உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஈஸி வழி நிறைய தண்ணி குடிங்க!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நீங்கள் ஆரோக்கியமாக நோய் நொடியில்லாம வாழ வேண்டுமா? அப்படியென்றால் நிறைய நீர்சத்து மிகுந்த காய்,பழங்களையும், நீரையும் குடிக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

நீரின்மைதான் நிறைய உடல் பாதிப்புகளுக்கு காரணம் என்பது தெரியுமா? அதோடு இளமையாக வாழ நீங்கள் மருந்தினையும் உணவையும் , க்ரீம்களையும் தேடிப் போக வேண்டாம்.

Water is the secrete to weight loss

உங்களுக்கு மிக அருகாமையில் ஒரு பாட்டிலில் நீர் வைத்துக் கொள்ளுங்கள் போதும். ஏனெனில் ஆராய்ச்சியாளர்களும் இதையேதான் கூறுகிறார்கள்.

நீரில் கார்போஹைட்ரேட் , புரோட்டின், கொழுப்பு ஆகியவை இல்லை. உடல் எடையை அதிகரிப்பவை இவைதான். ஆனால் நீரில் மினரல் சத்துக்கள் உள்ளன. இவைகள்தான் செல் மற்றும் திசுக்களின் சத்துக்களுக்குத் முக்கிய தேவை.

Water is the secrete to weight loss

உடல் எடையை கணிசமாக குறைப்பதில் நீரின் பங்கு அதிகம். நீர்தன்மை கொண்ட எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை.

அவைகள் கொழுப்பு, நச்சுக்கள் கழிவுகளை அடித்து சென்று விடும் என்று அம்ரிக்கவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் டம்மி சேஞ்ச் கூறுகின்றார்.

Water is the secrete to weight loss

போதிய அளவு நீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கே உடல் பருமன் மற்றும், அதிக பி. எம் .ஐ ஏற்படுகிறது என்று ஆய்வுகள் வரையறுக்கின்றன.

இந்த ஆய்வில் சுமார் 9528 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் உடல்பருமனானவர்களில் மூன்றில் ஒரு பங்கு போதிய நீர் குடிக்காமல் இருந்தவர்கள், 18-64 வரை வயதுள்ளவர்கள் என்று தெரியவதுள்ளது.

Water is the secrete to weight loss

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்கள் நிறைய நீர்சத்து கொண்ட பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு , மற்றும் காய்களான பூசணிக்காய், சுரைக்காய், போன்றவற்றையும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் அருந்துதல் மிக முக்கியம் இவைதான் உடலின் பல்வேறு இயக்கத்தை ஆரோக்கியமாக நடக்கச் செய்யும்.

English summary

Water is the secrete to weight loss

Water is the secrete to weight loss
Please Wait while comments are loading...
Subscribe Newsletter