இந்த ஒரு டீ 2 கிலோ எடையைக் குறைப்பதோடு, உடலையும் சுத்தமாக்கும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களை குண்டு பூசணி, குண்டு கத்திரிக்காய் என்று உங்கள் நண்பர்களை அழைக்கிறார்களா? உடல் பருமனால் நீங்கள் பல நேரங்களில் அசிங்கப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு முயன்றும் உங்களால் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு ஓர் நல்ல வழியைக் காட்டும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

பொதுவாக காலையில் எழுந்ததும் அனைவரும் ஒரு கப் டீ அல்லது காபியைக் குடிப்போம். டீயைக் குடிப்பவர்களுள் சிலர் க்ரீன் டீ யையும், இன்னும் சிலர் ப்ளாக் டீயையும் குடிப்பார்கள். உண்மையில் டீ உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. அதிலும் க்ரீன் டீயைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது.

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க...

உங்களுக்கு டீ டயட் பற்றி தெரியுமா? அதிலும் க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம் என்பது தெரியுமா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ டயட்டின் நன்மைகள்

டீ டயட்டின் நன்மைகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள டீ அற்புதமான சுவையில் இருப்பது மட்டுமின்றி, அடிக்கடி பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். மேலும் இந்த டீ உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

எவ்வளவு எடை குறையும்?

எவ்வளவு எடை குறையும்?

இந்த டீ டயட் மூலம் ஒரே நாளில் 1/2 கிலோவில் இருந்து 2 கிலோ வரை உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இந்த டீ டயட்டை மாதத்திற்கு 2 நாட்களுக்கு மேல் பின்பற்றக்கூடாது.

க்ரீன் டீ நன்மைகள்

க்ரீன் டீ நன்மைகள்

பொதுவாக பல ஆராய்ச்சிகளில் க்ரீன் டீயை குடித்து வருவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம் மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது தான்.

மேலும் க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் கொழுப்புக்களை ஆக்ஸிஜனேற்றமடையச் செய்யும். குறிப்பாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அவ்வளவு சக்தியை தன்னுள் கொண்டிருப்பது தான் க்ரீன் டீ.

டீ செய்ய தேவையான பொருட்கள்

டீ செய்ய தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

பாதாம் பால் - 1.5 லிட்டர்

க்ரீன் டீ பொடி - 2 டேபிள் ஸ்பூன்

தேன் - சிறிது

இந்த ரெசிபிக்கு க்ரீன் டீ பையை வாங்கலாம் என்று நினைக்க வேண்டாம். க்ரீன் டீ பொடியை வாங்கிப் பயன்படுத்துங்கள். அது தான் நல்ல பலனைத் தரும்.

டீ செய்முறை

டீ செய்முறை

செய்யும் முறை:

* முதலில் பாதாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீன் டீ பொடியை சேர்க்க வேண்டும்.

* பின் அதை மூடி வைத்து 20 நிமிடம் கழித்து, வடிகட்டி தேன் சிறிது கலந்தால், டீ தயார்.

எப்போது பருக வேண்டும்?

எப்போது பருக வேண்டும்?

இந்த டீயை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் என நாள் முழுவதும் பருக வேண்டும். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டுவதோடு, க்ரீன் டீ பாதாம் பாலை எளிதில் செரிமானமடையச் செய்யும்.

தண்ணீர் அவசியம்

தண்ணீர் அவசியம்

இந்த டயட்டைப் பின்பற்றும் போது, குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். ஏனெனில் இந்த டீ வலுவான சிறுநீர்ப் பெருக்கி. தண்ணீரைப் பருகுவதால், அது சமநிலைப்படுத்தி பராமரிக்கும்.

பருகக்கூடாதவர்கள்

பருகக்கூடாதவர்கள்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை, சிறுநீரகம் அல்லது பித்தப்பை நோய்கள், குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டைப் பின்பற்றக்கூடாது. மேலும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்த டயட்டைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Powerful Tea Can Help You Lose Weight And Detox Your Body

The combination of almond milk and tea not only tastes good and does not give a feeling of hunger, it is also excellent in cleansing and detoxifying the body.