Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
வெயிட்டை குறைக்க, ஆசைப்பட்டத சாப்பிட முடியலையேனு கவலையா? இத படிங்க இனி ஹேப்பி தான்…
அதிக எடை குறைக்க வேண்டும் என்றால் குறைவான கலோரிகளை சாப்பிட வேண்டும். தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் நாம் முழு கவனத்தையும் செலுத்தி நமது எடையை குறைக்க வேண்டும்.
உடல் எடை குறைப்பு என்பது தற்காலத்தில் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு சாதாரண செயல் ஆகிவிட்டது. தங்களது உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாத காரணத்தாலும், உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதாலும் அநேகருக்கு அதுவும் இளம்வயதிலேயே உடல் எடை அதிகமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விதமான உடல் எடை குறைப்பு முறைகளை பின்பற்றுகின்றனர். உடற்பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு என பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். அதிலும், உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் அதிலேயே ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கலோரிகள் டயட்.

எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்கின்ற சதவிகிதத்தை பொருத்து நாம் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவு குறையும். அதிக எடை குறைக்க வேண்டும் என்றால் குறைவான கலோரிகளை சாப்பிட வேண்டும். தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் நாம் முழு கவனத்தையும் செலுத்தி நமது எடையை குறைக்க வேண்டும். அந்த வகையில் 50 கலோரிகள் உணவு டயட்டில் சேர்த்துக் கொள்ளக்கூடிய சில உணவு வகைகளை இங்கே பட்டியவிடப்பட்டுள்ளது . அவற்றை படித்து உங்களது டயட்டில் அவற்றையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாமே...

காளான்
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு அசைவ உணவின் சுவையை தரக்கூடியது தான் இந்த காளான். டயட் இருப்பவர்களுக்கு நாவிற்கு சுவையாக எதாவது சாப்பிட சொல்ல மாட்டார்களா என ஏக்கத்தோடு இருந்தால் அவர்களுக்கான ஒரு நல்ல செய்தி தான் இந்த காளான். ஒரு சிறிய கப் காளான் சாப்பிட்டால் 50 கலோரி டயட் உள்ளவர்களுக்கு நிச்சயம் பொருத்தமானது. இதிலுள்ள மற்றொரு பயன் என்னவென்றால் ஒரு சிறிய கப் காளான் சாப்பிட்டால் கூட நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. அதுமட்டுமன்றி, மற்ற உணவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது காளானில் புரதங்களும், நார்ச்சத்தும் அதிகமாகவே உள்ளது.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டை யாருக்கு தான் பிடிக்காது. உடல் எடை குறைக்க விரும்பி டயட் இருப்பவர்கள் கூட முட்டை சாப்பிடலாம். ஆனால், வெள்ளைக்கருவை மட்டும். 50 கலோரி டயட் இருப்பவர்கள், கலோரி அதிகமாகி விடுமோ என்ற எந்த கவலையும் இல்லாமல் முட்டையை தாராளமாக சாப்பிடலாம். முட்டையில் புரதச்சத்து இருப்பதாலும், கொழுப்புசத்து இல்லாததாலும் இதை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூட விரும்பி சாப்பிடலாம்.

தக்காளி
டயட் இருப்பவர்களுக்கு சாலட் சாப்பிட வேண்டும் என தோன்றினால் தக்காளியை மறந்துவிட வேண்டாம். ஒரு தக்காளியில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும், தக்காளியில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் என பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதால் இருதய பிரச்னை உள்ளவர்கள் இது ஒரு அருமருந்து என்றே கூறலாம். ப்ரஷ் தக்காளியில் குறைவான கார்போஹைட்ரேட்டு உள்ளது. அதிகப்படியான நீர்ச்சத்தை தன்னுள் கொண்ட தக்காளியை டயட் இருப்பவர்கள் சேர்த்துக் கொண்டால், உடலின் வறட்சி ஏற்படுவதை சுலபமாக தடுத்திடலாம்.

கிவி பழம்
50 கலோரி மற்றும் பழ டயட் மேற்கொள்பவர்கள் நிச்சயம் கிவி பழத்தை சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால், கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை சாப்பிடுவதால் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். யுனைடட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் சொன்னதுபடி, 50 கிராம் கிவி பழத்தில் வெறும் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனை இனிப்பு வகைகளில் சேர்த்தோ, ஸ்மூத்தியாகவோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

உலர்திராட்சை
கலோரிகளில் அதீத கவனம் கொண்டுவர்களுக்கு உலர்திராட்சை மிகவும் ஏற்ற ஒன்று என அனைவருக்கும் தெரிந்தது தான். வாயை அசை போட்டுக் கொண்டே இருப்பது என்பது மனித வாழ்வின் ஒரு மறுக்க முடியாத செயலாகும். அதுவும் வெட்டியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டுமென்று தான் பெரும்பாலானோருக்கு தோன்றும். டயட் இருப்பவர்களுக்கு ஒருவேளை அப்படி தோன்றினால் ஒரு கை நிறைய உலர்திராட்சையை எடுத்து சாப்பிடுங்கள். இயற்கை இனிப்பு சுவை, கொழுப்பு அற்றது மற்றும் அதிகமாக ஆன்டிஆக்சிடன்ட் கொண்ட இந்த உலர்திராட்சையை உடல் எடை மீது அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications
