For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...

இங்கு கோடைக்காலத்தில் சரும புற்றுநோய் வராமல் தடுக்க சில டயட் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

கோடைக்காலம் வந்தாலே, பலரும் நன்கு காற்றோட்டம் கிடைக்கும் படியான மிகவும் தளர்வான மற்றும் உடலின் பெரும்பாலான பகுதி வெளியே தெரியுமாறான உடையைத் தான் அணிவோம். ஆனால் இனிமேல் அப்படி சுற்றும் முன் சற்று யோசியுங்கள். ஏனெனில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை. முக்கியமாக இந்த கதிர்கள் சரும புற்றுநோயை உண்டுபண்ணுபவை.

கோடைக்காலத்தில் வெப்ப மண்டல நாடுகளான இந்தியா போன்ற பகுதிகள் தாங்க முடியாத அளவில் மிகவும் வெப்பமாக இருக்கும். இத்தகைய வெப்பநிலையின் போது, ஏற்கனவே உடல் மிகவும் சூடாக இருக்கும். இந்நிலையில் உடலை முழுவதும் சூழ்ந்துள்ளவாறான உடையை அணிந்தால், அதிகம் வியர்த்து அதனாலேயே பெரும் அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்.

These Summer Diet Tips Can Help Prevent The Deadly Skin Cancer!

இருப்பினும், கோடைக்காலத்தில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் ஆபத்தை உண்டாக்குபவை என்பதால், வெளியே செல்லும் போது, தவறாமல் துணியால் தலையையும், கை மற்றும் கால்களுக்கு க்ளவுஸ், சாக்ஸ் போன்றவற்றை அணிந்து செல்லுங்கள். இதனால் புறஊதாக் கதிர்களின் நேரடி தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

சரும செல்களைத் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் சரும புற்றுநோய். எப்போது அசாதாரண வளர்ச்சி கொண்ட செல்கள் சரும செல்களுடன் காணப்படுகிறதோ, அது தான் சரும புற்றுநோய் ஆகும். சரும புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும். பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எப்போது ஒருவரது சருமத்தின் மீது அதிகளவு சூரியக்கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் படுகிறதோ, அவருக்கு சரும புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இக்கட்டுரையில் கோடைக்காலத்தில் சரும புற்றுநோய் வராமல் தடுக்க சில டயட் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சரும புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவான ஓட்ஸ்

காலை உணவான ஓட்ஸ்

காலை உணவு மிகவும் முக்கியமானது. இதை ஒருபோதும் தவறக்கூடாது. காலை உணவைத் தவிர்த்தால் அல்லது ஆரோக்கியமற்ற காலை உணவுகளான மஃபின்கள், செரில்கள், சமோசா, இனிப்புக்கள் போன்றவற்றை உட்கொள்ளலால், உடல் ஆரோக்கியம் தான் மோசமாக பாதிக்கப்படும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்றவை சரும செல்களுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமான உணவுகளான ஓட்ஸ் போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். முக்கியமாக சருமத்திற்கு அடியில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

தயிரை சாப்பிடவும்

தயிரை சாப்பிடவும்

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அன்றாடம் தயிரை உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் வீட்டிலேயே தயிரை தயாரித்து உட்கொள்வது நல்லது. குறிப்பாக கோடையில் தயிரை தவறாமல் உட்கொள்ள வேண்டும். தயிருக்கு உடலில் நல்ல பாக்டீரியக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் திறன் உள்ளது. ஆய்வுகளில் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் சிறப்பான அளவில் இருந்தால், சரும புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

காபி குடிக்கவும்

காபி குடிக்கவும்

காபி அதிகமாக குடிப்பது நல்லதல்ல என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாளைக்கு 1-2 கப் காபி குடிப்பதால் எவ்வித தீங்கும் நேரிடாது. சொல்லப்போனால், காபியை குடித்தால், அது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிப்பதோடு, சரும புற்றுநோயைத் தடுக்கும் திறனும் உள்ளது. ஏனெனில் இதில் புறஊதாக் கதிர்கள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.

கீரைகளை சாப்பிடவும்

கீரைகளை சாப்பிடவும்

பசலைக்கீரை, அஸ்பாரகஸ், புதினா போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இவற்றை அதிகம் உட்கொண்டால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அதிலும் கோடைக்காலத்தில் கீரைகளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சூரியக் கதிர்களால் சரும செல்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்பட்டு, சரும புற்றுநோயின் அபாயமும் குறையும்.

தக்காளியை சாப்பிடவும்

தக்காளியை சாப்பிடவும்

கோடைக்காலத்தில் ஒரு டம்ளர் குளிர்ச்சியான தக்காளி ஜூஸ் குடிப்பது, வெயிலுக்கு இதமாக இருக்கும். அதோடு தக்காளியை அன்றாட சாலட்டில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, அஜீரண கோளாறு தடுக்கப்படும் மற்றும் சரும புற்றுநோயும் தடுக்கப்படும். இதற்கு தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் தான் காரணம். இது தான் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

ஸ்நாக்ஸாக நட்ஸ் சாப்பிடவும்

ஸ்நாக்ஸாக நட்ஸ் சாப்பிடவும்

நம் அனைவருக்குமே நட்ஸ்களான பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் ஏராளமான வைட்டமின்கள், புரோட்டீன், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இந்த நட்ஸ்களை சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நட்ஸ் சரும புற்றுநோயைத் தடுக்க உதவும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்களுக்கும், புறஊதாக் கதிர்களுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு வளையம் போன்று இருக்கும்.

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீ குடிக்கவும்

இன்று ஏராளமானோர் காபி, டீ போன்றவற்றிற்கு மாற்றாக க்ரீன் டீ குடிக்கம் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். க்ரீன் டீயில் உள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, உடல் எடையையும் குறைக்கும். மேலும் இது ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பைத் தடுத்து, சரும புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Summer Diet Tips Can Help Prevent The Deadly Skin Cancer!

Here are some tips to prevent skin cancer. Follow these summer diet tips for healthy skin.
Desktop Bottom Promotion