For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தில் இருந்து விடுபட நீங்கள் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்???

|

தோல்வி, நஷ்டம், எதிர்பார்த்த காரியம் நடக்காவிடில், எதிர்பாராத சம்பவங்கள் என நமது மனநிலையை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றான. இதோடு சேர்ந்து கோவமும், பயமும் என இவையெல்லாம் தான் ஓர் நபருக்கு மன அழுத்தம் அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது.

தமிழ் பிரபலங்களும்... அவர்களின் பிட்னஸ் மந்திரங்களும்....

இவ்வாறு அதிகரிக்கும் மன அழுத்தத்தை குறைக்க அல்லது சரிசெய்ய உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது? ஏன் நாம் மன அழுத்தத்தை குறைக்க கட்டாயம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என இனிப் பார்க்கலாம்...

நாற்பது வயதை நெருங்க, நெருங்க சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவனத்தை ஒருமுகப்படுத்துதல்

கவனத்தை ஒருமுகப்படுத்துதல்

உடற்பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும். தேவரியற்ற சிந்தனைகள், மனச் சிதறல்கள் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இதை சரிசெய்ய உடற்பயிற்சி நல்ல பயன்தரும்.

பயத்தை போக்கும் மருந்து

பயத்தை போக்கும் மருந்து

ஒரு நபர் தைரியமாக இருக்க மனதின் பலம் மட்டும் போதாது, உடல் பலமும் தேவை. உடல் பலம் உங்கள் மன பலத்தையும் அதிகரிக்க உதவும். இது பயத்தை போக்க சிறந்த முறையில் உதவும்.

உடலும், மனதும் சமநிலை படுத்த

உடலும், மனதும் சமநிலை படுத்த

உடற்பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலை படுத்த உதவும் கருவி. உங்கள் உடலும், மனதும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.

தன்னம்பிக்கை உயர்த்தும்

தன்னம்பிக்கை உயர்த்தும்

தவறாது உடற்பயிற்சி செய்தல் அல்லது, உடற்திறனை அதிகரித்தல் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்த உதவும். ஓர் நபரின் தன்னம்பிக்கை உயர்ந்தாலே, அவரது பயமும், மன அழுத்தமும் குறைந்துவிடும்.

உங்களை நீங்களே விரும்புதல்

உங்களை நீங்களே விரும்புதல்

தைரியம் அதிகரித்தல், தன்னம்பிக்கை வளர்த்தல் போன்றவை, உங்களை நீங்களே அதிகம் விரும்ப உதவும். உங்களுக்கு தெரியுமா? யார் ஒருவர் தன்னை தானே விரும்புகிறாரோ, அவர் மற்றவரை விட அதிகம் வெற்றிப் பெறுகிறார். இந்த தன்மை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உணர்வுகளை கட்டுப்படுத்த உதவும்

உணர்வுகளை கட்டுப்படுத்த உதவும்

உடற்பயிற்சி செய்தல் உணர்வுகளை கட்டுப்படுத்த உதவும். நீங்கள் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டாலே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

படபடப்பு குறையும்

படபடப்பு குறையும்

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் உங்கள் சுவாசத்தை சீராக்கும். இதனால் அடிக்கடி படபடப்பு ஏற்படுவது குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Need Fitness To Fight Depression

Why You Need Fitness To Fight Depression, Take a look.
Desktop Bottom Promotion