For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்கவிளைவுகள் இல்லாமல் ஒரே வாரத்தில் 3-5 கிலோ குறைக்க உதவும் நிருபிக்கப்பட்ட எளிய டயட்

இந்த டயட் நீங்கள் பட்டினி கிடக்காமல் ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடையை குறைக்க உதவும்.

|

எடைஅதிகரிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். எடை குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் அது அனைவராலும் முடிவதில்லை. எடையை அதிகரிப்பது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம், ஆனால் அதனை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

diet plans to lose weight in 7 days without starving yourself

எடையை குறைப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் பல முறைகள் பெரும்பாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சீரான அதேசமயம் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், மிதமான உடற்பயிற்சியுமே உங்கள் எடையை குறைப்பதற்கும், எடையை பராமரிப்பதற்கும் போதுமானவை. இந்த பதிவில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஒரே வாரத்தில் எடையை குறைக்கும் ஆரோக்கியமான உணவுமுறையை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்

டயட்

உடல் எடையை குறைக்க ஆசையா? அதற்கு ஆரோக்கியமான ஒரு டயட் உள்ளது. இந்த டயட்டில் நீங்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. இந்த டயட் நீங்கள் பட்டினி கிடக்காமல் ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடையை குறைக்க உதவும், மேலும் இந்த டயட் மூலம் உங்கள் செரிமான மண்டலம் சீராக்கப்படுவதுடன் உங்கள் சருமமும் பொலிவு பெரும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

திங்கள்

திங்கள்

உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை வெளியேற்ற முதலில் நீங்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை முதலில் வெளியேற்ற வேண்டும். அதற்கான வேலைகளை திங்கள் கிழமையன்று செய்ய வேண்டும். திங்கள் கிழமை பழ டயட்டை நீங்கள் செய்யவேண்டும், இது உங்களக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது சிட்ரஸ் பழங்களை. அதற்கு சிறந்த பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் இதர சிட்ரஸ் பழங்கள்.

எப்படி செய்ய வேண்டும்?

எப்படி செய்ய வேண்டும்?

உங்கள் நாளை இரண்டு ஆப்பிள் மற்றும் ஒரு மாதுளையுடன் தொடங்கவும். அந்த நாளின் இறுதியில் மொத்தத்தில் நீங்கள் குறைந்தது 4 ஆப்பிள், 4 ஆரஞ்சு, ஒரு சிறிய தர்பூசணி மற்றும் 2 மாதுளைகள் சாப்பிட்டிருக்க வேண்டும். இவற்றை ஜூஸாக குடிக்கக்கூடாது. குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும். 7 நாட்களும் காலை உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேநீர் கலந்து குடிக்கவும்.

MOST READ: அனைத்து மதத்தினரும் வழிபடும் ஷீரடி சாய்பாபா உண்மையில் எந்த மதத்தை சேர்ந்தவர் தெரியுமா?

செவ்வாய்

செவ்வாய்

டயட்டின் இரண்டாவது நாளான செவ்வாய் கிழமையன்று நீங்கள் காய்கறிகளை மட்டும்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம் அல்லது வேகவைத்து உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடலாம். வெண்ணெய், பால், எண்ணெய் என எதையும் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அந்த நாளை இரு வேகவைத்த உருளைக்கிழங்குடன் தொடங்குங்கள். குறைந்தது 10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். ஒருவேளை கூட சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். கேரட், முள்ளங்கி, வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி தக்காளி காய்கறிகளை சாப்பிடுங்கள்.

புதன்

புதன்

புதன் கிழமையன்று நீங்கள் விரும்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்கள் விரும்பும் அளவு சாப்பிடலாம். ஆனால் சில விதிமுறைகளை மறந்துவிடக்கூடாது. எண்ணெய், சீஸ் போன்ற பொருட்களை ஒருபோதும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. வேகவைத்த காய்கறிகள் அல்லது பச்சையா காய்கறிகளை சாப்பிடலாம். பழச்சாறு குடிக்கக்கூடாது. பழங்கள் மட்டும்தான் சாப்பிடவேண்டும். உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் சேர்த்துக்கொள்ளகூடாது. புதன் கிழமையன்று 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வியாழன்

வியாழன்

10 வாழைப்பழங்கள் மற்றும் 3 கிளாஸ் பால் மற்றும் ஒரு டயட் சூப் சாப்பிடவேண்டும். இது சற்று கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் ஒருவர் சராசரியாக சாப்பிடும் அளவை விட இது மிகவும் குறைவானதாகும். வியாழக்கிழமை 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சூப் தயாரிக்கும் முறை

சூப் தயாரிக்கும் முறை

கலோரிகள் குறைவாக உள்ள சூப் தயாரிக்க தேவையானவை 750 மிலி தண்ணீர், 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 3 தக்காளி, 1 கேரட் மற்றும் பாதி முட்டைகோஸ். இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும்.

MOST READ: PUBG கலாட்டா! தெறிக்கவிட்ட புதுமண தம்பதி!!

வெள்ளி

வெள்ளி

நன்கு நாட்கள் டயட்டில் நீங்கள் 2 முதல் 3 கிலோ வரை குறைந்திருப்பீர்கள். இருப்பினும் எடை இழப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே டயட் முடியும்வரை உங்கள் எடையை பரிசோதிப்பதை தவிருங்கள். வியாழக்கிழமை டயட் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்தது. இதனுடன் சிறிய கப் வேகவைத்த பழுப்பு நிற அரசி மற்றும் வேகவைத்த பருப்பை சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் 1 கப் சாலட்,1 கிளாஸ் மோருடன் வேகவைத்த பழுப்பு அரிசி மற்றும் பருப்பை சாப்பிடுங்கள். வியாழக்கிழமைக்கு மிகவும் முக்கியம் தக்காளிதான். 6 தக்காளியை நிச்சயம் சாப்பிட வேண்டும். அதை ஒரே நேரத்திலோ அல்லது நினைக்கும்போதோ சாப்பிடுங்கள். அதேபோல 2 ஆரஞ்சு மற்றும் 2 ஆப்பிள் எடுத்துக்கொள்ளவும் மறக்காதீர்கள். வியாழக்கிழமை 14 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சனி

சனி

சனிக்கிழமையன்று ஒரு கப் பழுப்பு நிற அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். ஆனால் எண்ணெய், சீஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. 1 கப் சாலட், 1 கப் சூப் மற்றும் இ கிளாஸ் மோர் குடிக்க மறந்துவிடாதீர்கள். அதேபோல 12 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் மறந்துவிடாதீர்கள். தேவைப்பட்டால் 1 கப் க்ரீன் டீ குடியுங்கள்.

ஞாயிறு

ஞாயிறு

ஞாயிறு டயட் காய்கறிகள், பழங்கள், 1 கப் வேகவைத்த பழுப்பு அரிசி சாதம், மற்றும் 1 கப் வேகவைத்த பருப்பை உள்ளடக்கியது. 1 கப் சாலட், 1 கிளாஸ் மோருடன் 1 கப் வேகவைத்த பழுப்பு அரிசி சாதம் மற்றும் பருப்பை சாப்பிடுங்கள். இதனுடன் 1 கிளாஸ் ஆரஞ்சு அல்லது திராட்சை ஜூஸ் மற்றும் 1 கப் டயட் சூப்பையும் குடிக்கலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இந்த டயட் மூலம் உங்கள் எடை 3 முதல் 5 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வது நல்லது. இதோடு நிறுத்திவிடாமல் தினமும் 3 நிமிடம் நாடைபயிற்சி செய்வது உங்கள் எடையை சீராக பராமரிக்க இயலும். ஆரோக்கியமான உணவுமுறைதான் உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கான அடிப்படையாகும்.

MOST READ: கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

diet plans to lose weight without starving yourself

Here's a customised diet plan that does not involve starving. Besides helping you lose 3-5 kgs in a week, it also promises to improve your skin and digestive system.
Desktop Bottom Promotion