Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
ஆண்களே! 40 வயதிலும் சும்மா ஃபிட்டா இருக்கணுமா? அதுக்கு இத ஃபாலோ பண்ணுங்க...
40 வயதை எடுத்துக் கொண்டால், இளம் வயதில் நாம் சாப்பிட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மேற்கொண்ட கெட்ட பழக்கங்களின் விளைவை அவசியம் சந்திக்க வேண்டியிருக்கும்.
நம் அனைவருக்குமே 20 வயதில் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோமோ, அதே ஆரோக்கியத்துடன் 40 வயதிலும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்கு நாம் சரியான உணவுப் பழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 30 வயதை தாண்டினாலே உடலில் ஒருசில பிரச்சனைகள் தலைகாட்ட ஆரம்பிக்கும். அதிலும் 40 வயதை எடுத்துக் கொண்டால், இளம் வயதில் நாம் சாப்பிட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மேற்கொண்ட கெட்ட பழக்கங்களின் விளைவை அவசியம் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் 40 வயதில் சந்திக்கும் சில பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் என்றால் உயர் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உடல் பருமன், மெட்டபாலிச சிண்ட்ரோம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை ஆகும்.

இந்த பிரச்சனைகளை 40 வயதில் ஒருவர் சந்திக்கக்கூடாது என்று விரும்பினால், நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எப்போது சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். அதோடு 40 வயதில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதையும் அறிந்து, அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

40 வயதில் ஆண்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள்
ஆண்களுக்கு 40 வயதில் சீரான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதுவும் வயதானதைக் குறைக்க உடல் வலிமை, ஸ்டாமினாவில் கவனம் செலுத்துவதோடு, ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும். ஏன் ஊட்டச்சத்துள்ள உணவுகளின் மீது கவனம் செலுத்த வேண்டுமென்றால், சத்துள்ள உணவுகள் தான் இதய ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டிற்கும் வளர்சிதை மாற்றம் குறைந்து வருவதால், ஒருவரது எடை மற்றும் உடலமைப்பை நிர்வகிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நல்ல புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், முழு தானியங்கள், போதுமான நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதோடு, போதுமான நீரேற்றத்துடனும் இருக்க வேண்டும். இப்போது 40 வயதில் ஆண்கள் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம்.

40 வயதில் ஆண்கள் ஃபிட்டாக இருக்க என்ன சாப்பிடலாம்?
நல்ல புரோட்டீன்
தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரோட்டீன், இறைச்சி, முட்டைகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள், நட்ஸ் மற்றும் கொழுப்பு குறைவான பால் போன்றவற்றை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முழு தானியங்கள்
ஓட்ஸ், கோதுமை ரவை, திணை, சிவப்பு அரிசி போன்ற உணவுகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை. அதோடு இவற்றில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் முழு தானியங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நல்ல கொழுப்புகள்
அவகேடோ என்னும் வெண்ணெய் பழம், ஆலிவ், நட்ஸ் மற்றும் விதைகளில் நல்ல கொழுப்புக்கள் உள்ளதால், ஆண்கள் இவற்றை தங்களின் உணவுகளில் சேர்த்துக் கொள்வதால், உடல் ஃபிட்டாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

நார்ச்சத்து
நார்ச்சத்துள்ள உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய நார்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. அதோடு, இவற்றில் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடின்ட்டுகளும் உள்ளது. பொதுவாக ஆண்களுக்கு வயதான காலத்தில் புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க ஆண்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், முளைக்கட்டிய பயிர்கள், காலிஃப்ளவர், க்ரீன் டீ, தக்காளி, வால்நட்ஸ், பெர்ரி பழங்கள் மற்றும் ஒமேகா-3 நிறைந்த மீன்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால் புரோஸ்டேட் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

திரவங்கள்
தசைகளின் செயல்பாடு மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பராமரிக்க நீரேற்றம் மிகவும் முக்கியம். அதற்கு தினமும் ஒருவர் 2.5 முதல் 3 லிட்டர் நீரைப் பருக பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு வெறும் நீரைக் குடிக்க பிடிக்காவிட்டால், மூலிகை டீ, ஜூஸ்கள், தாகத்தைத் தணிக்கும் இளநீர், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கலாம்.

எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
40 வயதுகளில் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல். இதைத் தவிர்க்க அளவுக்கு அதிகமான காப்ஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். அதோடு எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகையான உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் அடைப்புக்களை உண்டாக்கும். மேலும் இரத்த அழுத்த பிரச்சனையைத் தவிர்க்க உணவுகளில் உப்பைக் குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பானங்களில் சர்க்கரையையும் குறைத்துக் கொள்வது நல்லது.

தேவையான முன்னெச்சரிக்கைகள்
உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நல்ல ஊட்டச்சத்தை எடுப்பதோடு, போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சி, நல்ல மன அழுத்த மேலாண்மை, காப்ஃபைன் எடுப்பதைக் குறைப்பது மற்றும் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதைக் கைவிட வேண்டும். குறிப்பாக உடல் எடையை சரியாக பராமரித்தாலே பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம். அத்துடன் வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்க வழக்கமான சுகாதார சோதனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி உடல் ஆரோக்கியத்தை சோதனை செய்து வந்தால், பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் தீர்க்க முடியும்.



Click it and Unblock the Notifications











