For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் சில நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?

சில நிமிடங்கள் ஓடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாக வலுப் பெறுகின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது. அதனைப் பற்றி காண்போம்.

By Suganthi Ramachandran
|

உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் அதிவேக ஓட்டமும் மற்றும் எடை தூக்கும் உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் ஆரோக்கியமான எலும்புகளை பெறலாம் என்று புதிய ஆராய்ச்சி தகவல் கூறுகிறது.

ஒரு நாளைக்கு 60-120 நொடிகள் ஓடும் பெண்கள் மற்ற பெண்களை காட்டிலும் 4% ஆரோக்கியமான எலும்புகளை பெறுகின்றனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் ஓடினால் 6% வரை ஆரோக்கியமான வலுவான எலும்புகளை பெறலாம்.

Just A Minute's Running Daily May Boost Bone Health

சில நிமிடங்கள் தினமும் செய்யும் இந்த உடற்பயிற்சி சேர்ந்து உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான எலும்பு கட்டமைப்பை தரும். எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் இதை செய்யுங்கள். உங்களால் நீண்ட காலம் முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஓன்று அல்லது இரண்டு நாட்களாவது செய்யுங்கள் என்று விக்டோரியா ஸ்டில்ஸ் யுனிவர்சிட்டி ஆஃப் எக்ஸ்டரிலிருந்து கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்டர்நேஷனல் ஜேர்னல் ஆஃப் எபிடெமிலாஜியில் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தெரிவது சில நிமிட ஓட்டம் மற்றும் எடை தாங்குதல் போன்றவை எலும்பின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.

நல்ல ஆரோக்கியமான எலும்புகள் உங்களுக்கு நிறைய நன்மைகளை தருகின்றன. எலும்பு சம்பந்தப்பட்ட நோயான ஆஸ்டியோபோராஸிஸ் மற்றும் வயதான காலத்தில் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

இந்த ஆராய்ச்சி 2500 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் ஓட்டத்தின் வேகத்தை கடிகார மானிட்டர் மூலமாகவும், எலும்பின் வலுவை அல்ட்ரா சவுண்ட் மூலம் குதிங்கால் எலும்பை ஆராய்ந்தனர்.

மக்கள் தங்கள் தினசரி பழக்க வழக்கங்களை அதிகரிக்க நினைத்தால் முதலில் வாக்கிங் (நடைபயிற்சி) மேற்கொள்ளவது மிகவும் நல்லது என்று ஸ்டில்ஸ் கூறுகிறார்.

நடைப்பயிற்சியின் போது கூட கொஞ்ச தூரம் ஓடினால் நல்லது என்று ஸ்டில்ஸ் கூறுகிறார்.

English summary

Just A Minute's Running Daily May Boost Bone Health

Just A Minute's Running Daily May Boost Bone Health, Study
Story first published: Friday, July 21, 2017, 16:19 [IST]
Desktop Bottom Promotion