எடையை குறைக்க எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான டயட்டை ஃபாலோ செய்யணும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரது ராசி குணநலன்கள், அமையும் வாழ்க்கைத் துணை மற்றும் எதிர்காலம் போன்றவற்றை கணிக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைக் கணிக்கவும் உதவும். குறிப்பாக ராசியைக் கொண்டு எந்த மாதிரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை அறியலாம்.

இக்கட்டுரையில் உடல் எடையைக் குறைக்க எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், எதிலும் விரைவில் பலன் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இல்லையெனில், மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். இம்மாதிரியானவர்கள், தினமும் அளவாக 5-6 முறை உணவை உட்கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

மேலும் இவர்கள் தங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள கிரேப் ஃபுரூட் மற்றும் க்ரீன் டீ போன்றவற்றை சாப்பிட வேண்டும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் உணவை மெதுவாக ரசித்து சாப்பிடுவதோடு, மதுவைத் தவிர்த்து, அன்றாட உடற்பயிற்சியில் ஈடுபட்டு, க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் டயட்டை பின்பற்ற பல நாட்கள் ஆகும். ஆனால், இவர்கள் டயட்டை பின்பற்ற ஆரம்பித்து விட்டால், கட்டாயம் உடல் எடையில் மாற்றத்தைக் காண்பார்கள். இந்த ராசிக்காரர்கள், ஆப்பிள், மசாலா பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும்.

மேலும் இந்த ராசிக்காரர்கள் காலையில் பழங்கள், தயிர், இட்லி போன்றவற்றை உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பகல் வேளையில் சாப்பிடாமலும், ஆனால் இரவில் நன்கு சாப்பிடுபவர்கள். இவர்கள் டீ, காபியைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு வருவது நல்லது. முக்கியமாக காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் மது மற்றும் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் வாய்க்கு ருசியாக நன்கு சமைத்து சாப்பிட விரும்புவார்கள் மற்றும் இவர்கள் டயட்டை பின்பற்றுவது என்பது கடினம். இந்த ராசிக்காரர்கள் ஃபாஸ்ட் புட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வைட்டமின் குறைபாடுகளால் அவஸ்தைப்படுவதால், இந்த ராசிக்காரர்கள் ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். பிரட் இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஃபாஸ்ட் புட் மற்றும் பானங்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் எடையைப் பற்றி கவலைக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு இயற்கையாகவே மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும். எனவே இவர்கள் தினமும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும். மேலும் இவர்கள் நட்ஸ் மற்றும் நீரை அதிகம் உட்கொள்வது நல்லது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதையும் வேகமாக அடைய நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கொழுப்புமிக்க இறைச்சிகளை விரும்பமாட்டார்கள். இவர்களுக்கு வீட்டில் சமைத்த உணவுகள் தான் பிடிக்கும். இருப்பினும் இவர்கள் தினமும் நடைப்பயிற்சி மற்றும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் டயட்டை மேற்கொள்வதென்பது கடினம். இத்தகையவர்கள் டயட்டின் முதல் நாள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு எதையும் தனியாக செய்ய பிடிக்காது. உடற்பயிற்சி, டயட் என்று எதற்கு கூட்டாளி இருந்தால் தான் செய்வார்கள். இவர்கள் தயிர், மீன், சாதம், சூப் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அதிக அக்கறை காண்பிப்பதால், இவர்கள் சில நேரங்கள் உணவைக் கூட தவிர்ப்பார்கள். இது தான் இந்த ராசிக்காரர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. இந்த ராசிக்காரர்கள் டயட்டில் இருந்தால், காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் மற்றும் மற்ற வேளைகளில் சாப்பிடும் போது கீரைகள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சீஸ், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் டயட்டில் இருக்க விரும்பமாட்டார்கள். இதனால் தங்கள் உயரத்தை விட சற்று அதிகமான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மிட்டாய், இனிப்பு பலகாரங்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். இவர்கள் டயட்டில் இருந்தால், காய்கறிகள், சாலட், பூண்டு மற்றும் வைட்டமின் சி உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இந்த ராசிக்காரர்கள் உடற்பயிற்சியை அதிகம் செய்வதோடு, இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் வேகமாக தூங்கவும் செல்ல வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். மேலும் டயட்டின் போது தாம் சாப்பிடும் உணவை தாங்களே தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியமான எடையுடன் இருக்க காய்கறி சூப், சூரை மீன் மற்றும் நற்பதமான காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இத்தகையவர்கள் எப்போதாவது சிறிது இனிப்புக்களை சாப்பிடலாம். ஆனால் பாஸ்தா, சாஸ் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு டயட் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இவர்கள் குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இவர்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரியாது. கண்டதை சாப்பிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சிப்ஸ், ஆல்கஹால் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் உடல் பருமனால் அவஸ்தைப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொண்டு உடலை சுத்தம் செய்யும் சிகிச்சைகளை அடிக்கடி முயற்சிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு டயட் பிடிக்காது. எனவே நண்பர்களை தங்களுடன் சேர்த்து போட்டி வைத்துக் கொண்டு, டயட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Lose Weight According To Your Horoscope Sign?

Your zodiac sign can tell you how you can lose weight. Read this article and find out if you can easily lose some pounds or you will have to make some effort.
Story first published: Thursday, October 27, 2016, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter