For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்... வெறும் 2 ரூபாய் தான் செலவு...

இஞ்சி பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவது நமக்குத் தெரிந்ததே. ஜீரண சக்தியை அதிகப்படுத்துதல், மலச்சிக்கல், வலி ஆகியவற்றை தீர்க்க உதவுகிறது. அதனால் இஞ்சி குடிப்பது மிகவும் நல்லது.

By Gnaana
|

காலையில் இஞ்சியை உணவில் தினமும், சேர்க்கணும் என்பது மூத்தோர் வாக்கு, அதன் மூலம், உடலின் செரிமான ஆற்றல் அதிகரிக்கும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைக்கும். சோர்வை நீக்கி, பசியைத் தூண்டும் ஆற்றல்மிக்கது, இஞ்சி.

health tips

தமிழரின் பாரம்பரிய உணவுப்பொருளாகவும், தினசரி சமையலில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் விளங்கும் இஞ்சியில் உள்ள இயற்கை தாதுக்களே, மனிதர் உடல் நலனைக் காப்பதில், ஆற்றல்பெற்று விளங்குகின்றன. தற்காலத்தில், இஞ்சியின் தினசரி பயன்பாட்டில், இஞ்சி குடிநீர், சிறப்பான பலன்களை அளிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை மூலிகை

இயற்கை மூலிகை

இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மூலிகைகளை, நாம் உடல்நலனுக்காகப் பயன்படுத்தினாலும், எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். அந்த மூலிகையால், உடலுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடுமோ என. ஆயினும், அதைப்போல யாரும், இஞ்சியையும், இஞ்சி குடிநீரையும் நினைக்கப்போவதில்லை, இருந்தாலும், இஞ்சியை எல்லோரும் பயன்படுத்தமுடியுமா என்பது, இன்னமும் ஆய்விலேயே இருக்கிறது எனபதும், உண்மையே...

இஞ்சி குடிநீர்

இஞ்சி குடிநீர்

இஞ்சியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நன்மைகளை விட, இஞ்சிக் குடிநீரைப் பருகுவதால், ஏராளமான நன்மைகளை அடையமுடியும் என்கிறது, தற்கால மருத்துவம். தினமும் சாப்பிடும் கெமிக்கல் கலந்த உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளால், உடல் நலம் கெடும்போது, அதைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க, இஞ்சிக் குடிநீர் நன்மைகள் செய்யும் என்கின்றனர்.

நாட்பட்ட தசை வீக்கங்களைக் குணமாக்கும், இஞ்சிக் குடிநீர்.

MOST READ: இந்த தோலை தூக்கி வீசிடாதீங்க... இத வெச்சு என்னலெ்லாம் செய்யலாம் தெரியுமா?... கேட்டா அசந்துடுவீங்க...

உணவு நச்சுக்கள்

உணவு நச்சுக்கள்

நாட்பட்ட உடல் வலி மற்றும் வீக்கங்களுக்கு, இஞ்சிக்குடிநீர் சிறந்த தீர்வுதருகிறது. உணவில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள், சத்து குறைந்த துரித உணவுகள் காரணமாக, உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து, வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் கட்டுப்பாடும், மன நிலை மாற்றமும் தேவைப்படும். உணவு நச்சுக்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், உருவாகும் நாட்பட்ட வீக்கத்தை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

உடல் வலி

உடல் வலி

அத்துடன் தசைகளில் ஏற்படும் வீக்கங்களால், சிலருக்கு தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அந்த வலியையும் போக்கும் வலி நிவாரணியாக, இஞ்சிக் குடிநீர் செயல்படுவதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலை கிருமிகளிலிருந்து காக்கும், வியாதி எதிர்ப்பு அணுக்களை, அதிகரிக்கும்.

ஞாபக மறதி

ஞாபக மறதி

இரத்தம் பாதிப்பதால் ஏற்படும், இதய நோய்கள், மூளையின் இரத்த நாள பாதிப்பால் ஏற்படும் பார்க்கின்சன் சின்ட்ரோம், அல்சைமர், ஹன்டிங்க்டன் நோய் போன்ற ஞாபக மறதி நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கிறது. ஆன்டி ஆக்சிஜன்ட் எனும், நோயெதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இதய பாதிப்பு மற்றும் மறதி நோய்களை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

மனச்சோர்வால், உடலும் சோர்ந்து, அதனால், நோயெதிர்ப்பு அணுக்களை அழிக்கும், நச்சு அமிலம் சுரக்கிறது. கடுமையான மனச்சோர்வுடன், புகை பிடித்தல், மது அருந்துவதன் காரணமாகவும், உடலில் நச்சு அமிலம் சுரக்கிறது.

இந்த நச்சுக்கள், உடலில் பரவி, உடல் நலத்தை கெடுக்க முயல்வதை, இஞ்சிக் குடிநீரில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல் தடுக்கிறது.

இத்துடன் சில ஆய்வுகள், இஞ்சிக் குடிநீர், சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கிறது, உடலில் தோன்றும் கட்டிகளை வளரவிடாமல் செய்து, கேன்சர் போன்ற நோய்களைத் தடுக்கிறது.

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் இஞ்சிக் குடிநீர்.

வாந்தி, குமட்டல் மற்றும் செரிமானமின்மையால் ஏற்படும் புளித்த எப்பத்தைப் போக்கும் இஞ்சி, மக்களின் நம்பிக்கைக்குரிய மருந்தாக, நமது நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும், இருக்கிறது. இஞ்சிக் குடிநீர், நாட்பட்ட சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சமநிலைப் படுத்துகிறது.

உடலில் தோன்றும் நச்சு கொழுப்பு மற்றும் சிறுநீரக கோளாறால், ஏற்படும் யூரியா உப்பு போன்றவை இரத்தத்தில் பரவி, இரத்த ஓட்டத்தை பாதித்து, இதய நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை, சீராக்குகிறது, இஞ்சிக் குடிநீர், என்கின்றன ஆய்வுகள்.

MOST READ: உங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா?... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க...

தொப்பையைக் கரைக்கும்

தொப்பையைக் கரைக்கும்

தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, தோப்புக்கரணம் போன்ற உடற்பயிற்சிகளும், சரியான முறையில் அமைந்த சத்தான சாப்பாடும், உடலில் கூடிய கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதில், துணைசெய்கின்றன. சாப்பிட்டபின் இதமான சூட்டில் பருகும் இஞ்சிக் குடிநீர், உண்ட சாப்பாட்டின் திருப்தியை, நீண்டநேரம் உடலுக்கு கொடுத்து, அடுத்த வேளை உணவை, குறைவாக சாப்பிட வைக்கிறது. மேலும், இரத்தத்தில் சரியான அளவில் உள்ள சர்க்கரை அளவும், உடல் எடையை கட்டுப்படுத்தி வைக்கிறது. மலை போல இருக்கும் எவ்வளவு பெரிய தொப்பையாக இருந்தாலும் தொடர்ந்து இந்த இஞ்சிக்குடிநீர் குடித்து வந்தால் இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

ஆரோக்கியமான உடலுக்கு, சரியான அளவில் உள்ள நீர்ச்சத்தும் ஒரு முக்கிய காரணமாக அமையும். தினமும் சராசரி அளவில் நீரைப் பருகவேண்டும், காலையில் ஒரு டம்ளர் இஞ்சிக் குடிநீரைப் பருகி வர, உடல் ஆரோக்கியம் வளமாகும்.

போதை தெளிய

போதை தெளிய

ஓவர் போதையால், நிதானம் இல்லையா? இஞ்சிக் குடிநீர் கொடுங்க.

சிலர், மிதமிஞ்சிய சோகத்தில் அல்லது உற்சாகத்தில், மதுவை, மூக்குமுட்டக் குடித்துவிட்டு, சுயநினைவின்றி, மயங்கி விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு, இஞ்சிக் குடிநீரில் சிறிது, எலுமிச்சை சாற்றை சேர்த்து, புகட்டிவர, ஆல்கஹாலின் வீரியத்தை, இஞ்சி எலுமிச்சை நீர் குறைத்து, போதையைத் தெளிய வைக்கும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இஞ்சியின் ஏராளமான நன்மைகளில், நாம் மறந்த சில குறைகளும் உண்டு.

அநேக நன்மைகளை இஞ்சி நமக்கு அளித்தாலும், சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. அதனால் இஞ்சியிலுள்ள நன்மைகளை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அளவோடு, முறையாக இஞ்சியை நாம் சேர்த்துக் கொண்டால் பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

இஞ்சியைக் குறைந்த அளவிலேயே, நான்கு கிராம் வரை, தினமும் சாப்பிட வேண்டும். நான்கு கிராமுக்கு மேல், இஞ்சியை சாப்பிட, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கர்ப்பிணிகள் வாந்தி குமட்டல் போன்ற சமயங்களில் மருத்துவரின் அறிவுரையுடன், ஒரு கிராம் வரை மட்டுமே, சாப்பிட வேண்டும்.

MOST READ: இந்த ஏழு ஊர்லயும் பாலியல் தொழில் படுஜோரா நடக்குதாம்...

யார் சாப்பிடக்கூடாது?

யார் சாப்பிடக்கூடாது?

இரண்டு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு, இஞ்சி மருந்து தேவையில்லை, தாய்ப்பாலே, அவர்களுக்கு, சிறந்த நோயெதிர்ப்பு கவசமாகத் திகழும்.

மேலும், குடல் புண் எனும் அல்சர், வாய்ப்புண், குடல் வால் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு மற்றும் மகவை சுமக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இஞ்சியை, மருத்துவரின் தக்க ஆலோசனைகளுக்குப் பின், எடுத்துக்கொள்வதே, நலம் தரும்.

இவ்வளவு தகவல்களை நாம் தெரிந்துகொண்டாலும், இஞ்சிக் குடிநீரை எப்படி செய்வது என்பதைமட்டும் , நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லையே!. இதோ, இஞ்சிக் குடிநீருக்கான செய்முறை.

இஞ்சிக் குடிநீர் செய்முறை

இஞ்சிக் குடிநீர் செய்முறை

தேவையான பொருள்கள்

1 துண்டு புதிய சதைப்பற்றுள்ள இஞ்சி

சுத்தமான தண்ணீர்

புதிய சதைப்பற்றுள்ள இஞ்சி கிடைக்காத சமயங்களில் இஞ்சி பவுடரைப் பயன்படுத்தலாம்.

செய்முறை

செய்முறை

நான்கு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு (அரைத்த பேஸ்ட்டாக) சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் அடுப்பை எரியவிடவும். நன்றாக கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, பத்து நிமிடங்கள் ஆற வைக்கவும். ஆறியபின், இஞ்சியைப் பிழிந்து, சக்கையை வெளியே எடுத்துவிட வேண்டும்.

குடிக்கும் முறை

குடிக்கும் முறை

இந்த இஞ்சிக் குடிநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சாப்பிட்டு முடித்தபின், இதை குடிக்கலாம். இந்த இஞ்சி குடிநீர் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி, உடல் வியாதிகளைப் போக்கி, தொ்பபையைக் கரைக்கும். தினமும் ஒரே மாதிரி குடிக்க சிரமமாக இருந்தால் சில சமயங்களில் இந்த இஞ்சித் தண்ணீருடன் சிறிது எலுமிச்சை சாறும் தேனும் சேர்த்துப் பருகலாம்.

MOST READ: இந்த 10 இடங்கள்தான் மாந்திரீகம் செய்வதற்கு பெயர் பெற்றதாம்... இங்க செய்ற மந்திரம் உடனே பலிக்குதாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are the Benefits and Side Effects of Ginger Water?

Ginger is more known for its benefits (than its side effects). It helps relieve digestive issues, motion sickness, and pain. The tea from ginger has benefits too.
Desktop Bottom Promotion