Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இதையெல்லாம் தவிர்த்ததுனாலதான் தலைவர் இப்படி இருக்காரோ..!
ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலிற்காகவே பல கோடி மக்கள் இவருக்கு ரசிகராக உள்ளனர். இவர் இவ்வளவு ஸ்டைலாகவும், துடிப்புடனும் இருப்பதற்கு பல வகையான ரகசியங்கள் மறைந்துள்ளதாம்.
சூப்பர்ஸ்டார், தலைவர்... இப்படி பல பெயர்களின் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த அவர்கள். பல தரப்பட்ட படங்களில் மிகவும் ஸ்டையிலான நடிப்பு திறனை காட்டி வருகின்றார். இவரின் ஸ்டைலிற்காகவே பல கோடி மக்கள் இவருக்கு ரசிகராக உள்ளனர். இவர் இவ்வளவு ஸ்டைலாகவும், துடிப்புடனும் இருப்பதற்கு பல வகையான ரகசியங்கள் மறைந்துள்ளதாம்.

குறிப்பாக "பேட்ட" படத்தில் தலைவர் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். இன்று ரஜினிகாந்த் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள். இன்று தலைவர் இன்னும் இளமையாக இருப்பதற்கு பின் இருக்கும் ரகசியத்தை அறியலாம்.

சூப்பர்ஸ்டார்..!
ஒரு புகழ்..! ஒரு ஸ்டைல்..! ஒரு பெயர்..! ஒரு நடிகர்..! இப்படி பல புதிர்களுக்கு விடையாக உள்ளவர் ரஜினிகாந்த அவர்கள் தான். பல வகையான நடிப்பு திறனை தன்னுள்ளே வைத்து கொண்டிருப்பவர் தலைவர் அவர்கள். ஆரம்ப காலத்தில் இருந்தே தனது தனித்துவமான நடிப்பாற்றலாலே நம் எல்லோரையும் கட்டி போட்டவர் சூப்பர் ஸ்டார் தான்.

ஒரு ஸ்டைல்..!
இந்திய சினிமா துறையில் பலருக்கு பல வித நடிப்பு திறன் இருக்கின்றன. ஆனால், தலைவருக்கு என்று ஒரு தனி இடம் எப்போதும் இருக்கும். அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரின் ஸ்டைல் தான். இந்த ஸ்டைலை பெறுவதற்கு பல திரைப்படங்களில் அவர் தனது உடல் அமைப்பையும் மாற்றி கொண்டுள்ளார்.

இதையெல்லாம் சாப்பிட மாட்டாராம்..!
தலைவர் 40 வயதை கடந்த பிறகு ஒரு சில குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்த்து வருகிறாராம். குறிப்பாக சர்க்கரை சேர்த்த உணவுகள், பால் சார்ந்த உணவு பொருட்கள், ஆகியவற்றை அறவே ஒதுக்கி வைத்து விட்டாராம். இந்த உணவு கட்டுப்பாடுகளால் தான், 2.0 போன்ற படங்களில் அயராது உழைக்க முடிந்தது.

மரண மாஸ் தலைவர்..!
பொதுவாக தலைவர் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க ஒரு சில யோகா பயிற்சிகளை கடைபிடித்து வருகின்றாராம். இவை நிம்மதியையும், ஆழந்த தூக்கத்தையும் தந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இவரை வைக்கிறதாம்.

5-குள்ள என்னயிருக்கு..?
இன்றும் நடிப்பின் உச்சத்தில் தலைவர் இருக்க முக்கிய காரணம் அவரின் ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் தான். பேட்ட படத்தில் இவ்வளவு இளமையான துடிப்பான நடைபாற்றலை நாம் போஸ்டரில் காணுவதற்கு காரணமும் இந்த பழக்கங்கள் தான். அதாவது, தினமும் 5 மணிக்கு எழுந்து வாக்கிங், ஜாகிங், தியானம் போன்றவற்றை மேற்கொள்வது தான் இதற்கு காரணமாம்.

பேட்ட- ஸ்டைல்களின் ராஜா..!
வருகின்ற பொங்கல் அன்று ரிலீசாக இருக்கும் இந்த பேட்ட படத்தில் தலைவர் அல்ட்ரா ஸ்டைலாக இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் இந்த படத்தில் குத்தாட்டமும் இடம் பெற உள்ளதாம். தலைவர் தனது முழு ஸ்டைலுடனும் இருப்பதற்கு இன்னொரு காரணம் ஹிமாலயாவாம்..!

ஒவ்வொரு படத்திற்கு பிறகு..!
பொதுவாக தலைவர் நடித்த படங்களுக்கு ஒவ்வொன்றிற்கு பிறகும், ஆன்மீக பயணமாக ஹிமாலயா செல்வார். அதுவும் தனியாக செல்வார். இந்த பயணம் தான் அவரின் ஆழ்ந்த மன நிலையை தருகிறது என பல பேட்டிகளில் அவரே சொல்லி இருக்கின்றார்.

தலைவரின் ஸ்பெஷல் உணவா..!
தலைவரின் ரசிகர்கள் அவரின் மீது கொண்ட அதீத அன்பால், சென்னையில் ஒரு ஹோட்டலில் அவரின் பெயரை வைத்தே பல உணவுகளை தயாரிக்கின்றனர். ராஜாதி ராஜ தோசை, தளபதி பரோட்டா, அதிசய பிறவி இட்லி, எந்திரன் நூடுல்ஸ், மாப்பிள்ளை ஜிகிர்தண்டா, படையப்பா சுருட்டு பரோட்டா போன்ற அட்டகாசமான பெயர்களை வைத்துள்ளனர்.

விஞ்ஞான பார்வை..!
பெரும்பாலும் ஹிமாலய பயணம் என்பது பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். உண்மையில் நாம் தனியாக ஒரு பயணம் மேற்கொண்டால் அதில் பல வகையான நன்மைகள் உள்ளது என விஞ்ஞானிகளும் தெரிவிக்கின்றனர். இது போன்ற பயணங்கள் ஆழ்ந்த மன அமைதியையும், மன உறுதியையும், சிறப்பான செயல்திறனையும் தருமாம்.

பேட்ட- மரண மாஸ் எப்போ..!
தலைவரின் உடல் நலம் இப்பொது முன்பை விட படு மாஸாக உள்ளது என சினி வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.



Click it and Unblock the Notifications











