நீர் உடல் தொப்பையால் அவதிப்படும் நபரா நீங்க? இதற்கான 7 காரணம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

உடல எடை குறைய முக்கிய கருவியாக இருப்பது உடலின் நீர்சத்து தான். ஆனால், சில சமயங்களில் உடலில் இருக்கும் நீர் கூட உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடும். இதை வாட்டர் ரிடன்ஷன் அல்லது நீர் எடை என கூறுவார்கள். இது நீரின் காரணமாக உடலில் எடை அதிகரிக்கும் செயலாகும்.

இதனால், உங்கள் உடல் எடையுடன், நீர் எடையும் சேர்ந்து உங்கள் உடல் பருமன் அதிகரிக்க துவங்கும். இதிலிருந்து நீங்கள் தப்பித்து எடை குறைக்க முதலில் பின்பற்ற வேண்டியது உடற்பயிற்சி தான். இதனால், உடலில் இருக்கும் மிகுதியான நீர் எடை வெளியேற்றப்படும்.

சரி! இந்த நீர் எடை உடலில் அதிகரிக்க காரணங்கள் என்னென்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
NSAIDs!

NSAIDs!

NSAIDs (non-steroidal anti-inflammatory drugs) என்பது ஸ்டெராய்டல் அல்லாதா எதிர்ப்பு அழற்சி மருந்துகள் என கூறப்படுகிறது. இவை உடல்வலி, உடல் அழற்சிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் Ibuprofen, Aspirin போன்ற மருந்துகளாகும்.

இந்த மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று வாட்டர் ரிடன்ஷன் எனப்படும் நீர் எடை கூடுதல் ஆகும். இந்த மருந்துகளை அதிகம் உட்கொண்டு வந்தால் வாயுக் காரணமாக ஏற்படும் வீக்கம் மற்றும் உடல் எடை கூடுதல் உண்டாகலாம்.

இதய கோளாறுகள்!

இதய கோளாறுகள்!

இதய செயலிழப்பு பிரச்சனைகள் காரணமாக நீர்க்கட்டு, வாட்டர் ரிடன்ஷன் உண்டாகலாம். இதனால், உடலில் இருந்து சிறுநீரகத்தால் மீண்டும் சோடியம் மற்றும் நீர் இழுக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிக்குமாம்.

ஹார்மோன் சமநிலையின்மை!

ஹார்மோன் சமநிலையின்மை!

நிறைய பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் வாயு காரணத்தால் ஏற்படும் வீக்கம் ஏற்படுவதாய் கூறுகிறார்கள். இதை மாதவிடாய் கால நீர்க்கட்டு அல்லது எடை கூடுதல் என்கிறார்கள். பீரியட் நாட்களில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போது இது உண்டாகிறது.

கருத்தடை சாதனங்கள்!

கருத்தடை சாதனங்கள்!

கருத்தடை சாதனங்களில் வாய்வழியில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் அதிகம் உட்கொள்ளப்படும் போது உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். நீண்ட நாட்கள் இதை எடுத்துக் கொள்வதால் உடலில் நீர் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

புரதம்!

புரதம்!

போதியளவு தாவர உணவுகள் நீங்கள் சேர்த்துக் கொள்வதில்லை அல்லது அதிகம் கார்ப்ஸ் உணவுகள் எடுத்துக் கொண்டால் உடலில் புரதச்சத்து குறைபாடு உண்டாகும். உடலில் இருக்கும் புரதச்சத்து தான் உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளை நேராக செயல்பட உதவுகிறது.

புரதச்சத்து சரியான அளவில் இல்லை எனில், இந்த செயற்பாடு சீர்குலைந்து உடலில் நீர் எடை அதிகரிக்க துவங்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள்!

பாக்கெட், டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் அதிகம் உட்கொண்டு வருகிறீர்கள் எனில் உடலில் சோடியம் மற்றும் வாட்டர் ரிடன்ஷன் உண்டாக வாய்ப்புகள் உண்டு. அதிகளவு துரித உணவுகள் உட்கொண்டு வந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Are Gaining Water Weight!

Reasons Why You Are Gaining Water Weight!