வாக்கிங் போறதுக்கு முன்னாடி மாம்பழம் சாப்பிட்டு போங்க... சீக்கிரம் வெயிட் குறைஞ்சிடும்...

By Suganthi Rajalingam
Subscribe to Boldsky

கோடை காலம் வந்துட்டாலே போதும் எங்கு பார்த்தாலும் கண்ணை பரிக்கும் மாம்பழ சீசன் தான் களைகட்டும். இந்த தித்திக்கும் மாம்பழத்தை சுவைப்பது என்பது எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான விஷயமும் கூட. இது சுவையில் மட்டும்மல்ல ஆரோக்கியத்திலும் கூட இதன் மகிமை மகத்துவமானது. ஆமாங்க இனி உங்கள் எடையை குறைக்க மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்வது, பிடித்தமான உணவுகளை சாப்பிட முடியாமல் டயட் இருப்பது போன்ற வேலைக்கே இனி இடமில்லை. உங்களுக்கு பிடித்தமான மாம்பழ சுவை கொண்டே உங்கள் உடலழகை பேணலாம்.

how to reduce weight loss using mango

பொதுவாக மாம்பழம் அதிகமாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் அதோடு மாம்பழம் அதிக இனிப்புச் சுவையுடையதால், உடல் எடையையும் அதிகமாக்கும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி வாங்க! மாம்பழத்தை கொண்டு எப்படி உங்கள் உடம்பை ஸ்லிம்மாக வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்களின் இருப்பிடம்

ஊட்டச்சத்துக்களின் இருப்பிடம்

எல்லாருக்கும் தெரியும் மா, பலா, வாழை என்ற மூன்று சீசன் பழங்களும் உடலுக்கு ரெம்ப முக்கியம் என்பது. மருத்துவர்களும் இதன் அருமையை எடுத்து கூறியிருப்பார்கள்.

அப்படிப்பட்ட மாம்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, நார்ச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி6, போலேட், மக்னீசியம், இரும்புச் சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

கிளைசெமிக் குறியீடு

கிளைசெமிக் குறியீடு

இந்த கிளைசெமிக் குறியீட்டின் மூலமாக உணவு நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை எந்த அளவு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டின் அளவு 41-60, சராசரியாக 55 ஆக உள்ளது. குறைந்த குறியீட்டு அளவு 55 யை கொண்டுள்ள உணவுகள் மிகவும் பாதுகாப்பானது. எனவே மாம்பழத்தை டயாபெட்டீஸ் நோயாளிகள் கூட போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

மாம்பழமும் எடை குறைவும்

மாம்பழமும் எடை குறைவும்

எல்லோரும் இதுவரை மாம்பழம் உடல் எடையை அதிகரிக்கும் என்றே நம்பி வந்தோம். ஏனெனில் இது நமக்கு அதிகமான கலோரியை வழங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு மீடிய வடிவ மாம்பழத்தில் 150 கிராம் அளவிற்கு கலோரிகள் அடங்கியுள்ளன.

ஆனால் நீங்கள் தினந்தோறும் உண்ணும் நொறுக்கு தீனிக்கு பதிலாக மாம்பழத்தை உண்டு வந்தால் கண்டிப்பாக உங்கள் எடை குறைவது நிச்சயம். உங்கள் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீணிகளுக்கு பதிலாக ஆரோக்கியமான மாம்பழத்தை எடுத்து பயனடையலாம்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்கள் முன்னாடி மாம்பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் ஆற்றலுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள இயலும். இதன் மூலம் வேகமாக உங்கள் உடல் எடையை குறைக்கலாம். அதிகமாக சிரமப்பட வேண்டிய அவசியம் இனி கிடையாது. சிலர் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் இல்லாதவராக்க கூட இருக்கலாம். அப்படி இருந்தால் அதை மாற்றிக்கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். அதேபோல், தினமும் இரண்டு வேளையோ ஒரு வேளையோ வாக்கிங் செல்லும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அப்படி வாக்கிங் செல்வதற்கு முன்னால் கட்டாயம் கொஞ்சம் கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள். மிக வுகமாக உங்கள் உடல் எடையில் மாற்றம் உண்டாகப் போவதை உணர்வீர்கள்.

செயற்கை முறை

செயற்கை முறை

மாம்பழத்தை சீக்கிரம் பழுக்க வைக்க நிறைய விற்பனையாளர்கள் கால்சியம் கார்பைடு என்ற செயற்கை முறையை மேற்கொள்கின்றனர். இந்த முறையால் நமக்கு நிறைய உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இப்படி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மேற்புறத்தில் கருப்பு வெள்ளை திட்டுகள் காணப்படும். மேலும் இது சுருங்கி இருக்கும்.

தகவல்கள்

தகவல்கள்

ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு நடந்த ஊட்டச்சத்து ஆராய்ச்சி கூறும் கருத்தாவது அதிக உடல் எடை கொண்ட மக்கள் குறிப்பிட்ட வகை பழங்களை அதிகளவில் எடுத்து கொள்ளும் போது அவர்களின் உடல் எடை குறைகிறது என்று கூறுகின்றனர். தினமும் 100 கிராம் அளவு பழங்களை எடுத்துக் கொள்ளும் போது ஆறு மாதத்தில் 0.3 கிலோ கிராம் அளவு உடல் எடையை குறைக்க இயலும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளுடன் மாம்பழத்தை சாப்பிட்டால் எந்த வித உடல் எடை மாற்றமும் ஏற்படாது. எனவே உங்கள் நொறுக்கு தீனிக்கு பதிலாக மாம்பழம் போன்ற பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும். உங்கள் உடலில் அதிகப்படியான ஆற்றலை எரித்து கலோரி பற்றாக்குறை உருவாக்க மாம்பழம் உதவுகிறது. அதன் மூலம் உடல் எடையும் குறைகிறது. என்ன! இன்னைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சிடலாமா?... நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா மாறித்தானே ஆகணும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    GoodNews: Your favourite fruit mango can help you lose weight

    Mango is the national fruit of India, it’s needless to mention how much we love eating it. But what if we tell you that this favorite fruit of yours with such delicious taste can also help you lose weight. Yes, it can! Read on to know what are the benefits of eating mangoes and how can it help one lose weight!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more