Latest Updates
-
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஹார்மோன்களை கொஞ்சம் கவனியுங்க !

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன் சுரப்பு சரியாக இல்லாதவிட்டால் தைராய்டு பிரச்சினை, வளர்ச்சியில் சிக்கல், செக்ஸ் வாழ்க்கையில் மனக்குழப்பம், பெண்களின் மாதவிடாய் சுழற்றியில் பிரச்சினை போன்றவை ஏற்படுகின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் ஹார்மோன்களின் சுரப்பினை சமநிலையில் வைத்திருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது. உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை "ஐசோபிளாவின்' என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.
ஒமேகா - 3 கொழுப்பு நிறைந்த நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும். கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன. இதுவே ஹார்மோன் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் பழங்களை உட்கொள்வதால் ஹார்மோன் சுரப்பை சமநிலை படுத்தலாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications