உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்!

Written By:
Subscribe to Boldsky

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனுடன் சேர்ந்து உணவு விஷயத்தில் டயட் என்பது மிகவும் அவசியம்.

உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது என்பது முற்றிலும் முட்டாள் தனமான முடிவாகும். சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஆரோக்கியம் குறைந்து விடும். இது ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

இந்த பகுதியில் அற்புதமான ஜூஸ் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பருகி உங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.

 மிளகு

மிளகு

மிளகு ஆய்வுகளிலும் உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.

ஜூஸ் செய்யும் முறை

ஜூஸ் செய்யும் முறை

1 வெள்ளரிக்காய்

5 எலுமிச்சை

1 எலுமிச்சங்காய்

15 புதினா இலைகள்

2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி

2.5 லிட்டர் தண்ணீர்

செய்முறை

செய்முறை

ஒரு வெள்ளரிக்காய், 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா

புதினா

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி

இஞ்சி

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் குறைந்த கலோரிகளை கொண்டது ஆகும். இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. ஒரு பெரிய கப் கேரட் ஜூஸ் குடிப்பதால் உங்களது வயிறு மதிய உணவு நேரம் வரை நிறைந்தே இருக்கும். இதினால் நீங்கள் தேவையில்லாத ஸ்நேக்ஸ் வகைகளை சாப்பிட வேண்டிய தேவை இருக்காது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஆப்பிள், அரை ஆரஞ்ச், சிறிதளவு இஞ்சி ஆகியவற்றின் கலவையானது உங்களது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

பாவைக்காய் ஜூஸ்

பாவைக்காய் ஜூஸ்

பாவைக்காய் ஜூஸ் என்றால் நீங்கள் அலறுவது தெரிகிறது. ஆனால் உண்மையில் பாவைக்காய் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு தேவையான அளவு மெட்டபாலிசத்தை உருவாக்குகிறது. மேலும் இதில் மிகக் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. 100 கிராம் பாவைக்காயில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

juices for easy weight loss

juices for easy weight loss
Subscribe Newsletter