Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
கல்யாணத்துக்காக வெயிட் குறைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...
உங்கள் திருமணத்தின் போது நீங்கள் உங்களை சிறந்த தோற்றத்தில் காண விரும்புவீர்கள். சிறந்த உடை, சரியான நகைகள், சிறந்த தோற்றம் போன்றவற்றை திட்டமிடுவீர்கள். இதற்கெல்லாம் முதலில் தேவை நீங்கள் சரியான எடையில்
உங்கள் திருமணத்தின் போது நீங்கள் உங்களை சிறந்த தோற்றத்தில் காண விரும்புவீர்கள். சிறந்த உடை, சரியான நகைகள், சிறந்த தோற்றம் போன்றவற்றை திட்டமிடுவீர்கள். இதற்கெல்லாம் முதலில் தேவை நீங்கள் சரியான எடையில் இருப்பது.
ஆரம்ப கால உற்சாகத்திற்குப் பின் நீங்கள் உங்கள் திட்டமிடலை ஆரம்பிக்க வேண்டும். உடை, சிகை அலங்காரம், ஒப்பனை, மண்டபம், விருந்தினர் பட்டியல் போன்றவை முக்கியம். ஆனால் இதை எல்லாம் விட முக்கியம் நீங்கள் பொருத்தமாகவும், கலராகவும் இருப்பது. புகைப்படங்கள் அழாகாகவும், ஒப்பற்றதாகவும் வருவது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அதற்காக முழு மூச்சுடன் முயற்சிக்க வேண்டும். அதற்காக நன்கு வியர்வை சிந்தி உழைத்து நீங்கள் விரும்பும் உடல் எடையைப் பெறவேண்டும்.

உங்களுக்கு எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். வயிறு, தொடைகள், இடுப்பு, தோள்களின் மேற்பகுதி, கன்னம் இவற்றில் எது உங்கள் கனவை நனவாக்கும்? இங்கே நாங்கள் உங்களுக்கு திருமணத்திற்கு முன் எடையைக் குறைத்து எவ்வாறு ஜொலிப்பது என்பதைப் பற்றிக் கூறுகிறோம். கவனமாக படியுங்கள். உங்கள் மீது வைத்த கண் வாங்காமல் எல்லோரும் பார்க்குமாறு ஜொலியுங்கள்.

ஒரே வாரத்தில்
ஒரே வாரத்தில் எடையைக் குறைப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளவதற்காக நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஆறு முதல் எட்டு வாரங்கள் முன்பிருந்தே இந்த முயற்சியில் ஈடுபடுவது நலம். இல்லை என்றால் திருமணம் நெருங்கி வரும்போது முடியாமல் போகலாம். நாட்கள் செல்லச் செல்ல போதுமான நேரம் கிடைக்காது, மேலும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாகி விடுவீர்கள்.
எங்களின் மிகச் சிறந்த திருமண எடை குறைப்பு முறைகள் மூன்று உங்களுக்காக

உங்கள் தோற்றம் -
1. மெல்லிய மணமகனாகவோ மணமகளாகவோ மாற வேண்டுமென்றால், சில யோசனைகள் உள்ளன. முதலில் உங்கள் தோற்றத்தை ஆய்வு செய்ய தொடங்குங்கள். பண்பும், நிதானமும் மணமக்களுக்கு அவர்களது தோற்றத்தாலேயே கிடைக்கிறது. உங்களுக்கு நல்ல தோற்றம் இல்லை என்றால் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்று கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உயரமாகவும், மெலிதாகவும் இருப்பீர்கள்.
2. உங்கள் கால்களை சாய்வாக வைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்காருங்கள். ஒரு புத்தகம் அல்லது சிறு தலையணையை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். நிமிர்ந்து நேராக உட்காருங்கள். இதையே மீண்டும் நின்று கொண்டு செய்யுங்கள். புத்தகம் கீழே விழாது என்ற நம்பிக்கை வந்தவுடன் நடக்க முயலுங்கள்.
3. தினமும் இதை 10-15 நிமிடங்கள் செய்யுங்கள், சீக்கிரம் உட்கார்ந்து, எழுந்து, சிறிது தொலைவு நடக்க வேண்டும்.

உடற்பயிற்சி -
திருமணத்திற்கு முன் எடை குறைக்க ஆரோக்கியமான வழி இருக்கிறது. அதுதான் உடறிபயிற்சி செய்வது. ஒரு மாதத்தில் எடையைக் குறைப்பது எப்படி தெரியுமா? உங்களுக்குத் தேவை இந்த பதினான்கு நிமிடப் பயிற்சிதான். ஒவ்வொன்றுக்கும் முறையே இரண்டு நிமிடங்கள் உட்காருங்கள்
1. உறுதியான நாற்காலியை நன்கு பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். குதித்தல், முழங்காலைப் பிடித்துக் கொண்டு முடிந்தவரை மேலே தூக்கி பயிற்சி செய்ய வேண்டும், நின்ற இடத்திலேயே ஜாகிங் (பத்து முறை ஒவ்வொன்றும்) செய்ய வேண்டும். படுத்துக்கொண்டு உடலை மேலெழுப்பி, உட்கார்வது (பிளான்க்ஸ், சிட்அப்ஸ்) 30 முறை பிளான்க்ஸ், பனிரெண்டு முறை சிட்அப்ஸ் செய்ய வேண்டும்.
2. இந்த ஒவ்வொரு உடற்பயிற்சியின் இடையேயும் 30 வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம்.
3. முதல் வாரமும், இரண்டாவது வாரமும் இரண்டு முறை பதினான்கு நிமிட பயிற்சிகளை செய்யுங்கள். படிப்படியாக ஒய்வு நேரத்தை குறையுங்கள்.
4. மூன்று நான்காவது வாரங்களில் இரட்டிப்பாக செய்யுங்கள். படிப்படியாக ஒய்வு நேரத்தைக் குறையுங்கள்.
5. ஐந்து ஆறாவது வாரங்களில் மும்மடங்காக செய்யுங்கள். படிப்படியாக ஒய்வு நேரத்தைக் குறையுங்கள்.
6. உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் வார்ம்-அப் செய்து தயாராக்கிக் கொள்ளுங்கள். மாற்றாக நீங்கள் வெளியில் இருந்தால் நடைப் பயிற்சி மேற்கொள்வது உங்களை இளைக்க வைக்கும்.
7. ஜாகிங் போல நடந்து உங்கள் நடைக்கு சக்தியூட்டுங்கள். உங்கள் பாதத்தின் பிற்பகுதியை முதலில் கீழே வைத்து பிறகு பாதத்தின் முற்பகுதியை கீழே வையுங்கள். உங்கள் தோள்களைக் குலுக்கி ஒரு நோக்கத்தோடு நடக்கவும்.
7. முதல் இரண்டு வாரங்கள் இருபது நிமிடங்கள் நடக்கவும்.
8. மூன்று, நான்காவது வாரங்களில் அதை முப்பது நிமிடமாக அதிகரிக்கவும்.
கடைசி இரு வாரங்கள் நாற்பது நிமிடங்களாக அதிகரிக்கவும்.

திருமணத்திற்கு முந்தைய உணவுத் திட்டம்.
திருமணத்திற்கு முன் எடையைக் குறைக்க நீங்களாகவே ஏதாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள். நீங்கள் சரியான வகையில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பாக நல்ல வைட்டமின், சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. குறைந்த அளவு கலோரி உணவுகள் வயிறு நிறைய சாப்பிடுங்கள்
2. பழங்கள் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்
3. சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
4. சிவப்பு இறைச்சியை நீக்கி விடுங்கள். கோழிக்கறியிலுள்ள புரதம், மீன் மற்றும் டோஃபு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. மது, காபி குடிப்பதை திருமணத்திற்கு இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பே குறைத்து விடுங்கள்.
6. அதற்கு பதில் தண்ணீர் அதிகமாகப் பருகுங்கள். ஐந்து அல்லது ஆறு டம்ப்ளர் தண்ணீர் பருகுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
7. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பட்டினி இருக்க வேண்டாம், தேவையான அளவு சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.



Click it and Unblock the Notifications











