For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்

எடைக்குறைப்பு பயணம் என்பது எப்போதும் சவால்கள் நிறைந்தது. நீங்கள் நினைத்த அளவிற்கு எடையைக் குறைக்கவும், உடலமைப்பை மாற்றவும் கடுமையான முயற்சியும், அர்ப்பணிப்பும் தேவை.

|

எடைக்குறைப்பு பயணம் என்பது எப்போதும் சவால்கள் நிறைந்தது. நீங்கள் நினைத்த அளவிற்கு எடையைக் குறைக்கவும், உடலமைப்பை மாற்றவும் கடுமையான முயற்சியும், அர்ப்பணிப்பும் தேவை. எடைக்குறைப்பு என்றால் அனைவரின் மனதிலும் முதலில் நினைவிற்கு வருவது பழச்சாறுகள்தான். பழச்சாறுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையையும் செய்கிறது.

Best Juices for Quick Weight Loss

நீங்கள் பசியாக உணரும்போது அல்லது ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டுமென்று ஏங்கும்போது பழச்சாறுகள் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் மற்றும் உங்கள் உணவில் சில சுவையான ஆனால் எடை இழப்புக்கு உகந்த பழச்சாறுகளை சேர்க்க விரும்பினால், உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த பதிவில் எடையை வேகமாக குறைக்க உதவும் பழச்சாறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு சாறு அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புக்காக அதிகளவு பரிந்துரைக்கப்படுவது, ஏனெனில் இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. ஆரஞ்சு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆரஞ்சுகளில் ஃபிளாவனாய்டுகளும் உள்ளன, இவை இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சிறந்த கலவைகள் ஆகும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் ஊட்டச்சத்து மதிப்பின் அடிப்படையில் மிகவும் பயனுள்ள காய்கறியாக கருதப்படுகிறது, ஏனெனில் இது வைட்டமின்கள் ஏ, கே, சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல தாதுப்பொருட்களை போதுமான அளவில் வழங்குகிறது. கேரட் ஜூஸ் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், பார்வையை மேம்படுத்துகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, சரும அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி சாற்றில் 92% நீர் உள்ளது, இது வயிற்றில் இலகுவானத தன்மை மற்றும் அதிக ஈரப்பதத்தை அளிக்கிறது. தர்பூசணியின் இயற்கையான இனிப்பு சுவையானது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தர்பூசணி சாறு, அன்றாட உணவில் எந்த வகையான பழச்சாறுகளையும் சேர்க்க விரும்புவோருக்கு ஏற்றது.

 க்ரான்பெர்ரி அல்லது குருதிநெல்லி ஜூஸ்

க்ரான்பெர்ரி அல்லது குருதிநெல்லி ஜூஸ்

குருதிநெல்லி ஜூஸில் புரோந்தோசயனிடின் என்ற மூலக்கூறுகள் நிரம்பியுள்ளன, இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் கடுமையான பிடிப்புகளை அனுபவிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த சாறு மிகவும் பயனுள்ள சாறாக இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காய் ஜூஸ்

நீங்கள் எடையை குறைக்க தேர்வு செய்ய வேண்டிய மற்றொரு சாறு சுரைக்காய் சாறு ஆகும். லௌகி என்றும் அழைக்கப்படும், சுரைக்காய் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய காய்கறி ஆகும். இது எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் சுரைக்காய் கசப்பு சுவை கொண்டதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் கசப்பான சுரைக்காய் கடுமையான உணவு விஷத்தை ஏற்படுத்தும் நச்சு கலவைகளைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் சுரைக்காய் சாறை கலந்து சுவையை மேம்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Juices for Quick Weight Loss

Read to know which fruit or vegetable juice is best for quick weight loss
Story first published: Wednesday, January 25, 2023, 18:11 [IST]
Desktop Bottom Promotion