ஒரு மாதம் மதுவை கைவிட்டால் இவரை போல அதிசயிக்கும் வகையில் மாற்றத்தை காணலாம்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் நமது உடல்நிலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு செயற்கை சர்க்கரை மற்றும் மதுவும் தான் மாபெரும் காரணமாக இருக்கிறது. இதோடு சேர்ந்து, நாம் இப்போது மாடர்னாக நினைத்து சாப்பிட்டு வரும் பதப்படுத்தி விற்கப்படும் பிட்சா, பர்கர் போன்ற உணவுகள்.

டச்சு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென தனது டயட்டில் இருந்து மது, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்ததன் காரணமாக இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு அவரது உடல்நிலையில் மற்றம் கண்டுள்ளார். அதைப் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டச்சு நாட்டை சேர்ந்த நபர்

டச்சு நாட்டை சேர்ந்த நபர்

சாச்சா (Sacha Harland), என்பவர் டச்சு நாட்டை சேர்ந்தவர். இவர் திடீரென ஒரு மாதத்திற்கு மதுவையும், சர்க்கரையையும் தனது டயட்டில் இருந்து ஓதிக்கிவிடுவது என்று முடிவு செய்தார். இந்த முயற்சியினால் இவருக்கு ஏற்பட்ட மாற்றம் இவரே எதிர்பாராதது.

Image Courtesy

எதிர்பாராத மாற்றம்

எதிர்பாராத மாற்றம்

டயட்டில் இருந்து சர்க்கரை மற்றும் ஆல்கஹாலை ஒதுக்கியதன் பயனாக, ஒரே மாதத்தில் 10 பவுண்டு எடை குறைந்துள்ளது, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து என அனைத்தும் குறைந்துவிட்டது சாச்சாவிற்கு.

Image Courtesy

உட்கொண்ட உணவுகள்

உட்கொண்ட உணவுகள்

இந்த ஒரு மாதத்தில் இவர் தனது டயட்டில் சேர்த்துக் கொண்ட உணவுகள்: ஃபிரஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ், முட்டைகள், மீன் மற்றும் தயிர்.

தவிர்த்த உணவுகள்

தவிர்த்த உணவுகள்

இந்த ஒரு மாதத்தில் சாச்சா தனது டயட்டில் இருந்து ஒதுக்கிய உணவுகள்: பிட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீர், ஒயின் போன்ற மதுபானங்கள், நொறுக்குத்தீனிகள், சாக்லேட் மற்றும் பாப் கார்ன்.

ஒரு மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

உடல் எடை முன்பு 81 கிலோ, இப்போது 76 கிலோ ; உடலில் இருந்து கொழுப்பு முன்பு 15.5%, இப்போது 14.2% ; இரத்த அழுத்தம் முன்பு 135/75, இப்போது 125/75 ; கொலஸ்ட்ரால் முன்பு 4.6 mmol/L, இப்போது 4.0 mmol/L என்ற வகையில் மாற்றங்களை தனது உடலில் கண்டிருக்கிறார்.

Image Courtesy

காலை உணவு

காலை உணவு

பெரும்பாலும் தனது காலை உணவில் ஓட்ஸ் மீல்ஸ், பழங்கள், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் காபி போன்றவற்றை உட்கொண்டு வந்திருக்கிறார்.

மதிய உணவு

மதிய உணவு

பீன்ஸ், வேகவைத்த காய்கறிகள், ஆலிவ் ஆயில் கொண்டு சமைக்கப்பட்ட வெஜ் சாலட், மீன், சிக்கன், போன்றவற்றை மதிய உணவில் சுழற்சி முறையில் உட்கொண்டு வந்தாராம்.

இரவு உணவு

இரவு உணவு

வால்நட், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மட்டுமே இரவு உணவாக எடுத்து வந்திருக்கிறார் சாச்சா. மது மற்றும் சர்க்கரையை குறைத்தது , மேலும் உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது தான் சாச்சாவின் உடல்நிலையில் அதிசயிக்கத்தக்க வகையில் மாற்றியுள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இதுப் போக, ஜெஸிக்கா கால் எனும் நபரின் பயிற்சியின் கீழ், சீரான முறையில் உடற்பயிற்சியும் செய்து வந்துள்ளார் சாச்சா. இவை எல்லாம் தான் இன்று சாச்சாவை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைத்துள்ளது. ஒரே மாதத்தில் உடலின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைத்து சீரான அளவிற்கு கொண்டுவருவது மிகவும் கடினமான ஒன்று தான். அதை முடித்து காட்டியுள்ளார் டச்சு நாட்டை சேர்ந்த சாச்சா.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens To Your Body After Giving Up Alcohol For A Month

Here we have shared an experience of a person who give up alcohol and sugar for a month and what happened to him, in tamil. take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter