For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!

By Maha
|

இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆனாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.

அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.அந்த ஆய்வில் எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

Lemon For Kidney Stone Treatment

பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது. அதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது.

அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள்...

கால்சியம் வகை கற்கள் : அந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்து முதுகு வலி, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவையே

யூரிக் ஆசிட் வகை கற்கள் : இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும்.இதனால் வயிற்றில் வலி ஏற்படும்.

மான் கொம்பு கற்கள் : இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

English summary

lemon for kidney stone treatment | சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!

The kidneys are one of the most important organs in the human body, as they help to detox and filter out impurities from the blood, as well as waste products in our urine. Kidney stones form when the kidneys are not able to process these toxins efficiently. In this case, a crystallization of unprocessed minerals build up, causing pain, stones and possible blockage of urine flow.
Desktop Bottom Promotion