டி.என்.ஏ-வை பற்றி தெரிந்துகொண்டால், உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்!!

Posted By: Staff
Subscribe to Boldsky

முப்பது வயதை கடக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் பெரும் தடங்கலாக இருப்பது இந்த உடல் எடை பிரச்சனை தான். வருடா, வருடம் தங்களது உடைகளை மாற்றுவதற்கே இவர்களது நேரம் சரியாக இருக்கும். இது போக, உடல் எடையின் காரணமாக கேலி, கிண்டல் போன்றவற்றால், மன அழுத்தம் இன்னொரு பக்கம் அதிகரிக்கும். இது, இதய நோயில் இருந்து அனைத்து நோய்களையும் கொண்டு வந்துவிடும்.

Listen To Your DNA To Help With Weight Loss

நீங்கள் சாதாரணமாக டயட்டை பின்பற்றி உடல் எடையை குறைப்பதை விட மூன்று மடங்கிற்கும் அதிகமாக, உங்கள் டி.என்.ஏ-வை அறிந்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும்.

நமது உடலானது, ஊட்டச்சத்துகளை உள்வாங்கி உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த செயல்பாட்டில் நமது டி.என்.ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மரபணு பற்றி நாம் தெரிந்துக் கொள்வதால், நமது உடலுக்கு எது தேவை, எது தேவையில்லை என சரியாக கண்டறிந்து தேவையான ஊட்டச்சத்துகள் எடுத்துக் கொண்டு உடலை பராமரிக்க முடியும்.

உலகில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு எது தேவை என்பதை அறியாமலேயே ஊட்டச்சத்துகளை உட்கொண்டு வருகிறார்கள். உண்மையில் நமது வளர்சிதை மாற்றத்திற்கு எது தேவை என அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். டி.என்.ஏ-வை பற்றி தெரிந்துக் கொள்வதால், நம் உடலுக்கு எந்த போஷாக்கு தேவை என அறிந்து நாம் உட்கொள்ள முடியும். இதனால், தேவையற்றதை ஒதுக்கி, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

டி.என்.ஏ-வை பரிசோதனை செய்துக் கொள்வதால், உங்கள் மரபணுவின் முகவரியை கண்டறிந்து, உங்கள் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை எது பாதிக்கிறது, எதனால் உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது போன்றவற்றை கண்டறியலாம். இதன் மூலம், எளிதாக உங்களது உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இந்த டி.என்.ஏ பரிசோதனையின் மூலம், ஒவ்வொரு தனி நபருக்கும் ஏற்றவாறு சரியான முறையில் சீரான உடல் எடை குறைப்பை மிக விரைவாக செய்ய முடியும் என கூறப்படுகிறது. அனைத்து டயட்டும், பயிற்சியும், அனைத்து உடலுக்கும் ஒரே மாதிரியான முடிவுகளை தராது என்பது தான் உண்மை. சிலருக்கு நல்ல பலனும், சிலருக்கு சராசரியான பலனும் தான் தரும். இதற்கான ஒரே தீர்வு டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் உடல் எடையைக் குறைப்பது தான்.

ஒவ்வொருவரின் மரபணுவும் தனித்தன்மை கொண்டது. இது அறிவியல் பூர்வமான உண்மை. சரியான பயன்தரவில்லை என்பதற்காக நாம் நமது மரபணுவை மாற்றிக்கொள்ள முடியாது, பயிற்சியை தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

Listen To Your DNA To Help With Weight Loss

VLCC, உடல் எடை குறிப்பிற்கு மிகவும் பிரபலமான பிராண்ட். இங்கு புதியதாக டி.என்.ஏ ஸ்லிம் பயிற்சி ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ஈடுபடுவதால் நீங்கள் விரைவாக உங்களது அதிகப்படியான உடல் எடையை குறைக்க முடியும். மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://www.vlccwellness.com/India/DNA-Fit/

English summary

Listen To Your DNA To Help With Weight Loss

VLCC, a well-known brand in slimming, has introduced VLCC DNA Slim programme, VLCC DNA Slim helps in customizing the weight loss plan for you.
Story first published: Friday, August 7, 2015, 16:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter