Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
இந்திய ஆண் மற்றும் பெண்களுக்கான சில எளிய எடை குறைப்பு திட்டங்கள்!
இங்கு இந்திய ஆண் மற்றும் பெண்களுக்கான சில எளிய எடை குறைப்பு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்படுகிறார்கள். ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பதற்கு நல்ல வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியமானதாகும். முக்கியமாக உடல் எடையைக் குறைப்பதற்கு மேற்கொள்ளும் டயட்டில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், உடல் ஆரோக்கியம் சிறப்பாக பராமரிக்கப்படும்.
இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான டயட் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் அனைத்து டயட் திட்டங்களுமே அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. மேலும் டயட்டில் இருப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதேப் போன்று டயட் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. சில வகை டயட்டுகளில் ஒரு நாளைக்கு 6 வேளை கூட சாப்பிட வேண்டியிருக்கும்.
சரி, இப்போது இந்திய ஆண் மற்றும் பெண்களுக்கான சில எளிய எடை குறைப்பு திட்டங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் உங்களுக்கு பிடித்த திட்டத்தைப் பின்பற்றி, உங்கள் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறுங்கள்.

GM டயட் திட்டம்
இந்தியர்களுக்கு உடல் எடையைக் குறைப்பதற்கு GM டயட் சிறந்ததாக இருக்கும். இது ஏழு நாள் டயட் திடடம். இந்த டயட் திட்டத்தினால் உடல் முழுமையாக சுத்தமாகும். இந்த டயட் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகள் எடுக்க பரிந்துரைக்கப்படும். இந்த டயட்டினால் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், வாழைப்பழம், பால், காட்டேஜ் சீஸ், சாதம் போன்ற உணவுகள் இடம் பெறும். இந்த டயட்டில் இருக்கும் போது குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியம். இந்த டயட்டை ஒருவர் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றினால், ஒரே வாரத்தில் 5-10 கிலோ வரை குறைக்கலாம்.

தென்னிந்திய டயட் திட்டம்
தென்னிந்தியர்களுக்கு ஏற்ற லேட்டஸ்ட் டயட் திட்டம் தான் இது. இந்த டயட்டில் தென்னிந்திய உணவுகளான இட்லி, சாம்பார், மோர் போன்ற சுவையான உணவுகள் இடம் பெறும், அதே சமயம் உடலை சுத்தமும் செய்யும். இவற்றில் கலோரிகளும் மிகவும் குறைவு. ஆகவே இந்த உணவுகளை உட்கொண்டால், உட்கொள்ளும் கலோரிகளின் அளவு கட்டுப்படும் மற்றும் இது உடல் எடையையும் எளிதில் குறைக்க உதவும்.

3 நாள் ஃபுரூட் டயட் திட்டம்
இந்த ஃபுரூட் டயட்டின் படி 2 மணிநேரத்திற்கு ஒருமுறை பழங்களை உட்கொள்ள வேண்டும். இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் மற்றும் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறையும். இந்த டயட்டில் சேர்க்கப்படும் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றச் செய்யும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த டயட்டில் பழங்களுடன், புரோட்டீன் ஷேக்குகள், ஒரு வேளை முழு சாப்பாடு மற்றும் காய்கறிகளையும் சாப்பிடலாம். இந்த டயட்டை ஒருவர் சரியாக பின்பற்றி வந்தால், 10 lb வரை எடையைக் குறைக்கலாம்.

5 ஃபேக்டர் டயட் மீல்
5 ஃபேக்ட்ர் டயட் என்னும் டயட் திட்டத்தில் 5 வகையான ஊட்டச்சத்துக்களான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன்கள், நீர்ச்சத்து மற்றும் கொழுப்புக்கள் இருக்கும். இந்த டயட் திட்டத்தின் படி ஒரு நாளைக்கு 5 வேளை உணவை உட்கொள்ள வேண்டும். அதேப் போல் 5 வகையான உடற்பயிற்சி திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் இடையே 5 நிமிட இடைவெளி விட்டு தினமும் 5 உடற்பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

5 நாள் ஆப்பிள் டயட் திட்டம்
ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இப்பழத்தில் கலோரிகளும் குறைவு. மேலும் ஆப்பிள் இயற்கையாக மலமிளக்கும் பண்புகள் உள்ளன மற்றும் இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவி, செரிமான மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கும்.

7 நாள் திரவ டயட் திட்டம்
இந்த திரவ டயட் திட்டத்தில் அதிகளவிலான நீர், புரோட்டீன் ஷேக்குகள், ஜூஸ்கள் மற்றும் இதர பானங்களைப் பருக வேண்டும். இந்த திரவங்கள் உடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, புத்துணர்ச்சி அளிக்கும. திரவ டயட்டை மேற்கொண்டால், அது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க செய்வதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். இந்த திரவ டயட்டை மேற்கொள்வதால் ஒருவரது உடல் எடை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

7 நாள் டயட் திட்டம்
ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட, ஜங்ன் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுளை உட்கொண்டால், அது உடலில் கொழுப்புக்களைத் தேங்கச் செய்யும். இந்த டயட் திட்டமானது சரியான உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவதோடு, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தும். மேலும் இந்த டயட்டினால், உடலில் உள்ள கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இந்த டயட்டை ஒருவர் பின்பற்றும் போது, தோல் நீக்கப்பட்ட இறைச்சி, சிக்கன், மீன், ஆர்கானிக் காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியிருக்கும். அதோடு இந்த டயட்டை பின்பற்றும் போது, தவறாமல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இதனால் விரைவில் தட்டையான வயிற்றைப் பெறலாம்.

1200 கலோரி டயட் திட்டம்
இந்த டயட் திட்டத்தில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இந்த டயட் திட்டத்தின் நோக்கம் ஒரு நாளைக்கு 1200 கலோரிகளை எரிப்பதாகும். இந்த டயட்டைப் பின்பற்றுவதால், உடல் ஆரோக்கியம் தக்க வைக்கப்படுவதோடு, நல்ல பிட்டான தட்டையான வயிற்றையும் பெறலாம். முக்கியமாக இந்த டயட்டை சரியாக பின்பற்றி வந்தால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறையும்.



Click it and Unblock the Notifications











