For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளிய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... ஒரு வாரத்துல கொழுப்பு கரைஞ்சு சிக்குன்னு ஆயிடுவீங்க...

தக்காளியின் மூலம் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பற்றியும் அதற்கான சில ரெசிபிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

|

இந்திய சமையலில் தக்காளியின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. தக்காளியின் வண்ணம், சுவை போன்றவை, அதனை ஒரு தவிர்க்க முடியாத பொருளாக மாற்றுகிறது. சாம்பார், ரசம் என்று அடிப்படை உணவிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக தக்காளி உள்ளது.

Tomatoes For Weight Loss

இந்திய உணவுகளிலும் இந்திய வீடுகளிலும் மட்டுமில்லாமல், ஸ்பானிஷ், இட்டாலியன், மெக்ஸிக்கன் வகை உணவுகளிலும் இந்த வண்ணமிகு பழத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

இதன் வண்ணம் மற்றும் சுவை மட்டும் இதனை முதன்மை பழமாக மாற்றுவதில்லை, இதன் ஊட்டச்சத்துகளும் கூட. பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவியல் வல்லுநர்கள் போன்றோர் பரிந்துரைக்கும் ஒரு முக்கிய பழம் தக்காளி. வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றின் ஆதாரமாக விளங்குவது தக்காளி. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தக்காளியில் லைகொபீன் அதிகமாக உள்ளது. இது உயர் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது, கண்களைப் பாதுகாக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் கே, பி 1, பி 2, பி 3 , பி 5 மற்றும் மினரல்கள் பொட்டாசியம், மங்கனீஸ், இரும்பு போன்றவற்றின் உள்ளிருப்பு தக்காளியை ஒரு அற்புத உணவுப்பொருளாக மாற்ற உதவுகின்றன. ஒரு 100 கிராம் தக்காளியில் 267மிகி அளவு பொட்டாசியம் உள்ளிருப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகப்பெரிய நன்மையைச் செய்கிறது. தக்காளியை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ள வேண்டியதன் மிக முக்கிய காரணம், தக்காளிக்கு கொழுப்பை எரிக்கும் தன்மை உண்டு.

காரணங்கள்

காரணங்கள்

தக்காளியில் கார்போஹைட்ரெட் மற்றும் கலோரி மிகவும் குறைவு. தண்ணீர் அளவு மிகவும் அதிகம். ஒரு நாள் முழுவதும் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வைப் பெற விரும்புவோர் , தக்காளியை எடுத்துக் கொள்ளலாம். எடை குறைப்பு செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் உணவு அட்டவணையில் தக்காளியை சேர்ப்பதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

குறைந்த கலோரி

குறைந்த கலோரி

100 கிராம் தக்காளியில் வெறும் 18 கலோரிகள் மட்டுமே உள்ளன என்பது ஆச்சர்யத்தை உண்டாக்கும் ஒரு செய்தியாகும். ஆகவே கலோரிகளைக் குறைத்து எடை குறைப்பு பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கு இது சிறப்பான தேர்வாகும்.

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம்

தக்காளியில் அன்டி ஆக்சிடென்ட் மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக லைகொபீன் ஒரு முக்கிய அன்டி ஆக்சிடென்ட் ஆகும். லைகோபீன் வளர்சிதை மாற்றத்தை இயற்கையாக உயிர்பிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவுத்தேடல்

உணவுத்தேடல்

தக்காளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுப்பதால் வயிறு நிரம்பிய உணர்வு நீண்ட நேரம் இருக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருந்தால் எந்த உணவையும் உட்கொள்ளும் ஆவல் குறையும்.

செரிமானம்

செரிமானம்

நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் தடுக்கப்பட்டு செரிமானம் எளிதாகிறது. அஜீரணம் அல்லது செரிமானம் தொடர்பான தொல்லைகள் எடை அதிகரிப்போடு தொடர்புடையது. உங்களிடம் நல்ல செரிமான அமைப்பு இல்லை என்றால், ஊட்டச்சத்தை உறிஞ்சும் உங்கள் திறன் தடுக்கப்படுகிறது , மேலும் உங்கள் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்குவது சிரமமாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கி தாமதப்படுத்துகிறது.

கொழுப்பை எரிக்கும் தன்மை

கொழுப்பை எரிக்கும் தன்மை

தக்காளி, கார்னிடின் என்னும் அமினோ அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது ஒரு கரிம மூலக்கூறு ஆகும். கொழுப்பு அமிலம் மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமினோ அமிலம் உடல் கொழுப்பு எரியும் திறனை மேம்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரெசிபிகள்

ரெசிபிகள்

1. தக்காளியை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம் ஆலிவ், பேசில் இலைகள் மற்றும் இதர காய்கறிகளுடன் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். அஜய் சோப்ரா அவர்களின் தயாரிப்பில் உருவான அருமையான சுவையான தக்காளி ஆலிவ் சாலட் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2. வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுவது தக்காளி சாறு. இந்த தக்காளியுடன் உங்கள் எடை குறைப்பிற்கு தேவையான ,மற்ற காய்கறிகள் மற்றும் மூலிகைகளை சேர்த்து வயிறு நிரம்ப உட்கொள்ளலாம். இரண்டு கப் தண்ணீர், தக்காளி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த விழுதுடன் இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த சாறு கெட்டியாக இருந்தால் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

3. தக்காளியை சூப் அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். கேரட் மற்றும் தக்காளி சூப் மிதமான அளவு உணவு விருப்பம் உள்ளவர்கள் விரும்பி சுவைக்கலாம்.

4. வறுத்த மீன் அல்லது கோழி, இதனுடன் வறுத்த தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உட்கொள்ளலாம்.

5. முளைவிட்ட தானியங்களின் மேல் தக்காளியை நறுக்கி போட்டு உண்ணலாம்.

6. காலையில் துரித உணவாக தக்காளி சேர்த்த ஆம்லேட் அல்லது தக்காளி வெள்ளரிக்காய் சான்ட்விச் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இன்னும் எதற்காக காத்திருக்க வேண்டும்? உடனடியாக மேலே கூறிய வகைகளில் தக்காளியை சுவைத்து உங்கள் எடையை குறைக்கலாம். ஆனால் அதன் அளவைக் குறித்து கவனம் கொள்ள வேண்டும். ஒவ்வாமை மற்றும் அதன் அளவு குறித்த கவனத்துடன் தக்காளியை சுவைக்கத் தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tomatoes For Weight Loss: 5 Reasons Why You Must Include Tomatoes In Your Weight Loss Plan

read on to know the tomato benefits for weight loss. Also included are tomato diet chart, tomato recipes.
Desktop Bottom Promotion