7 நாட்களில் தட்டையான வயிறு வேண்டுமா? அப்ப இத தினமும் 2 டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அதற்காக கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்களா? அப்படி மேற்கொண்டதில் உங்கள் உடலின் பெரும்பாலான பகுதியில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து குறைந்திருக்கலாம். ஆனால் வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் மட்டும் கரைந்திருக்காது. இது பெரும்பாலான உடல் எடையைக் குறைக்க நினைப்போர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

உடலில் வயிற்றுப் பகுதியைத் தவிர, வேறு எந்த பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களையும் எளிதில் கரைக்க முடியும். அதற்காக வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்க முடியாது என்பதில்லை. ஆனால் அதற்கு சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

இருப்பினும் தமிழ் போல்ட் ஸ்கை வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கும் ஓர் அற்புதமான பானத்தை உங்களுக்காக கொடுத்துள்ளது. அந்த அற்புத பானம் என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த பானத்தைக் குடித்து தொப்பையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முன் ஏன் வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பது கடினமாக உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ளலாம். வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் கடினமாக உள்ளது?

ஏன் கடினமாக உள்ளது?

நாம் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், அந்த உணவு முதலில் வயிற்றுப் பகுதியைத் தான் அடைகிறது. மேலும் ஒருவர் குண்டாகிவிட்டால், அதன் முதல் அறிகுறி வயிற்றுப் பகுதியில் தான் தெரியும். வெறும் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்தவாறே வேலை செய்வது மட்டும் ஒருவரது தொப்பையின் அளவைப் பெரிதாக்குவதில்லை. உடலுழைப்பு இல்லாமல் இருக்கும் போது, தசைகளின் அடர்த்தி குறைந்து, உடலில் கலோரிகளை எரிக்கும் திறனும் குறையும். இதனால் தான் வயிற்றுப் பகுதியில் எளிதில் கொழுப்புக்கள் தேங்குகிறது.

இந்த நிலையில் நீங்கள் குறைவாக சாப்பிட்டு, அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும், உடனடி பலன் கிடைப்பதில்லை. ஒருவரது வயிறு வீங்கி இருந்தால், அது தோற்றத்தை மோசமாக காண்பிப்பதோடு, பல்வேறு மோசமான நோய்களின் தாக்கத்தையும் அதிகரிக்கும்.

உங்கள் தொப்பை குறைய மறுப்பதற்கான வேறுசில காரணங்கள் இதோ!

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலைக் குடிப்பதால், உடலில் கலோரிகளின் அளவு நீங்கள் நினைத்திராத அளவில் அதிகரிக்கும் என்பது தெரியுமா? முக்கியமாக ஆல்கஹால் ஒருவரது தொப்பையின் அளவைப் பெரிதாக்கும். இப்போது தெரிகிறதா, ஆண்களுக்கு தொப்பை வந்தால், அதை பீர் தொப்பை என்று ஏன் அழைக்கிறார்கள் என்று.

வயது

வயது

ஒரு பதின்வயது பெண்ணால், 30 வயது பெண்ணை விட வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும். இதற்கு எளிமையான காரணம் உள்ளது. வயது அதிகரிக்கும் போது, ஒருவரது உடலின் மெட்டபாலிச அளவு குறைவாக இருப்பதால், உடலில் கொழுப்புக்களை எரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இறுதி மாதவிடாய் போன்றவற்றால், எந்நேரதும் ஒருவித டென்சனுடன் இருப்பதால், வயிற்றைச் சுற்றி கொழுப்புக்கள் அதிகமாக தேங்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தால், சரியான பயிற்சியாளரின் உதவியுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மேற்கொள்ளும் அனைத்து பயிற்சிகளுமே அனைவருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல் வகை மற்றும் திறமை இருக்கும். உதாரணமாக, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களது இதயத்தின் செயல்பாடு சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில் இவர்கள் கடினமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடலில் உள்ள வலிமை முழுவதும் குறைந்து, உடற்பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே உடல் பலவீனமாகிவிடும். பின் வேறு சில உடல் பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டிவரும்.

உங்கள் தட்டில் என்ன உள்ளது என்று கவனிக்கவும்

உங்கள் தட்டில் என்ன உள்ளது என்று கவனிக்கவும்

தொப்பையைக் குறைப்பது குறித்து பேசும் போது, உணவுகள் தான் அந்த பேச்சில் அதிகம் இடம்பெறும். நாம் உண்ணும் பல ஜங்க் உணவுகளான சிப்ஸ், காற்றூட்டப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றால் வயிற்றில் அழற்சி ஏற்பட்டு, உடலில் கொழுப்பைக் கரைக்கும் திறன் குறைந்து, தொப்பை மேலும் பெரிதாகவே செய்யும். எனவே என்ன சாப்பிடுகிறோம் என்பதில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இன்றைய காலத்தில் ஒருவரது உடல் பருமனுக்கு மன அழுத்த அளவும் ஓர் முக்கிய காரணியாகும். வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறை, அதிகமான குடும்ப பொறுப்புகள், வீடு மற்றும் அலுவலக சூழல் போன்றவை ஒருவரது மன அழுத்த அளவை அதிகரிக்கிறது. ஒருவரது மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரித்து, உண்ணும் உணவுகளின் அளவை கண்டபடி அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

போதுமான தூக்கமில்லாமை

போதுமான தூக்கமில்லாமை

ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்த வழி போதுமான தூக்கம். ஒருவர் போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது உடலின் ஆற்றலைக் குறைத்து, கொழுப்புக்களைக் கரைக்கத் தேவையான சக்தி இல்லாமல், உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமாக உள்ளீர்களா?

ஆரோக்கியமாக உள்ளீர்களா?

நீங்கள் கடைசியாக எப்போது முழு உடல் பரிசோதனை மேற்கொண்டீர்கள்? ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்படி செய்வதால், உடலின் தற்போதைய நிலையை நன்கு தெரிந்து கொண்டு, ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முடியும். முக்கியமாக பெண்கள் இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டால், தைராய்டு பிரச்சனை, PCOS போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்று, உடல் பருமனடைவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான பானம் குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

* தேன் - 1 டீஸ்பூன்

* ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் 1 கப் ஆரஞ்சு ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொண்டால், எடையைக் குறைக்க உதவும் பானம் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

இந்த பானத்தை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடை மற்றும் தோற்றத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும். ஒருவேளை இந்த பானத்தை மீண்டும் குடிக்க நினைத்தால், இரண்டு வார காலம் இடைவெளி விட்டு, பின் மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்து குடியுங்கள்.

குறிப்பு

குறிப்பு

ஒருவேளை இந்த பானத்தைக் குடிக்கும் போது, நீங்கள் ஏதேனும் உடல் அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே இந்த பானத்தைக் குடிப்பதை நிறுத்திவிடுங்கள். பின் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகிடுங்கள். இதனால் சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Want A Flat Stomach In 7 Days? Just Drink This Twice A Day

Here is one of the best magical cure to lose belly fat. This is a simple solution that will drive all your weight loss worries away.
Story first published: Thursday, April 5, 2018, 11:40 [IST]