Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா?
உடற்பயிற்சி எவ்வளவுதான் நன்மைகளை வழங்கினாலும் அது சரியான நேரத்தில் பண்ணும்போதுதான் கிடைக்கும். தவறான நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி எந்த நன்மைகளையும் வழங்காது.
நமது ஆரோக்கிய வாழ்வில் உணவிற்கு அடுத்து முக்கிய இடத்தை வகிப்பது நாம் செய்யும் உடற்பயிற்சிகள்தான். நமது உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரிகளை வெளியேற்ற, கொழுப்புகளை கரைக்க, கச்சிதமான உடலமைப்பை பெற என அனைத்திற்கும் உடற்பயிற்சிகள் அவசியமாகும்.

உடற்பயிற்சி எவ்வளவுதான் நன்மைகளை வழங்கினாலும் அது சரியான நேரத்தில் பண்ணும்போதுதான் கிடைக்கும். தவறான நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி எந்த நன்மைகளையும் வழங்காது மேலும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த நேரங்களில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நல்லதல்ல என்று பார்க்கலாம்.

காலை எழுந்தவுடன்
காலை நேர உடற்பயிற்சிகள் எப்பொழுதும் சிறப்பான பலன்களை தரக்கூடியவை. ஆனால் எழுந்த சில நிமிடங்களிலேயே உடற்பயிற்சி செய்ய துவங்குவது உங்களுக்கு நல்லதல்ல. இரவு முழுவதும் எடுத்த ஓய்விலிருந்து வெளியே வர உங்கள் உடலுக்கு சிறிது கால அவகாசம் தேவை. உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்களும், ஆற்றலும் இருக்காது. எனவே உங்களுக்கு காயங்கள் ஏற்படகூட வாய்ப்புள்ளது.

இரவு மிகவும் தாமதமாக
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது உங்களால் முடியாத காரியமென்றால் மாலை நேரத்தில் செய்வது நல்லது. ஆனால் நீங்கள் தூங்க செல்லும் நேரத்திற்கும் உடற்பயிற்சிக்கும் இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு
நீங்கள் மேசை பணியில் இருப்பவராக இருந்தால் நாள் முடிந்தபின் நீங்கள் செய்யும் முதல்வேலை நகர்வதாகத்தான் இருக்கும். ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு உடனடியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு காயங்கள் ஏற்பட வழிவகுக்கும். ஒரு நிலையான தோரணையில் உட்கார்ந்திருப்பது மூட்டுகளை உறுதிப்படுத்தும் திசுப்படலத்தின் திறனைக் குறைக்கிறது. எனவே உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்னர் உங்கள் தசைகளை நன்கு தளர்வாக்கி கொள்ளவும்.

வெறும் வயிற்றில்
நமது உடல் இயங்கவும் எரிபொருள் தேவை, அது நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து நமக்கு கிடைக்கிறது. நீங்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் அந்த நாள் முழுவதும் சோர்வாகவும், குறைவான செயல்திறனுடனும் இருப்பீர்கள். காலையோ, மாலையோ வெறும் வயிற்றில் ஒருபோதும் உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது.

அதிக உணவிற்கு பிறகு
உடற்பயிற்சிக்கு முன் ஏதாவது சாப்பிட்டிவிட்டு உடற்பயிற்சி செய்ய துவங்குவது நல்லது, ஆனால் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் உடலில் 500 கலோரிகள் சேர்ந்த பிறகு உங்கள் உடலுக்கு அது செரிமானம் அடைய சிறிது காலம் தேவைப்படும். இந்த நேரத்தில் உங்கள் மூளை உடலின் பல்வேறு பாகங்களுக்கு அதிக இரத்தத்தை அனுப்பும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தசைபிடிப்பு மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.

தூக்கம் இல்லாதபோது
உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வான ஆறு மணி நேரம் முதல் 7 மணி நேர தூக்கம் கிடைக்காத போது உங்கள் உடற்பயிற்சியை போதுமான அளவு ஓய்வு கிடைக்கும்வரை தள்ளிப்போடவும். உங்கள் உடலுக்கு ஓய்வு எடுப்பதற்கான சிக்னல் கொடுத்தால் உடனடியாக அதை எடுப்பதுதான் நல்லது.

தீவிர மனஅழுத்தத்தில்
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது உங்களை மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும். ஆனால் தீவிர மனஅழுத்தத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பதுதான் நல்லது. மனஅழுத்தத்தில் இருக்கும் போது உங்களுக்கு கவனமின்மை இருக்கும். இந்த சமயத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல.



Click it and Unblock the Notifications