For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட்டில் இருக்கும் போது உணவில் சேர்க்கக்கூடாதவைகள்!!!

By Maha
|

டயட்டில் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் டயட்டில் இருக்கும் போது அனைத்து உணவுகளையும் உட்கொள்ள முடியாத நிலையினால், உடலுக்கு அதிக அளவில் சத்துக்கள் கிடைக்காது. குறிப்பாக உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்தால், அது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.

மேலும் இந்த உணவுகள் அனைத்தும் பெரும்பாலானோரது விருப்பமாக இருக்கும். இருப்பினும் இந்த உணவுகளில் கவனமாக இருந்தால், நிச்சயம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளில் சில உடலுக்கு கெடுதலை விளைவிக்கக்கூடியவை. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட்

பிரட்

பிரட்டில் வெள்ளை பிரட்டை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கோதுமை பிரட்டை விட, அதிக அளவில் கலோரிகள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடல் எடை இன்னும் அதிகரிக்கும்.

இனிப்புகள்

இனிப்புகள்

உலகில் பஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புக்களை விரும்பாதோர் யாரும் இருக்கமாட்டார்கள். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்தால், அது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

செரில்

செரில்

இன்றைய அவசர உலகில் இனிப்பு கலந்த பல்வேறு செரில்கள் விற்கப்படுகின்றன. இத்தகைய இனிப்பு கலந்த செரில்களை அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்று காலை வேளையில் உணவாக எடுத்துக் கொண்டால், பின் அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.

எண்ணெய்

எண்ணெய்

உணவில் எண்ணெயை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும். அதற்காக எண்ணெயை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வெஜிடேபிள் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

டயட்டில் இருக்கும் போது, பால் பொருட்களை தொடவே கூடாது. அதிலும் ஸ்கிம் செய்யப்படாத பால் மிகவும் ஆபத்தானது. எனவே உடல எடை குறைய வேண்டுமானால், ஸ்கிம் செய்யப்பட்டாத பால் சேர்க்காமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் நன்கு ஸ்கிம் செய்யப்பட்ட பாலை அருந்தலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உலகில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. ஆனால் இந்த உருளைக்கிழங்கை உடல் எடையை குறைக்க நினைக்கும் போது சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரித்துவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் வாழைப்பழத்தை டயட்டில் உள்ளோர் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அதில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால் தான், இது உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கிறது. அதே சமயம் அதிக அளவில் சேர்த்தால், அதுவே உடல் எடையை அதிகரிக்கும்.

சோடா

சோடா

கார்போனேட்டட் பானங்களை அருந்தினால், அது உடல் எடையை அதிகரிப்பதோடு, இதயத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே டயட்டில் இருக்கும் போது, இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

தற்போது ஜங்க் உணவுகள் தான் ஆங்காங்கு விற்கப்படுகின்றன. மேலும் அந்த உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்கு பல்வேறு சுவையூட்டும் பொருட்கள் சேர்ப்பதோடு, எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால், அவை உடல் நலத்திற்கு கெடுதலை விளைவிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை டயட்டில் இருப்போர் அறவே சாப்பிடக்கூடாது. வேண்டுமெனில் புதிதாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Dieters Should Avoid

For those of you who are on a weight loss diet plan, take a look at these fattening foods which should be avoided at any cost. Take a look at these foods dieters should avoid.
Story first published: Monday, November 11, 2013, 15:24 [IST]
Desktop Bottom Promotion