Latest Updates
-
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப வாழைப்பழத்தை சாப்பிடுங்க...
வாழைப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இங்கு வாழைப்பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா? நிச்சயம் பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள். மேலும் உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் தான் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்.

ஆனால் வாழைப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இங்கு வாழைப்பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தைத் தடுக்கும்
வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், உடலில் நீர்த்தேக்கத்தைத் தடுத்து, வயிற்று உப்புசம் அல்லது வீக்கம் போன்றவற்றைத் தடுக்கும். எனவே தட்டையான வயிற்றைப் பெற நினைப்பவர்கள், வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

கொழுப்புக்கள் கரையும்
வாழைப்பழத்தில் உள்ள கோலைன் மற்றும் அனைத்து வகையான வைட்டமின் பி சத்துக்கள், தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக் குறைக்கும்.

பசியைக் கட்டுப்படுத்தும்
வாழைப்பழம் பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். இப்படி கண்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்தாலே, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

செரிமானம் சீராகும்
செரிமான பிரச்சனைகள் தான் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம். வாழைப்பழத்தில் உள்ள புரோபயோட்டிக், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சீரான செரிமானத்திற்கும் உதவும்.



Click it and Unblock the Notifications
