For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிடுங்க...

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டுமே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டின் கலவையும் உடல் எடையை எளிதாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.

|

இன்று ஏராளமான மக்கள் சந்திக்கும் ஓர் முதன்மையான முக்கிய பிரச்சனையாக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளது. ஒருவரது உடலின் கூடுதல் எடையை, குறிப்பாக வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வயிற்றைச் சுற்றியிருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை, சரியான உணவுப் பழக்கம் மற்றம் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அகற்றலாம். அதே சமயம் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பயனளிக்கும் சில தந்திரங்களும், டிப்ஸ்களும் உள்ளன. குறிப்பாக இயற்கை வைத்தியங்களுள் சிறப்பானது என்று பார்த்தால், அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையைக் கூறலாம்.

Apple Cider Vinegar And Baking Soda For Weight Loss

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டுமே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டின் கலவையும் உடல் எடையை எளிதாக குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு அவை உடலில் கார வளர்சிதை மாற்ற சூழவை உருவாக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உதவுவதுடன், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் கலவை எவ்வாறு செயல்படுகிறது என்று யோசிக்கிறீர்களா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்

ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்

ஆப்பிள் சீடர் வினிகரில் எடையைக் குறைப்பதற்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதன் மூலமும், கொழுப்புக்களை கரைவதை அதிகரிப்பதன் மூலமும், வயிற்று மற்றும் கல்லீரலில் கொழுப்பு சேமிப்பைக் குறைவ்வான் மூலமும், பசியின்மையை அடக்குவதன் மூலமும், கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. அதோடு அசிட்டிக் அமிலம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும்,கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், வைரஸை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

பேக்கிங் சோடாவின் நன்மைகள்

பேக்கிங் சோடாவின் நன்மைகள்

அதேப் போல், பேக்கிங் சோடா கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் பொருளாக கூறப்படுகிறது. சில ஆய்வுகள் பேக்கிங் சோடா அஜீரண கோளாறைத் தடுக்கவும், கொழுப்பு செல்களை உடைத்தெறியவும் உதவி தொப்பையைக் குறைக்க உதவுவதைக் காட்டுகின்றன.

ஆய்வு பரிந்துரைப்பது

ஆய்வு பரிந்துரைப்பது

1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் பேக்கிங் சோடாவைக் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடிப்பதால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம், கலோரி அளவைக் குறைக்கலாம் மற்றும் வயிறு நிறைந்த உணர்வை மேம்படுத்தலாம் என்று ஆய்வு கூறுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் வனேசா ரிசெட்டோ "இது ஏன் நிகழ்கிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆப்பிள் சீடர் வினிகர் சற்று கசப்பாக இருப்பதால், அவை சாப்பிடுவதை குறைக்க வைக்கலாம்" என்று கூறுகிறார்.

எடை குறைக்கும் பானத்தைத் தயாரிப்பது எப்படி?

எடை குறைக்கும் பானத்தைத் தயாரிப்பது எப்படி?

எடையைக் குறைக்க உதவும் இந்த பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது.

* ஒரு டம்ளரில் 2 ஸ்பூன் ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகரில், 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த டம்ளர் முழுவதும் நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

இந்த பானத்தில் செரிமானத்தை மேம்படுத்தும், பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகள் அடங்கியுள்ளதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

உடல் எடையைக் குறைக்க இந்த பானத்தைக் குடிக்க நினைத்தால், முதலில் உங்கள் மருத்துவரை அணுகி கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக சர்க்கரை நோய், செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த பானத்தைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்க வேண்டியது முக்கியம்.

குறிப்பு

குறிப்பு

இந்த இயற்கை வழி எடை இழப்புக்கான விரைவான தீர்வு இல்லை. வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வது ஒருவரது எடை இழப்பை அடைய மற்றும் பராமரிக்க உதவும் சிறந்த வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Apple Cider Vinegar And Baking Soda For Weight Loss

Turns out, apple cider vinegar and baking soda make for a great weight loss drink that can help you get rid of that unhealthy belly fat, while also providing some health benefits.
Desktop Bottom Promotion