For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா டயட்டை ட்ரை பண்ணியும் எடை குறையவே இல்லையா?... அதுக்கு இந்த சின்ன தப்புதான் காரணம்...

எடை குறைப்பதற்காக டயட் பின்பற்றும் போது அதில் தோல்வி அடைவது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம். கடினமான டயட் பின்பற்றினாலும் சிலர் அதில் தோல்வி அடைகிறர்கள். டயட் தொடர்ந்து செய்து வரும் போதிலும் எடை குற

|

எடை குறைப்பதற்காக டயட் பின்பற்றும் போது அதில் தோல்வி அடைவது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம். கடினமான டயட் பின்பற்றினாலும் சிலர் அதில் தோல்வி அடைகிறர்கள்.

diet misktakes in tamil

டயட் தொடர்ந்து செய்து வரும் போதிலும் எடை குறையாமல் இருக்க பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
அப்படி அறிந்திருந்தால் மட்டுமே உங்களால் எளிதாக எடையை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைப்பு

எடை குறைப்பு

பல உடல்நலப் பிரச்சன்னைகளில் இருந்து தள்ளி இருக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் உடலில் இருக்கும் கூடுதல் எடையை இழக்க வேண்டும். ஏன்னெனில் உடலில் உள்ள கூடுதல் எடை தேவையில்லாத உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும், உடல் பருமன் போன்ற பல சுகாதார பிரச்சினைகள் தூண்டுகிறது.

இது போன்ற உடல்நலப் பிரச்சன்னையை தடுக்கவும் எடை இழப்பிற்கு நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு கடுமையான உணவு திட்டம்/ டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

என்னதான் கடுமையான டயட்டை பின்பற்றினாலும் சிலரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்த தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் தெரிந்தால் மட்டுமே உங்களால் எடையை குறைக்க முடியும்.

காரணங்கள்

காரணங்கள்

நீங்கள் டயட் பின்பற்றியம் எடை குறையாமல் இருக்கும் சில காரணங்களை இப்பொழுது பார்ப்போம்.

- எதிர்கால நிகழ்வுகளை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது

- அதிகமான டயட்டை பின்பற்றுவது

- ஆதரவான சுற்றுசூழல் இல்லாமை

- முன்கூட்டியே திட்டமிடாமல் இருப்பது

எதிர்கால நிகழ்வுகள்

எதிர்கால நிகழ்வுகள்

நாம் டயட்டை துவங்குவதற்கு முன் எதிர்காலத்தில் எந்த நிகழ்வும் (திருமணமோ அல்லது ஏதேனும் பயணங்களோ) இல்லாமல் இருக்கிறதா என்று ஒரு முறை யோசித்து பின்பு செயல்படவும். ஏன்னென்றால் இந்த நிகழ்வுகள் உங்கள் டயட்டை பாதிக்க கூடும்.

அதிகமான டயட்டை பின்பற்றுவது

அதிகமான டயட்டை பின்பற்றுவது

டயட்டை பின்பற்றுவோர் எடை குறையாமல் இருக்க ஓர் முக்கிய காரணம் அவர்கள் உணவில் உள்ள கலோரி உள்ள உணவை அதிக எ ளவில் தவிர்ப்பதே. பெரிய அளவிலான கலோரிகளை ஒரே நேரத்தில் தவிர்ப்பது உடலின் ஆற்றலை முற்றிலும் எடுத்துவிடுகிறது.

சுற்றுசூழல் இல்லாமை

சுற்றுசூழல் இல்லாமை

சிலர் சுய-உந்துதல் உடையவர்களாக உள்ளனர் மற்றும் அவர்கள் அனைத்தையும் எதிர்த்து நிற்கக்கூடியவர்கள். ஆனால் சிலரால் மற்றவர்களின் உதவி இருந்தால் ம் மட்டுமே பிறரை எதிர் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக உள்ளனர்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சிகளை மதிக்காத மக்களிடமிருந்து தூரமாக இருப்பது நல்லது.

திட்டமிடாமல் இருப்பது

திட்டமிடாமல் இருப்பது

உங்களால் பசிக்கு சிகிச்சையளிக்க முடியும். அதுவும் ஆரோக்கியமான முறையில். அதற்கு நீங்கள் உங்கள் உணவை முன்கூட்டியே தயாரிக்க வேண்டும். மேலும், உங்கள் கலோரிகளை சிறப்பாக கண்காணிக்க உணவை முன்கூட்டியே தயாரிப்பது நல்லது.

சிலர் கடுமையான டயட்டை பின்பற்றினாலும் உடல் எடையை குறைக்க முடியாது. இந்த தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை கண்காணித்து அதற்கேற்றமாரி உங்கள் டயட்டை பின்பற்றவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss: Reasons why people fail while following a diet plan to lose weight

following a stern diet some people fail to lose weight. There are many reasons for failing to lose weight despite following the diet plan
Desktop Bottom Promotion