உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏழு நாட்களும் இதை சாப்பிட்டாலே போதுமே!

Written By:
Subscribe to Boldsky

அளவான உடல் என்பது, உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வழிவகுக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் உடலை பல்வேறு பிரச்சனைகள் தாக்க தான் செய்யும். எனவே உங்களது உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது கட்டாயம் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் மட்டும் தான். முதலாவது, உடற்பயிற்ச்சி செய்வது, இரண்டுவாது நீங்கள் டயட்டை கடைப்பிடிக்க வேண்டியது ஆகும். டயட் என்பது சாப்பிடாமல் இருப்பது கிடையவே கிடையாது.. டயட் என்பது இந்த இந்த பொருட்களை இந்த இந்த அளவு தான் சாப்பிட வேண்டும் என்பதாகும். சிலர் டயட் இருக்கிறேன் என்று சாப்பிடாமலேயே இருப்பார்கள். இன்னும் சிலர் மிக மிக குறைவாக சாப்பிடுவார்கள்... இப்படி நீங்கள் செய்தால் உங்களது உடல் எடையை கண்டிப்பாக ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியாது.

இந்த பகுதியில் உங்களது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க ஒவ்வொரு நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து, ஃபாலோ செய்து வந்தீர்கள் என்றால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஞாயிற்றுக் கிழமை

1. ஞாயிற்றுக் கிழமை

1. காலை உணவு - 260 கலோரிகள்

அவோகேடா மற்றும் முட்டை

1 முழு தானிய ரொட்டி

1/4 அவோகேடா

1 பெரிய வேக வைத்த முட்டை, தேவையானால் இந்த முட்டையுடன் பெப்பர், உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

2. காலை ஸ்நேக்ஸ் - 60 கலோரிகள்

அரை கப் சீஸ் மற்றும் அரை கப் பழங்களை சாப்பிடுங்கள். அல்லது புதியதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள், தண்ணீர் போன்றவற்றை பருகலாம். பழங்களை சாப்பிடும் போது அதில் உப்பு சேர்க்க கூடாது.

3. மதிய உணவு

3. மதிய உணவு

மதியம் 1. 30 மணியிலிருந்து 2 மணிக்குள், 2ஒரு கப் அளவு தர்பூசணி பழம் சாப்பிடுங்கள். அதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் பருகலாம். வெஜிடபிள் சூப் பருகலாம்.

4. மதிய உணவுக்கு பிறகு

4 முதல் 5 மணிக்குள் நீங்கள் ஒரு முழு ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள்.

5. மாலை உணவு

5. மாலை உணவு

மாலை 6. 30 மணி முதல் 7 மணிக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும், ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீரையும் குடிக்க வேண்டியது அவசியமாகும். இதில் ஆப்பிள் பழத்திற்கு பதிலாக நீங்கள் ஆரஞ்ச் பழத்தையும் சாப்பிடலாம்.

6. இரவு உணவு

இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள், அரைக்கப் அளவு பிரவுன் அரிசி, ஒரு கொய்யாப்பழம் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். கொய்யாப்பழத்திற்கு பதிலாக நீங்கள் க்ரீன் ஆப்பிளையும் சாப்பிடலாம்.

மதிய உணவு

மதிய உணவு

வெஜிடபிள் சால்ட் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காய், வெங்காயம், கேரட் போன்றவை கலந்த வெஜிடபிள் சாலட் சாப்பிட வேண்டும். இதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள். மதிய உணவுக்கான நேரம், மதியம் 1.30 - 2 ஆகும்.

மதிய ஸ்நேக்ஸ்

1 முழு வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள். வேக வைத்த ப்ரோக்கோலியையும் சாப்பிடுங்கள். மேலும் இரண்டு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து குடிக்க வேண்டியது அவசியமாகும்.

மாலை ஸ்நேக்ஸ்

மாலை ஸ்நேக்ஸ்

வேக வைத்த காலிஃபிளவரை சாப்பிடுங்கள். இதனுடன் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இதற்கான நேரம் 6.30 முதல் 7 மணி வரை ஆகும்.

இரவு உணவு

சாலட் சாப்பிடுங்கள். இந்த சாலட்டில் வேக வைத்த கேரட், ப்ரோக்கோலி, க்ரீன் பீன்ஸ் போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. செவ்வாய் கிழமை

3. செவ்வாய் கிழமை

காலை உணவு

காலை உணவாக அரைக் கப் அளவு தர்பூசணி பழம் சாப்பிடுங்கள். அல்லது அரை கப் ஆப்பிள் சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் அளவுக்கு தண்ணீர் குடியுங்கள்.

காலை ஸ்நேக்ஸ்

அரை கப் அன்னாசி பழம் சாப்பிடுங்கள். அல்லது அரை கப் அளவுக்கு பேரிக்காய் சாப்பிடுங்கள். இத்துடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரையும் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவாக நீங்கள் சாலட் சாப்பிடலாம். அதில் கேரட், முட்டைகோஸ், வெள்ளரிக்காய் ஆகியவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் அளவுக்கு தண்ணீர் குடியுங்கள்.

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸை நீங்கள் 4 மணி முதல் 5 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனுடன் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரையும் குடியுங்கள்.

மாலை ஸ்நேக்ஸ்

மாலை ஸ்நேக்ஸ்

ஒரு பேரிக்காயுடன் சேர்த்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரையும் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

இரவு உணவு

வேக வைத்த ப்ரோகோலி மற்றும் பீட்ரூட் உடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

4. புதன் கிழமை

4. புதன் கிழமை

காலை உணவு

இரண்டு பெரிய வாழைப்பழம் மற்றும் ஒரு டம்ளர் பால்

காலை ஸ்நேக்ஸ்

ஒரு வாழைப்பழ ஜூஸ், இனிப்பிற்காக அரை டீஸ்பூன் அளவு தேன் கலந்து கொள்ளலாம்.

மதிய உணவு

மதிய உணவுக்கு ஒரு வெஜிடபிள் சூப் பருகுங்கள். இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீரையும் பருகலாம்.

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸ் ஆக நீங்கள் ஒரு வாழைப்பழ ஜூஸை குடிக்க வேண்டும்.

மாலை ஸ்நேக்ஸ்

இரண்டு சிறிய அளவு உள்ள வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

இரவு

இரவு நேர உணவாக இரண்டு பெரிய சைஸ் வாழைப்பழத்தையும், ஒரு டம்ளர் அளவு பாலையும் பருகுங்கள்.

5. வியாழக்கிழமை

5. வியாழக்கிழமை

காலை உணவு

6 கேரட் உடன், பீன்ஸ் சேர்த்து காலை உணவாக சாப்பிட வேண்டும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

காலை ஸ்நேக்ஸ்

ஒரு கப் யோகார்ட் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மதிய உணவு

அரை கப் அளவு பிரவுன் ரைஸ் அல்லது கோழியின் ஈரல் அல்லது மீன் மற்றும் இரண்டு தக்காளி பழங்களை சாப்பிட வேண்டும். தக்காளிக்கு பதிலாக இரண்டு கேரட் சாப்பிடலாம்.

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸ்

ஒரு ப்ரூட் அல்லது வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம். இதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் பருகுங்கள்.

மாலை நேர ஸ்நேக்ஸ்

ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள்.

இரவு உணவு

இரவு உணவாக ஒரு வெஜிடபிள் சூப் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் பருகுங்கள்.

6. வெள்ளிக்கிழமை

6. வெள்ளிக்கிழமை

காலை உணவு

வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

காலை ஸ்நேக்ஸ்

வேக வைத்த பீன்ஸ் சாப்பிடுங்கள், நறுக்கிய தக்காளியையும் இதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மதிய உணவு

ஒரு கப் பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது கோழியின் நெஞ்சுக்கறி அல்லது மீன் சாப்பிடுங்கள். இதனுடன் சேர்த்து சூப் குடிக்க வேண்டும்.

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸ்

மூன்று முதல் நான்கு கேரட் சாப்பிடுங்கள். இதனுடன் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மாலை ஸ்நேக்ஸ்

ஒரு கப் சூப் குடிக்க வேண்டும். இதனுடன் சேர்த்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரையும் குடியுங்கள்.

இரவு உணவு

வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரையும் பருக வேண்டும்.

7. சனிக்கிழமை

7. சனிக்கிழமை

காலை உணவு

வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனுடன் சேர்த்து ஆரஞ்ச் அல்லது ஆப்பிள் ஜூஸை பருக வேண்டும். ஃபிரஷ் ஜூஸாக இருக்க வேண்டியது அவசியம்.

காலை ஸ்நேக்ஸ்

ஒரு கப் வெஜிடபிள் சூப் பருக வேண்டும். ஒரு கேரட் சாப்பிடுங்கள். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரையும் குடிக்க வேண்டும்.

மதிய உணவு

மதிய உணவாக பிரவுன் ரைஸ் ஒரு கப் அளவுக்கு சாப்பிட வேண்டும். வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

மதிய ஸ்நேக்ஸ்

மதிய ஸ்நேக்ஸ்

சில கேரட்கள் மற்றும் ஏதேனும் ஒரு பழத்தின் ஜூஸை பருக வேண்டும்.

மாலை நேர ஸ்நேக்ஸ்

பல காய்கறிகள் கலந்த, வெஜிடபிள் சாலட் சாப்பிடுங்கள் இதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் பருக வேண்டும்.

இரவு உணவு

ஒரு கப் அளவு சூப் குடிக்க வேண்டும். இதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் அளவுக்கு தண்ணீர் பருக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weight Loss Diet Meal Plan For Seven Days

Weight Loss Diet Meal Plan For Seven Days
Story first published: Friday, December 22, 2017, 16:00 [IST]
Subscribe Newsletter