For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழம் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?.... இதோ அதுபற்றிய பகீர் உண்மைகள்...

நாம் வாழ்க்கையில் பல குழப்பமான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறோம். சில பொருட்களை பயன்படுத்துவதற்கான சரியான காரணம் தெரியாமல் இருந்து வந்திருக்கிறோம்.

|

நாம் வாழ்க்கையில் பல குழப்பமான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறோம். சில பொருட்களை பயன்படுத்துவதற்கான சரியான காரணம் தெரியாமல் இருந்து வந்திருக்கிறோம். எலும்பும் தோலுமான ஒருவரை பார்க்கும்போது, வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிட்டால் விரைவில் குண்டாக மாறலாம் என்று கூறுவோம்.

குண்டாக இருப்பவர் டயட்டில் இருக்கும்போது, ஊட்டச்சத்து நிபுணர் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுமாறு கூறுவார். ஆக, எடை அதிகரிக்கவும் வாழைப்பழம், எடை குறைக்கவும் வாழைப்பழம், என்ன தலை சுற்றுகிறதா? வாழைப்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா அல்லது எடை குறையுமா என்பது ஒரு மாயமாகவே உள்ளது.

எடையைக் குறைக்கும் வாழைப்பழம்

சரி, விளக்கத்திற்கு இப்போது வருவோம். வாழைப்பழத்தால் எடை குறைக்கவும் செய்ய முடியும். எடையை அதிகரிக்கவும் செய்ய முடியும். இரண்டு விஷயங்களிலுமே வாழைப்பழத்தை நம்பி கையில் எடுக்கலாம். எடை குறைப்பா அல்லது அதிகரிப்பா என்பது நாம் உண்ணும் வாழைப்பழத்தின் எண்ணிக்கையில் உள்ளது.

வாழைப்பழத்தைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்தால் தானாகவே உங்கள் எடை குறையும். நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுடன் சேர்த்து ஐந்து அல்லது ஆறு வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது உங்கள் எடையை அதிகரிக்கும். எப்படி சாப்பிட்டாலும், வாழைப்பழம் என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு உணவுப் பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Banana A Weight Loss Or A Weight Gain Fruit?

Whenever people come across someone skinny, the first advice that they give is to consume a lot of bananas with milk.
Desktop Bottom Promotion