23, 2019, 17:51 [IST]
Desktop Bottom Promotion