Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
உடல் எடையை குறைக்க உதவும் கார்போஹைட்ரேட் உணவுகள்!!!
உடலை நன்கு ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நல்ல ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தவறான உணவுகளை உட்கொள்வதால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பின் அதனைக் கரைப்பதற்கு ஜிம் சென்று கரைக்க முயற்சிக்கிறோம். இருப்பினும் எந்த பலனும் இல்லாமல் இருக்கும். ஆகவே பலர் உடல் எடையை குறைப்பதற்கு உதவும் மாஸ்டர் கொண்டு முயற்சி செய்வார்கள். அந்த ஜிம் மாஸ்டர் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.
ஆனால் நிபுணர்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை எரிப்பதற்கு, உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது என்று சொல்கிறார்கள். எனவே உடல் எடையை குறைப்பதற்கு முயலும் போது, கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது உட்கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான், உடல் நன்கு பிட்டாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.
அதிலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், நிச்சயம் உடல் ஆரோக்கியமான முறையில் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும்.

பார்லி
ஒரு கப் பார்லியில் 93 கலோரிகள் மற்றம் 22 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை ஒரு கப் பார்லியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.

பச்சைப் பட்டாணி
உணவுகளில் பச்சைப் பட்டாணியை தவறாமல் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் 13 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 67 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், இது நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்
நிபுணர்கள், கோதுமை பிரட்டை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால், அது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்கின்றனர். அதுமட்டுமின்றி, இதில் 30 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 160 கலோரிகள் தான் இருக்கிறது.

பீன்ஸ்
பீன்ஸில் 20 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 32 கிராம் கலோரிகள் இருப்பதோடு, அதில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை ஒரு கப் பீன்ஸை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும்.

பாப் கார்ன்
உப்பு சேர்க்கப்பட்ட பாப் கார்னில் 19 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டா, இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் பார்த்துக் கொள்ளும்.

ஓட்ஸ்
ஓட்ஸில் நல்ல ஆரோக்கியமான அளவில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதிலும் ஒரு கப் ஓட்ஸில் 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 153 கலோரிகள் உள்ளது. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதுமானது.

தினை
தினையில் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளது என்று நினைத்து, அதனை சாப்பிடாமல் இருந்தால் அது தான் தவறு. ஆனால் ஒரு கப் தினையை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ கிடைக்கும். மேலும் இதில் கார்போஹட்ரேட்டும் அளவாகத் தான் உள்ளது.

கைக்குத்தல் அரிசி
பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க முயலும் போது, சாதம் சாப்பிடுவதை அறவே தவிர்ப்பார்கள். ஆனால் கைக்குத்தல் அரிசியை வாரத்திற்கு ஒரு முறை உட்கொண்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியமான அளவில் கார்போஹைட்ரேட் கிடைக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இதனை முற்றிலும் தவிர்ப்பார்கள். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அளவாக கார்போர்ஹைட்ரேட் இருப்பதோடு, பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

டோஃபு
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, டோஃபுவை வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் டோஃபுவில் மூளை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தேவையான 45 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.



Click it and Unblock the Notifications