For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திரையில் கதாப்பத்திரமாகவே மாறிட நம் ஹீரோக்கள் செய்யும் பிரயத்தனங்களை பாருங்கள்!

  |

  சினிமா என்பது பலருக்கும் பெருங்கனவாக இருக்கும் சிலருக்கு அது தான் உயிர்மூச்சு, வாழ்க்கை, லட்சியம் எல்லாமே, அதற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் கொடுக்க தயாராக இருப்பார்கள்.

  சினிமா உனக்கு என்ன கொடுத்தது என்று கேட்டால் 'கைதட்டல்' தான் அவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்திருக்கும். பணம், புகழ் என எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்கள் மனதில் நாம் ஒரு நாயகனாக நிலைத்து விட்டோம் என்பது தான் இங்கே மிகப்பெரிய விஷயம்.

  அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க நடிகர்கள் என்னென்னவோ பிரயத்தனம் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனியொருவனின் வாழ்க்கையையே ஏன் விதியையே மாற்றிவிடக்கூடிய ஆயுதம் ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. சினிமாவில் நாம் நிஜ வாழ்க்கையில் வாழ்வது போல அன்று அது எல்லாமே கற்பனை என்று நீங்கள் எத்தனை முறை ஜோடித்தாலும். அந்த கற்பனைக்கு உயிர் கொடுக்க உண்மையில் நம் நாயகர்கள் உழைக்கத்தான் செய்கிறார்கள்.

  உயிரை பணையம் வைத்து அவர்கள் படுகிற சிரமங்களுக்கு எடுத்துக்காட்டாய் இதோ சிறு துளி! படத்தில் வருகின்ற கதாப்பாத்திரமாகவே தங்களை உருவெடுத்துக் கொள்ள புதுப்புது அவதாரங்களை எடுத்த சூப்பர் ஹீரோக்களின் தொகுப்பு இது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குஹாரிஷ் :

  குஹாரிஷ் :

  முதலில் கைட்ஸ் திரைப்படத்தில் கட்டுக்கோப்பான உடலுடன் காட்சியளித்தார். அதே 2010 ஆம் ஆண்டு குஹாரிஷ் திரைப்படம் வெளியானது. மேஜிஷியன் ஆனா ஹிருத்திக், படுக்கையிலேயே வாழ்க்கையை நடத்தும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்.

  அந்த பாதிக்கப்பட்ட ஒரு கதாப்பத்திரமாக ஹிருத்திக் ரோஷன் மாறுவதற்காக உடல் எடையை அதிகரித்தார். குறிப்பாக தொப்பையை. இதில் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே ஆறேழு மாதங்கள் வரை உடற்பயிற்சிகளை சுத்தமாக மேற்கொள்ளவில்லையாம்.

  அதே போல கடந்த 15 ஆண்டுகளாக சாப்பிடாத ஜங்க் உணவு வகைகளை அப்போது தான் ருசி பார்த்திருக்கிறார்.

  க்ரிஷ் 3 :

  க்ரிஷ் 3 :

  அதேயாண்டு மீண்டும் ஃபிட்ன்ஸ் ஃப்ரீக்காக வந்தார் ஹிருத்திக் க்ரிஷ் 3 திரைப்படத்திற்காக. சர்வதேச அளவில் செலிபிரிட்டி ட்ரைனராக இருக்கும் க்ரிஸ் கெத்தின் என்பவரது வழி காட்டலின் பேரில் மிகத் தீவிரமாக உடற்பயிற்சிகளையும் உணவையும் எடுத்துக் கொண்டார்.

  பத்தே வாரங்களில் க்ரிஷ் 3யின் சூப்பர் ஹீரோவாக காட்சியளித்தார்.

  அமிர்கான் :

  அமிர்கான் :

  தாரே ஜமீன் பர் திரைப்படத்திற்கு பிறகு அமீர் பலரது ஃபேவரைட் டீச்சராகிவிட்டார். அதற்கான மெனக்கெடல்களை நடிப்பில் மட்டுமல்ல தன் உடலிலும் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

  அதன் பிறகு வெளியான கஜினி திரைப்படத்திற்காக 8 பேக்ஸ் வைத்து ஜிம் பாடியுன் மெர்சலாகினார். அடுத்த ஆண்டு 3 இடியட்ஸ் திரைப்படத்திற்காக ஜிம் பாடியை குறைத்து இன்ஜினியரிங் மாணவர் போன்ற தோற்றத்திற்காக உடலை அதன் கட்டுமஸ்தான தோற்றத்தை வெகுவாக குறைத்தார்.

  டங்கல் :

  டங்கல் :

  அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படி வித்யாசங்களை காட்டிக் கொண்டிருக்க 2014 ஆம் ஆண்டு வெளியான பி கே திரைப்படத்திற்காக மீண்டும் ஜிம் பாடியை கொண்டு வந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான டங்கல்.

  விளையாட்டு வீரர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பெண்கள் மல்யுத்த விளையாட்டு குறித்து உண்மைக்கதையின் தழுவல் தான் இந்தத் திரைப்படம். நான்கு பெண் குழந்தைகளின் தகப்பனாக மல்யுத்தத்தில் சாதிக்க வேண்டும் என்ற வீராப்புடன் கனவைச் சுமந்து அதை நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் என நடிப்பில் பின்னிபெடலெடுத்திருப்பார்.

  அந்த தந்தை கதாப்பத்திரத்திற்காகவே 30 கிலோ வரை அதிகரித்தார். இப்படி உடல் எடை கூடிய நிலையில் தன்னுடைய ஷூ லேஸ் போடுவதற்கு கூட அமிர் கான் மிகவும் சிரமப்பட்டாராம்!

  ப்ரியங்கா சோப்ரா :

  ப்ரியங்கா சோப்ரா :

  பாலிவுட்டின் பவர்ஃபுல் கேர்ள் ப்ரியங்கா சோப்ரா தான். திரைப்படத்திற்காக அந்த கதாப்பத்திரத்திற்காக நடிகையான எங்களாலும் ஹீரோக்களை போலவே கடின உழைப்பை கொட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.

  இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோ பிக் திரைப்படத்தில் தான் இந்த ஆக்ரோஷம். குண்டே என்ற திரைப்படத்தில் வழக்கமான கதாநாயகியாகி வலம் வந்தவர் அதே ஆண்டு வெளியான மேரிகோம் திரைப்படத்திற்காக உடலை ஜிம் பாடியாக மாற்றினார்.

  ஷாருக்கான் :

  ஷாருக்கான் :

  ஐந்து நிமிடமாக இருந்தாலும் நான் தயார் என்று வந்த நின்ற ஹீரோ ஷாருக். ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு முன்னர் இந்தப் படத்தை முடித்து விட்டார். ஆனால் 2014 ஆம் ஆண்டு வெளியான ஹேப்பி நியூ யேர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சட்டையை கழட்டுகிற சீன் வரும். அது வெறும் ஐந்து நிமிடக் காட்சி தான்.

  அந்த ஐந்து நிமிடத்தில் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்.

  பூமி பெட்னாகர் :

  பூமி பெட்னாகர் :

  இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி. தும் லகா கே ஹைஷா என்ற திரைப்படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்துப் பெண்ணாக நடித்திருப்பார். ஒரு பெண் குண்டாக இருப்பதினால் என்னென்ன சிக்கல்களை சந்திக்க வேண்டி வருகிறது என்பதை சிரிப்பு கலந்து சொல்லப்பட்டம் படம் இது.

  இதில் குண்டு பெண்ணாக நடித்த பூமி பெட்னாகர் இந்த கதாப்பத்திரத்திற்காகவே உடல் எடையை அதிகரித்திருக்கிறார்.

  அனுஷ்கா :

  அனுஷ்கா :

  இதே போல தமிழகத்தில் இருக்கும் நடிகை அனுஷ்கா. இரண்டாம் உலகம்,என்னை அறிந்தால் என சாதரண கெட்டப்களில் ருத்ரமா தேவி என்ற வரலாற்று கெட்டப்பிலும் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிக்க பயங்கரமாக உடலைக் கூட்டினார்.

  குண்டாக இருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் சங்கடங்கள். உடல் இளைக்க என்று சொல்லி தற்போது சமூகத்தில் ஊடுறுவியிருக்கும் அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு காட்டியது அந்தத்திரைப்படம்.

  அதன் பின்னர் சிங்கம் 3 யில் ரெகுலர் ஹீரோயின் . அடுத்ததாக பாகுபலி 2 பிரபாஸுடன் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு உடலைக் குறைத்திருப்பார் தற்போது ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பாகமதி திரைப்படத்திற்காக கணிசமான எடையை குறைத்திருக்கிறார்.

  பிரபாஸ் :

  பிரபாஸ் :

  எல்லா இளவயது நாயகர்களைப் போல உடலை ஒல்லியாக மெயிண்டெயின் செய்து வந்தார் பிரபாஸ். அதன் பிறகு தான் அமரேந்திர பாகுபலியாக உருவெடுத்தார். தன்னை முழுவதுமாக தயார் செய்து கொள்ள பாகுபலியின் இயக்குநர் ராஜமௌலி பிரபாஸுக்கு முழுதாக ஒரு வருடம் நேரம் கொடுத்திருந்தார்.

  ஒரு வருடம் தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமாக உடலை கட்டுக்கோப்பாக கொண்டுவந்தார். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பிரபாஸுக்கு பயங்கர வரவேற்பு கிடைத்தது.

  விக்ரம் :

  விக்ரம் :

  ஐ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் காட்டிய மாற்றத்திற்காகவே அவரைச் சொல்லியாக வேண்டும். படத்தில் மூன்று வெவ்வேறு விதமான கெட்டப்புகள், பாடி பில்டர்,மாடல்,கூனன். மூன்றுக்குமே தன் உடலிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தை காண்பித்தார் நடிகர் விக்ரம்.

  குறிப்பாக கூனன் கதாப்பத்திரத்திற்காக குச்சியை இளைத்து பார்ப்பவர்களே பரிதாப்படுமளவுக்கு இருந்தது. சினிமா மீதான தீராக்காதல் இன்னும் இன்னும் உழைக்க சொல்லிக் கொண்டேயிருக்கும். நாம் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.

  டிக்கெட் விலை :

  டிக்கெட் விலை :

  டிக்கெட் விலை கூடிவிட்டது என்று ட்வீட் தட்டிவிட்டு பாப்கார்னுடன் தியேட்டருக்குள் நுழையும் நமக்கும் அவர்களுக்குமான லேசான கோடு எங்கேயிருக்கிறது என்று புரிகிறதா? திரைப்படம் தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் அதற்காக மிகக் கடுமையான உழைப்பை கொட்டுகிறார்கள் அதற்கான பிரதி பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

  இந்த உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. அதே போல இது ஒன்றும் ஒரே இரவில் நடந்திடவும் இல்லை. உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி என தொடர் முயற்சிகளின் பலன் தான் இது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Body transformations of our cinema stars

  Body transformations of our cinema stars
  Story first published: Monday, November 27, 2017, 12:04 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more