For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

By Mayura Akilan
|

Home Remedis For Indigestion
நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.

அஜீரணத்தை போக்க

அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இஞ்சி, எலுமிச்சை

ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும். இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

சீரகம், பெருங்காயம்

ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம் ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம். ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த நீரும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வயிற்று உப்புசம்

ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம். இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது. கறிவேப்பிலை சாறும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஜீரணத்திற்கு உதவும்.

திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும். அரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

home remedies for indigestion | உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

Indigestion also known as dyspepsia is a term used to describe problems related to stomach pain, acidity, heartburn, gas or bloating and acid regurgitation. Indigestion could also lead to diarrhea and even vomiting. Home remedies for indigestion are natural and rarely have any side effects. They are also easy on the pocket and have more of a permanent cure.
Story first published: Monday, April 2, 2012, 10:45 [IST]
Desktop Bottom Promotion