Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
வலிமையான உடல் பெற தாய்ப்பால் குடிக்கும் ஆண்கள்!
ஒவ்வொரு ஆணுக்கும் ரித்திக் ரோஷன், சூர்யா, ஷாருக்கான் போன்று உடல் நன்கு அழகாக கட்டமைப்புடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல ஆண்களும் ஜிம் சென்று உடலை வலிமைப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, தசைகள் வலிமை பெறவும், அதன் வளர்ச்சிக்கும் புரோட்டீன் பவுடர், புரோட்டீன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள்.
ஆனால் சமீபத்திய செய்தி ஒன்றில், மேலைநாட்டு ஆண்கள் தங்களின் உடல் தசைகளை வளர்க்கவும், அதன் வலிமையை அதிகரிக்கவும் தாய்ப்பால் குடிப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அதில் உள்ள அளவுக்கு அதிகமான புரோட்டீன் என்றும் சொல்கின்றனராம்.

புரோட்டீன் அதிகம்
பசும் பாலை விட தாய்ப்பாலில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால், இதனை குடிப்பதன் மூலம், உடல் வலிமைப் பெறுவதோடு, தசைகள் நன்கு வளர்ச்சி பெற்று, சிக்ஸ் பேக்கை எளிதில் வைக்கலாம் என்று நம்புகின்றனர்.

தாய்ப்பால் கிடைக்கும் இடம்
மேலைநாட்டினருக்காகவே ஆன்லைனில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுகிறது. ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலின் விலையானது ரூ.619 என விற்கப்படுகிறது. விலை சற்று அதிகம் இருந்தாலும், மேலைநாட்டு ஆண்கள் தங்களின் உடல் தசைகளை வளர்ப்பதற்கு, அதனை வாங்கிப் பகுகுகின்றனர்.

உண்மையில் ஒரு கப் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள்
2.5 கிராம் புரோட்டீன்
10.8 கிராம் கொழுப்பு
17 கிராம் கார்போஹைட்ரேட்
172 கலோரிகள்

ஒரு கப் பசும்பாலில் உள்ள சத்துக்கள்
7.9 கிராம் புரோட்டீன்
7.9 கிராம் கொழுப்பு
11 கிராம் கார்போஹைட்ரேட்
146 கலோரிகள்

உடற்கூறு நிபுணர்களின் கருத்து
இந்த செயலை உடற்கூறு நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன தான் தாய்ப்பால் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அது குழந்தைகளுக்கு தான் சரியானதாக இருக்குமே தவிர, ஆண்களின் உடல் தசைகளை வளர்ப்பதற்காக அல்ல. மேலும் உடல் தசைகள் நன்கு வலிமையுடன் வளர்ச்சி பெற எத்தனையோ உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அவற்றை சரியாக உட்கொண்டு வந்தாலே, உடல் தசைகளின் வளர்ச்சியைக் காணலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
