இரண்டே வாரத்தில் 2 இன்ச் இடுப்பளவு குறைய இதனைப் பின்பற்றுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை பிரச்சனையிலேயே முதன்மையானதாக தெரிவது தொப்பைப் பிரச்சனை தான், வயிறைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

Effective tips to reduce belly in two weeks

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்ப்பற்றுவது தான். நம்முடைய சோம்பேறித்தனத்தாலும் இயந்தரத்தனமான வாழ்க்கையினாலுமே நம் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உடல் எடையை குறைக்க உதவும் குறிப்பாக தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

இரண்டே வாரங்களில் இரண்டு இன்ச் வரை குறைய இந்த வழிமுறைகளை எல்லாம் பின்ப்பற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சணல் விதைகள் :

சணல் விதைகள் :

விட்டமின் ஈ,மக்னீசியம்,பொட்டாசியம் இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 ஆகியவை நிறைந்த சணல் விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த சணல் விதைகள் மிகவும் பயனளிக்கூடியது. இது ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதோடு பசியுணர்வையும் மட்டுப்படுத்தும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைப்பதில் சணல் விதைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. இதனை தினமும் சிறிதளவு சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

முளைக்கட்டிய பயிறு :

முளைக்கட்டிய பயிறு :

முளைகட்டிய பயிறினை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். பயிறு வகைகள் முளைக்கட்டுவதால் சத்துக்கள் அதிகரிக்கின்றன. இதனால் செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன.

முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளைக்கட்டப்பட்ட தானியங்கள் தான்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளது இதனை நீங்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் எடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் பெரிதும் உதவுகின்றன.

 தூக்கம் :

தூக்கம் :

உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டுமானால் சீரான தூக்கம் மிகவும் அவசியம். சராசரியாக ஒரு மனிதனுக்கு குறைந்தது ஏழு மணி நேரத்தூக்கமாவது அத்தியாவசியம். அதே போல உடல் உழைப்பு ஏதும் இல்லாமல் வைத்திருக்கிறாதீர்கள்.

உங்களால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்திடுங்கள். உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையினை தவிர்த்திடுங்கள்.

சுவையூட்டிகள் :

சுவையூட்டிகள் :

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களில் முக்கியமானது இந்த சுவையூட்டிகள். இதனை தொடர்ந்து நாம் எடுக்கும் போது அதிலிருக்கும் கெமிக்கல் உடலில் சேர்ந்து பெரும் தீங்கினை விளைவிக்கும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த செயற்கை சுவையூட்டிகளை அறவே தவிர்த்திட வேண்டும்.

நார்ச்சத்து :

நார்ச்சத்து :

நார்ச்சத்து என்பது ஒருவகையான கார்போஹைட்ரேட் சத்து. ஆனால், இதை நம்முடைய உடலால் செரிமானம் செய்ய முடியாது. மற்ற கார்போஹைட்ரேட் எல்லாம் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடல் பயன்படுத்தும்.

ஆனால், இந்த நார்ச்சத்து மட்டும் குளுக்கோஸாக மாற்றப்படுவது இல்லை. ஆனால், செரிமானம் ஆகாமல், கழிவாக வெளியேறுகிறது.

குடலில், உணவு பயணிக்கும்போது, எங்கேயும் சிக்கிவிடாமல், வெளியேற சங்கிலித் தொடர்போல செயல்பட்டு உதவுகிறது. தவிர, நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும்போது, சிறிது சாப்பிட்டாலும், வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சர்க்கரை அளவை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கச் செய்யும், இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, பெரிதும் உதவுகிறது.

நார்ச்சத்து குறைந்த உணவு உட்கொள்ளும்போது, உணவு பயணிக்கும் நேரம் அதிகமாகும். பச்சைக் காய்கறிகள், கீரைகள்,பழங்கள் ஆகியவற்றில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன.

காய்கறி மற்றும் பழங்கள் :

காய்கறி மற்றும் பழங்கள் :

தொப்பையை குறைக்க நார்ச்சத்து மிகுந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். பழங்களை அப்படியே சாப்பிட்டால் தான் அந்த நார்ச்சத்து உடலில் சேரும் ஜூஸாக குடித்தால் நமக்கு கிடைக்க கூடிய நன்மைகளில் பெரும் பங்கு கிடைக்காமல் போய்விடும்.

இதில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இதே கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.

பாலில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் போதுமானது. அதைத் தாண்டி குடிப்பது, பாலாடைக்கட்டி, சீஸ் என மற்றப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் அவை உங்கள் உடலில் கொழுப்பை அதிகரித்திடும்.

பெர்ரீ :

பெர்ரீ :

தினமும் பெர்ரீ பழங்களை சாப்பிடுங்கள். இதில் இருக்கும் ஆன்தோசியானின்ஸ் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.

தண்ணீர் :

தண்ணீர் :

பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கிறோம். அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கிறோம். இது தவறு. ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உணவு சீக்கிரம் செரிமானமாகும்.

நட்ஸ் :

நட்ஸ் :

நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் பாதாம், பிஸ்தா, வால்நட்,உலர் திராட்சை என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

நட்ஸ் நல்லது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரே நாளில் நூறு கிராம் நட்ஸ் உண்பதும், பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல. தினமும் ஒரே அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது.

சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ சீனாவின் தேசிய பானமாக இருக்கிறது. கிரீன் டீ செரிமான சக்தியைத் தூண்டி, செரிமான உறுப்புகளுக்கு நன்மை அளிக்கிறது.உணவு உண்டு 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ பருகுவது நல்ல பலனைத் தரும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது. ரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலை கரைக்கவும் உதவுகிறது.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள். உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்க இஞ்சி பயன்படுகிறது.

அதிகமாக உண்ணுதல், வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சில பிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறது.

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இஞ்சி உதவுகிறது.

மதுப்பழக்கம் :

மதுப்பழக்கம் :

மதுபானம் குடிப்பதை குறைக்கவும் அல்லது நிறுத்த வேண்டும். மதுபானம் முழுவதும் கலோரிகளால் நிறைந்துள்ளது. ஆனாலும் அதனை பருகும் போது வயிறு நிறைவதில்லை.

அளவுக்கு அதிகமாக பருகும் போது உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கிவிடும்.

உப்பு :

உப்பு :

அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

காலை உணவு :

காலை உணவு :

நேரமின்மை என்ற பெயரைச் சொல்லி காலை உணவை தவிர்க்காதீர்கள். இப்படி நீங்கள் காலை உணவை தவிர்ப்பதால் வயிறு உப்புசமடைந்து வயிற்றுக் கொழுப்பு அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க காலை உணவு அவசியம் எடுக்க வேண்டும் வயிறு முட்ட உண்பதை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective tips to reduce belly in two weeks

Effective tips to reduce belly in two weeks
Story first published: Thursday, October 26, 2017, 13:36 [IST]