For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணுமா? பத்து நாள் டயட் பிளான் இதோ...

|

உடல் பருமனா? இனி அந்த கவலையே வேண்டாம்... பத்தே நாள்களில் வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொருவருக்கும் எடை குறைக்கும் வழிமுறை ஒவ்வொரு விதமானது, ஆனால் சிலர் அவர்களது வழிமுறையே சிறந்தது என்று கூறுவர்.

How to Lose Weight in 10 Days

பல சமயங்களில் தத்துவ முறைகள் பலன் தராது; உங்களுக்கான வழிமுறையை நீங்கள் கண்டறிய வேண்டும். உங்கள் பிரச்சனையின் ஆழத்தில் சென்று அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு துல்லியமான அணுகுமுறையை கையாள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்

டயட்

முதல் வேலையாக, உங்கள் மனதுக்குள் இருக்கும் தேவையில்லாத தவறான கருத்துக்ககளையும் வேண்டாத அறிவுரைகளையும் அகற்றுங்கள். பத்தே நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழிமுறையை நாங்கள் உங்களுக்கு கற்றுத் தருகிறோம். வள வள என்று படிக்க போர் அடிக்கிறதா? இந்த எளிதான பத்து முறைகளை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ந்து பத்து நாட்களுக்கு செய்ய வேண்டியவை இங்கு மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளன. இதை கவனமாக படித்து பின்பற்றுங்கள். உணவு முறையை குறைக்கவோ கூட்டவோ வேண்டாம், இதிலும் கவனமாக இருங்கள்.

நாள் 1

நாள் 1

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள பிரெஷ் பழங்களை உண்ணவும். உணவு மற்றும் ஸ்னாக்ஸ் கண்டிப்பாக இவையாக இருக்கவேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக நீர்ச்சத்தும், தேவையான ஊட்டச்சத்தும் உள்ளது, மேலும் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.

குறைந்த கலோரி உள்ள ஸ்நாக்ஸ் உண்ண வேண்டும் என்றால், பிரெஷ் பழங்களுடன், குறைந்த கொழுப்பு உள்ள தயிர் சேர்த்து, மிருதுவான பானம் செய்து பருகலாம். ஒரு டம்ளர் வாழைப்பழ சாறு அல்லது ஆப்பிள் சாறு பசியை அதிக நேரத்திற்கு கட்டுப்படுத்தும் என்பதால், உங்கள் 10 நாள் எடை குறைப்பு திட்டத்திற்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும்.

நாட்கள் 2 மற்றும் 3

நாட்கள் 2 மற்றும் 3

சைவத்திற்கு மாறுங்கள். எளிதாக எடையைக் குறைத்து விடலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் காய்கறிகளை மட்டும் உண்ணவும். ப்ரோக்கோலி, பசலைக் கீரை, கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் சத்தானவை மற்றும் 10 நாட்களில் எடையை குறைக்க உதவும். ஒரு கப் நறுக்கிய தக்காளி, வெள்ளரி, பச்சை காய்கறிகள் மற்றும் குடமிளகாய் சிறந்த ஸ்னாக்ஸ்சாகவும் எடை குறைக்க சிறந்த உணவாகவும் அமையும்.

நாட்கள் 4 மற்றும் 5

நாட்கள் 4 மற்றும் 5

உங்கள் காய்கறிகள் நிறைந்த டயட்டுடன் இரண்டு க்ளாஸ் பால் பருகவும் (காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர்). ஓட்ஸ், பார்லி, பிரவுன் ரைஸ், கோதுமை பிரட் போன்றவற்றை ஸ்னாக்ஸ் நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

நாட்கள் 6 மற்றும் 7

நாட்கள் 6 மற்றும் 7

ஒரு தட்டு நிறைய ஆரோக்கியமான உணவு உங்கள் 10 நாள் எடை குறைப்பு திட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். காய்கறிகளுடன் சேர்த்து கொழுப்பு குறைந்த தயிர், ஒரு முட்டை, பீன்ஸ், இரண்டு பிலேட் பாஸ்தா (250கி) அதனுடன் சேர்த்து தக்காளி சாஸ் மற்றும் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் பார்லி, ராஸ்பெர்ரி, பேரிக்காய், கோதுமை பாஸ்தா போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது அதிகநேரம் பசியை கட்டுப்படுத்தும். நார்ச்சத்து உள்ள உணவுகள், விரைவில் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, சீக்கிரமாக எடை குறைக்க உதவும்.

நாட்கள் 8 மற்றும் 9

நாட்கள் 8 மற்றும் 9

அளவாக உண்ணவும். இரண்டு துண்டு மீனுடன் காய்கறி சூப், குறைந்த அளவில் கொழுப்பு கொண்டது. வெளியிலிருந்து சூப் உண்கிறீர்கள் என்றால், அது பதப்படுத்தப்படாமல் இருக்க வேண்டாம், ஏனென்றால், பதப்படுத்தப்பட்ட உணவில் கலோரிகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கான்பிளவர் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரையில், வீட்டில் சிரமம் பார்க்காமல் 5 நிமிடம் செலவு செய்தாலே சுவையான, ஆரோக்கியமான சூப் கிடைக்கும்.

நாள் 10

நாள் 10

இந்த பத்து நாள் திட்டத்தை சரியாக பின்பற்றினீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு வேலை பின்பற்ற முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். அடுத்த பத்து நாட்களுக்கு மறுபடியும் முயற்சி செய்யுங்கள். எடையை குறைக்க மிகச்சிறந்த வழி, கண்டிப்பாக இவ்வளவு எடையை குறைத்தே தீருவேன் என்று தீர்மானமாக இருப்பது. உங்கள் குறிக்கோள் எந்த அளவுக்கு தெளிவாக உள்ளதோ அந்த அளவுக்கு பலனைக் காண்பீர்கள்.

இப்போது நீங்கள் பத்தே நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மகிழ்ச்சியாக முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Lose Weight in 10 Days at Home - try this diet menu

here we suggest 10 days diet menu for quick weight lose. pls try and see the amazing result.
Story first published: Wednesday, August 22, 2018, 17:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more