பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனின் பாடி பில்டிங் டிப்ஸ்!!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய பிரபலங்களில் எத்தனை பேர் சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும், ஹ்ரித்திக் ரோஷனைப் போல உடற்கட்டை பேணிக்காப்பது என்பது அரிதானது தான். மற்றவர்களை விட சிறந்த முறையில் சிக்ஸ் பேக்கை கச்சிதமாக வைத்திருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இதற்கு ஓர் சிறந்த சான்று "க்ரிஷ் 3" திரைப்படம்.

'தி ராக்' போல உடற்கட்டு வேண்டுமா? அப்போ அவரோட ஃபிட்னஸ் ரகசியத்த தெரிஞ்சுக்குங்க!!!

அதுமட்டுமின்றி, வித விதமாக சிக்ஸ் பேக்கும், உடற்கட்டும் வைத்த ஒரு இந்திய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான். ஹ்ரித்திக் மட்டும் எப்படி இவ்வாறு உடற்கட்டை பேணிக் காக்கிறார் என பலரும் வியந்திருக்கின்றனர். இவரது உடற்கட்டு இரகசியம் என்னவாக இருக்கும், அப்படி என்ன தான் இந்த மனுஷன் செய்கிறார் என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா...

சிக்ஸ் பேக் வைப்பதற்கு உதவியாக இருக்கும் உடற்பயிற்சிகள்!!!

அவரது உடற்கட்டு இரகசியத்தைப் பற்றியும், அதற்கான டிப்ஸும் ஹ்ரித்திக் ரோஷனே கூறியிருக்கிறார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெவ்வேறு உடற்பயிற்சிகள்...

வெவ்வேறு உடற்பயிற்சிகள்...

ஒரே மாதிரியான பயிற்சிகளைப் பின் தொடராமல், உடல் நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதிக்கும் வேறு வேறு விதமான பயிற்சிகளை செய்வாராம்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

நல்ல ஆரோக்கியத்திற்கும், உடல்நலத்திற்கும் ஆழமான, அமைதியான உறக்கம் தேவை என்கிறார் ஹ்ரித்திக்.

குறைவான எடை

குறைவான எடை

உங்கள் உடற்கட்டு கவர்ச்சியாகவும், வசீகரமாகவும் இருக்க குறைவான எடையை தூக்கி பயிற்சி செய்ய வேண்டுமாம்.

ஸ்ட்ரெச்சிங்

ஸ்ட்ரெச்சிங்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வது அவசியம்.

முயற்சிகள்

முயற்சிகள்

நல்ல உடற்கட்டு பெற, தொடர்ந்து முயற்சிகள் செய்வது அவசியம் மற்றும் சீரான முறையில் பயிற்சிகளை பின் தொடர வேண்டும். ஒரு வாரம் சென்று விட்டு ஒரு வாரம் இடைவெளி விடுவது, காலம் தவறி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

சிக்ஸ்பேக்

சிக்ஸ்பேக்

சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் முதலில் நல்ல ஆரோக்கியமான உடலை அமைத்துக் கொண்டு, அதற்கு பிறகு முயற்சி செய்யவும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள், உடற்கட்டை மேம்படுத்த மன வலிமையையும் தேவை என்கிறார் ஹ்ரித்திக்

டயட், ஃபிட்னஸ்

டயட், ஃபிட்னஸ்

நல்ல உறுதியான உடற்கட்டுக்கு, டயட் மற்றும் ஃபிட்னஸ் 90:10 என்ற ரேஷியோவில் (Ratio) இருக்க வேண்டும்.

சோடியம்

சோடியம்

உங்கள் உணவில் சோடியம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை

சர்க்கரை

முடிந்த வரை உங்களது உணவில் சர்க்கரையை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது.

அர்ப்பணிப்பு மற்றும் உறுதி

அர்ப்பணிப்பு மற்றும் உறுதி

நல்ல உடற்கட்டு வேண்டும் என்பவர்கள் முழு அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை பின் தொடர வேண்டும். மற்றும் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார் ஹ்ரித்திக் ரோஷன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Super Star Hrithik Roshan Body Building Tips

Do you know about the body building tips of bollywood super star Hrithik Roshan? read here.
Story first published: Wednesday, April 15, 2015, 10:56 [IST]
Subscribe Newsletter