ஏழு நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற உதவும் அற்புத பானம்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமன் தீராத பிரச்சனையாக உள்ளது. எவ்வளவு முயன்றும் தொங்கும் தொப்பையைக் குறைக்க முடியாமல் அவஸ்தைப்படுவோர் ஏராளம். தொப்பைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அந்த வழிகளுள் ஒன்று தான் ஜூஸ் அல்லது பானங்களின் மூலம் தொப்பையைக் குறைப்பது.

Powerful Drink That Will Make Your Stomach Flat In Only 7 Days

இங்கு ஆரோக்கிமான வழியில் தொப்பையைக் குறைக்க உதவும் அற்புத பானம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் உள்ள முக்கிய பொருள் வாழைப்பழம். பொதுவாக வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும் ஓர் உணவுப் பொருளாகத் தான் நினைக்கின்றனர்.

ஆனால் இந்த மஞ்சள் நிற வாழைப்பழம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க உதவும். சரி, இப்போது தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் வாழைப்பழ பானத்தை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் மற்றதை விட வாழைப்பழ பானம் மிகவும் சிறந்தது?

ஏன் மற்றதை விட வாழைப்பழ பானம் மிகவும் சிறந்தது?

* வாழைப்பழம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்

* வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவும்

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் மற்றும் உப்பு குறைவு

* வாழைப்பழம் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடி விடுவிக்கும்

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1

ஆரஞ்சு - 1

பால் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்

ஆளி விதை - 2 டேபிள் ஸ்பூன்

வே புரோட்டீன் - 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வாழைப்பழ பானம் தயார்!

பருகும் முறை:

பருகும் முறை:

இந்த பானத்தை பசிக்கும் போதெல்லாம் குடிக்கலாம். அதிலும் இந்த பானத்தை மதிய வேளையில் உணவு உண்பதற்கு பதிலாக குடித்து வர, விரைவில் தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு

குறிப்பு

ஒருவேளை இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அந்த பானத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படும். ஆனால் இந்த பானம் குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Powerful Drink That Will Make Your Stomach Flat In Only 7 Days

This powerful homemeade drink that will make your stomach flat in only 7 days. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter