Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதியம் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டா தொப்பை வேகமா குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க...
இங்கு தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புதமான வாழைப்பழ பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் மற்ற பழங்களை விட வாழைப்பழத்தை தான் அதிகம் சாப்பிடுவார்களாம். இதற்கு வாழைப்பழத்தில் உள்ள ஏராளமான அளவிலான பொட்டாசியம் தான் காரணம். பொட்டாசியமானது தசைகளை வலிமைப்படுத்த மிகவும் அவசியமானது மற்றும் இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றவும் செய்யுமாம்.

ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் 105 -120 கலோரிகளும், ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் பி6-இல் 20 சதவீதமும், வைட்டமின் சி-இல் 18 சதவீதமும், பொட்டாசியத்தில் 13 சதவீதமும், நார்ச்சத்தில் 12 சதவீதமும், மாங்கனீசில் 9 சதவீதமும் உள்ளது.
இக்கட்டுரையில் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புதமான வாழைப்பழ பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
ஆரஞ்சு - 1
கொழுப்பு குறைவான தயிர் - 1/2 டம்ளர்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆளி விதை - 2 டேபிள் ஸ்பூன்
வே பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
இதன் செய்முறை மிகவும் எளிது. அதற்கு மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் நல்ல மனநிலையிலும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.
இப்போது வாழைப்பழத்தின் இதர நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நன்மை #1
வாழைப்பழம் சிறுநீரக புற்றுநோய் மற்றும் கண்களில் மாகுலர் திசுக்கள் சிதைவடைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும்.

நன்மை #2
வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்கள் மற்றும் நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

நன்மை #3
வாழைப்பழம் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க மற்றும் காலைச் சோர்வைக் குறைக்க உதவும்.

நன்மை #4
வாழைப்பழம் ஒரு நேச்சுரல் ஆன்டாசிட். இதை சாப்பிட்டால் அதிகப்படியான அமில உற்பத்தியால் ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #5
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன், மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்க உதவும்.

நன்மை #6
வாழைப்பழத்தில் உள்ள சைட்டோல்சின் என்னும் உட்பொருள், இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

நன்மை #7
வாழைப்பழம் வீக்கம், டைப்-2 சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். இவை அனைத்திற்கும் காரணம் அதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் பி6 தான்.



Click it and Unblock the Notifications
