தண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையினை குறைக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் யாருமே உடனடியாக கை வைப்பது உணவில் தான். தெரிந்தோ தெரியாமலோ டயட் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். டயட் என்பது உணவைக் குறைப்பது மட்டுமல்ல சரிவிகித உணவினை எடுப்பது என்பது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் கிடைக்கப் பெறும் வகையில் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும் . அப்போது தான் அது பூரணமான டயட் என்று எடுத்துக் கொள்ளப்படும். அப்போது தான் அதனை கடைபிடிப்பதால் உங்களுடைய உடல் எடையில் மாற்றம் தெரியும். நீங்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும்.

Surprising drinks for weight loss

என்ன தான் தேடிப்பிடித்து டயட் பின்பற்றினாலும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் நீங்கள் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்பட்டு அதிலிருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

தொடர்ந்து தண்ணீர் குடித்தால் சிலருக்கு ஒமட்டல் ஏற்படும். இப்படி தண்ணீர் அதிகமாக குடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்களுக்காக இந்த மாற்ற யோசனைகள். இது தண்ணீர் செய்கிற வேலையை செய்வதுடன் உடல் எடையை குறைப்பதற்கும் உதவி செய்கிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஓர் அருமருந்து என்று கூட சொல்லலாம். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெமன் :

லெமன் :

இது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், தேனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீர் குடித்த நிறைவைத் தருவதுடன் உடல் எடை குறைக்கவும் பெரிதும் உதவிடுகிறது.

ப்ளாக் காபி :

ப்ளாக் காபி :

உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்க இதனை குடிக்கலாம். பால் சேர்க்காத வரக்காபி கலந்து கொள்ளுங்கள் அத்துடன் ஒரு எலுமிச்சை துண்டு சேர்த்து வெள்ளைச்சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரி :

வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்ட்ராபெர்ரீ பழங்களை பாதியாக நறுக்கி உள்ளே போடுங்கள் பின்னர் இரண்டு புதினா இலைகளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனுடன் இனிப்பு சேர்க்க தேவையில்லை.

ஸ்ட்ராபெர்ரீயின் சுவை தண்ணீரில் கலந்து வித்யாசமான சுவை கொடுக்கும்.

இதில் விட்டமின், மினரல்ஸ் அத்துடன் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. வித்யாசமான சுவையாகவும் இருப்பதால் எல்லாருக்கும் பிடிக்கும்.

 மஞ்சள் பால் :

மஞ்சள் பால் :

சிலர் காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் மட்டுமே பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர உடல் எடை குறைக்க நினைக்கிறவர்களும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

இவை உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவிடும்.

இதனைக் குடிப்பதால் நிம்மதியான தூக்கமும் வரும் என்பதால், தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிக்கலாம்.

இஞ்சி :

இஞ்சி :

தொப்பையை குறைக்க பெரிதுவும் உதவுவது இஞ்சி தான். இஞ்சியில் gingerols, beta carotene, caffeic acid போன்றவை நிறைய இருக்கிறது. இவை உடல் எடையை குறிப்பாக தொப்பையை கரைக்க உதவிடும்.

ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள். அதில் தோல் நீக்கி சுத்தம் செய்யப்பட்டு துருவிய இஞ்சியை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு இறக்கி விடலாம். அது ஆறியதும் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

மங்குஸ்தான் :

மங்குஸ்தான் :

மங்குஸ்தான் பழம் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். இதனை முதல் நாள் இரவு பாதியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திட வேண்டும்.பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீரகம் :

சீரகம் :

சீரகம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அது எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் குடிக்க வேண்டிய தண்ணீரை மொத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள்.

அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம். வேண்டுமானால் அதில் புதினா இலைகளை சேர்க்கலாம்.

கருஞ்சீரகம் :

கருஞ்சீரகம் :

அரை ஸ்பூன் கருஞ்சீரகத்தை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்கு வைத்திடுங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இதனை காலையில் குடிக்கலாம்.

கற்றாழை சாறு :

கற்றாழை சாறு :

தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாற்றை குடித்து வந்தால், அது எடை குறைப்பிற்கு உதவும். மேலும் உடல் எடையை அதே அளவில் பராமரிக்கவும் இது உதவுகிறது. இது வயிற்றையும்,செரிமான பாதையையும் சுத்தம் செய்கிறது.

இந்த சாறு பசியோடு போராடி, உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து காலையில் குடித்து வாருங்கள். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும்.

இது உடல் எடை குறைக்கவும் உதவி செய்கிறது .

பட்டை மற்றும் ஆப்பிள் :

பட்டை மற்றும் ஆப்பிள் :

ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது.பட்டையில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஒரு துண்டு ஆப்பிள் மற்றும் இரண்டு துண்டு பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம்.

மோர் :

மோர் :

மோரில் அதிகப்படியான ப்ரோட்டீன்ஸ் இருக்கிறது. பகலில் , பதினோறு மணிக்கு நீங்கள் குடிக்கிற டீ,காபிக்கு பதிலாக மோர் குடிக்கலாம். இது உங்கள் செரிமாணத்தை அதிகரிக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

ஏலக்காய் :

ஏலக்காய் :

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அப்படியில்லை எனில் நீங்கள் குடிக்கம் வெதுவெதுப்பான நீரில் ஏலக்காய் பொடியை கலந்து குடிக்கலாம்.

இது தண்ணீரின் சுவையை அதிகரிப்பதுடன் உடல் எடையை குறைக்க உதவிடும்.

பேரீட்சை மற்றும் வாழை :

பேரீட்சை மற்றும் வாழை :

ஒரு வாழைப்பழம் மற்றும் நான்கைந்து பேரீட்சையை விதை நீக்கி அரைத்துத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு அரை கப் பால் சேர்த்து குடிக்கலாம். தேவையென்றால் தேன் சேர்த்து, இது மாலை நேர ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏபிசி ஜூஸ் :

ஏபிசி ஜூஸ் :

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் மூன்றையும் சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளுங்கள்.அதனை வடிக்கட்டி குடிக்கலாம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு .

இதனை குடிப்பதால் நாள் முழுமைக்கும் தேவையான எனர்ஜி கிடைத்திடும். அதே சமயம் கலோரியும் அதிகம் சேர்ந்திடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising drinks for weight loss

Surprising drinks for weight loss
Subscribe Newsletter